Just In
- 35 min ago
குரு-சனி உருவாக்கும் அகண்ட சாம்ராஜ்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 55 min ago
நீங்க டீ அல்லது காபியை சூடா குடிக்கிறீங்களா? அப்ப உங்களுக்கு இந்த புற்றுநோய் வர அதிக வாய்பிருக்காம்!
- 1 hr ago
சாணக்கிய நீதியின் படி உங்க வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் கெட்ட நேரம் உங்களை நெருங்கிவிட்டதாம்...ஜாக்கிரதை
- 2 hrs ago
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
Don't Miss
- Finance
மோடி அரசின் அறிவிப்பால் 1 கோடி பேருக்கு லாபம்.. யாருக்கு இந்த ஜாக்பாட்..!
- Movies
விடுதலை ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: உங்கிட்ட இருந்து எதாவது வாங்கணும்ல... தனுஷை வம்பிழுத்த இளையராஜா
- News
"இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும்.." மெசேஜ் வந்தால் என்ன செய்யணும்! புதுவித மோசடி.. நம்பாதீங்க
- Automobiles
இப்படியொரு சூப்பரான ஆடி கார் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கவே இல்ல!! ரூ.2 லட்சத்தில் புக் பண்ணிடலாம்!
- Sports
தரமான செய்கை இருக்கு.. ஹர்பஜனின் முக்கிய சாதனையை உடைக்கும் அஸ்வின்.. ஆஸி, தொடரில் பெரும் வாய்ப்பு!
- Technology
டிஜிட்டல் கேமராக்களுக்கு வேலை இருக்காது போலயே: சோனி கேமராவுடன் அறிமுகமான 2 புதிய Vivo போன்கள்.!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தைராய்டு பிரச்சனை இருக்கா? உடல் எடையை குறைக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க..
நமது கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கும் பட்டாம்பூச்சி வடிவத்திலான ஒரு சுரப்பி தான் தைராய்டு. இந்த தைராய்டு சுரப்பி உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் தற்போது நிறைய பேர் தைராய்டு சுரப்பியில் பிரச்சனையை கொண்டுள்ளார்கள். தைராய்டு சுரப்பியில் பிரச்சனை இருந்தால், அது வெளிக்காட்டும் முதல் அறிகுறி திடீரென்று உடல் எடை அதிகரிப்பது. தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் போது, அது உடலின் செயல்பாடுகளை மெதுவாக்கும். எனவே தைராய்டு பிரச்சனை இருந்தால், உடனே மருத்துவரை அணுகி, அதற்கான மருந்து மாத்திரைகளை வாங்கி தவறாமல் போட வேண்டும்.
இதுதவிர தைராய்டு பிரச்சனையைக் கொண்டவர்கள், உடல் பருமனை குறைக்கவும் முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே தைராய்டு நோயாளிகள் உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், விரைவில் உடல் எடையைக் குறைத்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். இப்போது தைராய்டு நோயாளிகள் உடல் எடையைக் குறைக்க எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும் என்பதைக் காண்போம்.

அயோடின்
ஹைப்போ தைராய்டு பிரச்சனையானது உடலில் அயோடின் அளவு குறையும் போது ஏற்படுகிறது மற்றும் இந்நிலையில் தைராய்டு சுரப்பியால் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாது. இந்நிலையைக் கொண்டவர்கள் தான் உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள் அயோடின் உணவுகளை உண்பதன் மூலம் எடையை ஓரளவு குறைக்கலாம் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் எடையைக் குறைக்க அயோடின் அதிகம் நிறைந்த உணவுகளான அயோடின் உப்பு, கடல் உணவுகள், பால் பொருட்கள் மற்றும் முட்டைகள் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்
ஒருவரது உடல் எடை குறைய வேண்டுமானால், உடலில் செரிமானம் சிறப்பாக நடைபெற வேண்டும். ஒருவரது செரிமானம் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணும் போது, அது கலோரி உட்கொள்ளலைக் குறைக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வேகமாக உடலில் இருந்து வெளியேற்றும்.

வைட்டமின் டி உணவுகள்
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் டி முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே இந்த வைட்டமின் டி உடலில் குறைவாக இருக்கும் போது, அதை மேம்படுத்த முட்டைகள், கொழுப்புள்ள மீன்கள், ஆட்டு ஈரல், காளான்கள் போன்றவற்றை உண்வதோடு, தினமும் அதிகாலை சூரிய ஒளியில் சிறிது நேரம் நில்லுங்கள். இதுவும் ஒரு வகையில் உடல் எடையை குறைக்க உதவி புரியும்.

காப்பர் உணவுகள்
தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படுவதற்கும், உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தவும், காப்பர் மிகவும் இன்றியமையாதது. எனவே காப்பர் நிறைந்த உணவுகளான பாதாம், எள்ளு விதைகள் மற்றும் பருப்பு வகைகளை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
தைராய்டு பிரச்சனை கொண்டவர்கள் உடல் எடையைக் குறைக்க முயலும் போது, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தைராய்டு சுரப்பியின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஆகவே வால்நட்ஸ், சியா விகைள், ஆளி விதைகள் மற்றும் நெய் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பழங்கள்
பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை ப்ரீ ராடிக்கல்களால் தைராய்டு சுரப்பிக்கு ஏற்படும் சேதத்தைத் தடுத்து பாதுகாப்பதோடு, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி புரியும். எனவே தைராய்டு உள்ளவர்கள் எடையைக் குறைக்க ஆப்பிள், பெர்ரி பழங்கள், அவகேடோ பழங்கள் போன்றவற்றை அவ்வப்போது சேர்த்து வாருங்கள்.