For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில உணவுகள்!

சமீபத்தில் பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் எழுத்தாளருமான ருஜுதா திவேகர் இன்ஸ்டாகிராமில் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களுக்கான சில உணவுக் குறிப்புகளை பகிர்ந்து கொண்டார். கீழே அந்த உணவுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

கோவிட் வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதே சமயம் அதிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் சமமான அளவில் வளர்ந்து வருகிறது. ஆனால் கொரோனாவில் இருந்து மீண்டு குணமடைந்து வருபவர்கள் கடுமையான பலவீனம் மற்றும் சோம்பல் அறிகுறிகளை அனுபவித்து வருகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டுமானால், உடலுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்க வேண்டும். அதற்கு சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

Food Tips For People Recovering From COVID-19

சமீபத்தில் பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் எழுத்தாளருமான ருஜுதா திவேகர் இன்ஸ்டாகிராமில் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களுக்கான சில உணவுக் குறிப்புகளை பகிர்ந்து கொண்டார். கீழே அந்த உணவுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உங்கள் உணவிலும் சேர்த்துக் கொள்வதோடு, உங்களுக்கு தெரிந்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

MOST READ: மே மாசம் இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கப் போகுது... உங்களுக்கு எப்படி-ன்னு படிச்சு பாருங்க..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊற வைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சை

ஊற வைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சை

காலையில் எழுந்ததும் ஊற வைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சை சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்துகிறார். நட்ஸ்களை ஊற வைதது சாப்பிடும் போது, அது மெல்லுவதற்கு எளிதாக இருப்பதோடு, உடலால் எளிதில் உடைத்தெறிய வசதியாக இருக்கும். மேலும் பாதாமை ஊற வைத்து சாப்பிடுவதால், அது லிபேஸ் என்னும் நொதியை வெளியிடச் செய்து, கொழுப்புக்களை எளிதில் ஜீரணிக்க உதவும்.

ராகி தோசை

ராகி தோசை

கால்சியம் அதிகம் நிறைந்த ஓர் உணவுப் பொருள் தான் ராகி. இதில் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. காலை உணவின் போது ராகி தோசையை உட்கொள்வது, பலவீனமான செரிமான மண்டலத்தை கையாள உதவியாக இருக்கும் மற்றும் ராகியில் பாலிஃபீனால் என்னும் பொருள் உள்ளது. மேலும் ராகி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவுப் பொருள். ராகி கஞ்சியை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், அதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதோடு இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும்.

வெல்லம் மற்றும் நெய்

வெல்லம் மற்றும் நெய்

மதிய உணவிற்கு பின் வெல்லம் மற்றும் நெய் சாப்பிட வேண்டும். ஏனெனில் வெல்லம் மற்றும் நெய் இரண்டும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும் பணியை சிறப்பாக செய்யும். வெல்லத்தில் இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் சி அதிகம் உள்ளது. அதேப் போல் நெய்யில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் அதிகம் உள்ளது. அதோடு இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வலுவாக்கும் கால்சியம் மற்றும் வைட்டமின் கே சத்து அதிகமாக உள்ளது.

கிச்சடி

கிச்சடி

இரவு உணவாக கிச்சடி சாப்பிடுவது தான் நல்லது. ஏனெனில் இது உடலுக்கு பத்து அமினோ அமிலங்களை வழங்கும் ஒரு சூப்பர் உணவு. இது ஒரு முழுமையான புரோட்டீன் நிறைந்த உணவும் கூட. கிச்சடி செய்யும் போது, அத்துடன் காய்கறிகளை சேர்த்து செய்தால், உடலுக்கு வேண்டிய நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் கிடைக்கும். மேலும் கிச்சடியுடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொண்டால், அது உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்களை வழங்கும்.

தண்ணீர், சர்பத் மற்றும் மோர்

தண்ணீர், சர்பத் மற்றும் மோர்

இறுதியாக கட்டாயம் ஒருவர் பின்பற்ற வேண்டிய செயல், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். அதற்கு போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதோடு மட்டுமின்றி, சர்பத், மோர் போன்ற பானங்களையும் குடிக்க வேண்டும். இவை உடலில் நீர்ச்சத்தின் அளவை சமநிலையில் பராமரிக்க உதவுவதோடு, கோடையில் செரிமான செயல்பாடு மென்மையாக நடைபெற உதவி புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Food Tips For People Recovering From COVID-19

Here we shared some food tips for people recovering from COVID-19. Read on...
Desktop Bottom Promotion