For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபட சாப்பிட வேண்டிய பழங்கள்!

மலச்சிக்கல் பிரச்சனைக்கு பழங்கள் நல்ல பலனை உடனடியாக தருகின்றன. மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையை சரிசெய்வதற்கு பழங்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

|

பரபரப்பான வாழ்க்கை முறையில், பெரும்பாலான மக்களால் தங்கள் ஆரோக்கியத்தை கவனிப்பதற்கு போதுமான நேரத்தை செலவிட முடியவில்லை. ஆரோக்கியமற்ற மற்றும் ஒழுங்கற்ற உணவுகள் மற்றும் பிஸியான வாழ்க்கை முறை போன்றவை செரிமான மண்டலத்தை படுமோசமாக பாதிக்கின்றன. தற்போது ஏராளமான மக்கள் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். இதன் விளைவாக மலச்சிக்கலால் அவதிப்பட்டும் வருகிறார்கள்.

Fruits That Are Effective In Removing Constipation

வெறும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிடுவதால் மட்டுமின்றி, போதுமான தூக்கமில்லாமை மற்றும் உடல் உழைப்பு இல்லாமை போன்றவற்றாலும் மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனை ஏற்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே போதுமான கவனிப்பு கொடுத்து, அதை சரிசெய்ய முயற்சி செய்யாமல் இருந்தால், பின் அவை கடுமையான நோயாக மாறிவிடும். ஆகவே நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படுவது போன்று தெரிந்தால், உடனே அதற்கான காரணங்களைத் தெரிந்து, சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவது என்ன?

ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவது என்ன?

இந்திய நாட்டின் பிரபல இயற்கை மருத்துவ முறை தான் ஆயுர்வேதம். அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை வழக்கமான யோகா மற்றும் ஆரோக்கியமான உணவுகளின் மூலம் சரிசெய்யலாம் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனைக்கு பழங்கள் நல்ல பலனை உடனடியாக தருகின்றன. மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையை சரிசெய்வதற்கு பழங்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும். இப்போது எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது என்பதைக் காண்போம்.

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்

* உணவில் போதுமான நார்ச்சத்து இல்லாமை

* மைதாவால் ஆன எண்ணெயில் வறுத்த காரமான உணவுகளை உண்பது

* குறைவான அளவு நீரைக் குடிப்பது

* சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது

* இரவு தாமதமாக உண்பது

* காபி, டீ, புகையிலை அல்லது சிரெட்டுகளை அதிகம் எடுப்பது

இப்போது மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க சாப்பிட வேண்டிய பழங்கள் என்னவென்பதைக் காண்போம்.

பப்பாளி

பப்பாளி

பப்பாளி மலச்சிக்கலைப் போக்குவதில் சிறந்தது. ஏனெனில் இதில் கணிசமான அளவு வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம் ஃபோலேட், வைட்டமின் ஈ, வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவை அதிகம் உள்ளன. பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடலில் உள்ள நச்சுக்கள் தினமும் சரியாக சுத்தம் செய்யப்பட்டு மலச்சிக்கல் பிரச்சனையே ஏற்படாது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள சார்பிடால் என்னும் பொருள் மலச்சிக்கலை நீக்கி, வயிற்றை நன்கு சுத்தம் செய்கிறது. அதற்கு தினமும் ஒரு ஆப்பிளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். குறிப்பாக தோலுடன் ஆப்பிளை சாப்பிட வேண்டும்.

திராட்சை

திராட்சை

திராட்சையும் மலச்சிக்கலைப் போக்கவல்லது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவை இதில் ஏராளமாக உள்ளன. இது தவிர திராட்சையில் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்டுகளும் அதிக அளவில் உள்ளன. திராட்சையை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

பேரிக்காய்

பேரிக்காய்

கோடைக்காலத்தில் பேரிக்காய் அதிகளவில் கிடைக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பேரிக்காயில் உள்ள பெக்டின் என்னும் தனிமம் வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. நீங்கள் உங்கள் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், பேரிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள் அல்லது பேரிக்காய் ஜூஸ் குடியுங்கள்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது மலத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள நரிங்கெனின் என்ற ஃபிளாவனாய்டு மலமிளக்கியாக செயல்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே நீங்கள் ஆரஞ்சு பழத்தைப் பார்த்தால், அதை வாங்கி தினமும் தவறாமல் சாப்பிடுங்கள். ஆரஞ்சு பழத்தை சாறு பிழிந்து சாப்பிடுவதை விட, அப்படியே பழமாக சாப்பிடுவது தான் மிகவும் நல்லது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது வாழைப்பழம். இந்த வாழைப்பழம் மலம் வெளியேறுவதை எளிதாக்குவதன் மூலம், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும். எனவே தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

அத்திப்பழம் வருடம் முழுவதும் கிடைக்கும் பழமல்ல. எனவே இந்த பழம் கிடைக்கும் போது அதை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். ஏனென்றால், அத்திப்பழத்தில் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமான மண்டலத்தைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fruits That Are Effective In Removing Constipation

Here are some fruits that are effective in removing constipation. Read on...
Story first published: Tuesday, November 2, 2021, 18:44 [IST]
Desktop Bottom Promotion