Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
மறந்தும் பாலுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க...
பால் ஒரு பொதுவான மற்றும் அன்றாடம் உட்கொள்ளும் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இத்தகைய பாலை தனியாக உட்கொள்வதே சிறந்தது. ஒருசில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
நாம் பெரும்பாலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு ஊட்டச்சத்துக்களைப் பெறுவோம். ஆனால் சில உணவுகளை ஒன்றிணைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? மோசமான உணவு சேர்க்கைகள் வயிற்று வலி, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வுத் தொல்லை மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். ஒருவேளை இப்படியே ஒருவர் நீண்ட காலமாக மோசமான உணவுச் சேர்க்கைகளை உட்கொண்டு வந்தால், அது அரிப்பு, நாள்பட்ட செரிமான பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றை உண்டாக்கும்.

உணவு சேர்க்கைகள் பற்றி பேசும் போது, நாம் பெரும்பாலும் பாலுடன் பிற உணவுகளை சேர்த்து உட்கொள்வோம். பால் ஒரு பொதுவான மற்றும் அன்றாடம் உட்கொள்ளும் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இத்தகைய பாலை தனியாக உட்கொள்வதே சிறந்தது. ஒருசில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பால் ஒரு விலங்கு புரோட்டீன் மற்றும் இதை மற்ற புரோட்டீன் உணவுகளுடன் இணைத்து சாப்பிடக்கூடாது. கீழே பாலை எந்த உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

முட்டை, இறைச்சி மற்றும் மீன்
எப்போதுமே பாலை இறைச்சிகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. குறிப்பாக பாலை மீன் மற்றும் இறைச்சிகளுடன் சேர்த்து சாப்பிட்டால், அது வயிறு பாரம் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

புளிப்பான உணவுப் பொருட்கள்
எப்போதும் பாலை புளிப்பான அல்லது சிட்ரிக் அமிலம் நிறைந்த உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்களுடன் பாலை ஒன்றிணைத்து உட்கொள்ளவே கூடாது. பொதுவாக பால் செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். பால் மற்றும் எலுமிச்சை அல்லது பிற சிட்ரஸ் பழங்களை ஒன்றிணைத்து சாப்பிட்டால், பாலானது வயிற்றில் திரிந்துவிடும். இது வாய்வுத் தொல்லை மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழம் மற்றும் பாலை ஒன்றிணைத்து சாப்பிடுவது பொதுவானது தான். ஆனால் இந்த உணவு சேர்க்கை செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். உணவு செரிமானமாவதற்கு நீண்ட காலம் எடுக்கும் போது, அதனால் மிகுந்த களைப்பை உணரக்கூடும். ஒருவேளை நீங்கள் வாழைப்பழ மில்க் ஷேக் குடிக்க விரும்பினால், அதனுடன் ஒரு சிட்டிகை பட்டை தூள் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் செரிமானம் தடையின்றி சிறப்பாக நடக்கும்.

முலாம் பழம்
ஆயுர்வேதத்தின் படி, பால் ஒரு மலமிளக்கையாக செயல்படும் மற்றும் முலாம் பழம் டையூரிக் பண்புகளைக் கொண்டது. இவை இரண்டையும் ஒன்றாக எடுக்கும் போது, இவற்றின் செயல்பாடுகளில் மோதல் ஏற்படுகிறது. முதவில் முலாம் பழத்தை ஜீரணிக்கத் தேவையான வயிற்று அமிலங்கள் பாலை திரண்டு போகச் செய்து, இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

யோகர்ட்
யோகர்ட்டை பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. நொதிக்க வைக்கப்பட்ட பொருட்கள் எதையும் எப்போதும் பாலுடன் சேர்க்கக்கூடாது. ஏனெனில் இது உடலில் பல இடையூறுகளை ஏற்படுத்தி, வயிற்று பிரச்சனைகள், உடல்நலக் குறைவு, தொற்று நோய்கள் போன்றவற்றை உண்டாக்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது.

முள்ளங்கி
பால் ஒரு முழுமையான உணவு. இதை எப்போதும் மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. குறிப்பாக பாலை முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிட்டால், உடலினுள் வெப்பம் அதிகரிப்பதோடு, செரிமான செயல்முறையும் தாமதமாகும்.
எனவே பாலை எப்போதும் தனியாக உட்கொண்டு, அதன் சத்துக்கள் மற்றும் பலனைப் பெற முயலுங்கள்.



Click it and Unblock the Notifications