For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Cholesterol Reducing Foods: உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கணுமா? இந்த காய்கறிகளை அதிகமா சாப்பிடுங்க..

|

Cholesterol Reducing Foods: இன்று பலரது மரணத்திற்கு காரணமான மாரடைப்பிற்கு முதன்மையான காரணமே கெட்ட கொழுப்புக்கள் அதிகமாக இருப்பது தான். உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிகமானால், அது இரத்த நாளங்களில் தேங்கி அடைப்பை ஏற்படுத்தும். கெட்ட கொழுப்புக்கள் அதிகமாவதற்கு உண்ணும் உணவுகள் தான் காரணம்.

உடலில் இரண்டு வகையான கொழுப்புக்கள் உள்ளன. அவை நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு. கொழுப்பு என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகு போன்ற பொருள். எப்போது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளதோ, அப்போது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயம் அதிகரிக்கிறது.

Cholesterol Reducing Foods: Eat These Vegetables To Remove Bad Cholesterol From Blood Vessels

ஒருவருக்கு கொலஸ்ட்ரால் அளவு பல காரணங்களால் அதிகரிக்கும். அதில் அதிகமாக புகைப்பிடிப்பது, மோசமான டயட், உடற்பயிற்சியின்மை போன்றவை அடங்கும். இந்த கெட்ட கொழுப்புக்களைக் கரைக்க ஒருசில உணவுகள் உதவும். குறிப்பாக ஒருசில காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைப்பதோடு, கட்டுப்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெண்டைக்காய்

வெண்டைக்காய்

உடலில் கொழுப்புக்கள் அதிகம் இருந்தாலோ அல்லது கொழுப்புக்கள் அதிகம் சேரக்கூடாது என்று நினைத்தாலோ, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த காய்கறி கெட்ட கொழுப்புக்களைக் கட்டுப்படுத்த உதவும். இதில் உள்ள ஜெல் போன்ற பொருள், கொழுப்புக்களில் எளிதில் மலம் வழியாக வெளியேற்ற உதவும்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸ் கூட கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆகவே இந்த காய்கறியை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. அறிக்கைகளின் படி, பீன்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்தத்தில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கிறது.

பூண்டு

பூண்டு

உடலில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பவர்கள், அதைக் கட்டுப்படுத்த பூண்டு சாப்பிட வேண்டும். பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் இது கொழுப்பு பிரச்சனை மட்டுமின்றி பல நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. இது தவிர, பூண்ட வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் நீக்குகிறது.

தக்காளி

தக்காளி

தக்காளி கெட்ட கொழுப்புக்களைக் குறைப்பதில் சிறந்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் இதில் லைகோபைன் அதிகம் உள்ளது. இது கெட்ட கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கும். ஆகவே அன்றாட உணவில் தக்காளியை பல வழிகளில் சேர்த்து, கொழுப்பு பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

கத்திரிக்காய்

கத்திரிக்காய்

கத்திரிக்காய் கூட உயர் கொழுப்பைக் கட்டுப்படுத்தும். நீங்கள் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்க விரும்பினால், கத்திரிக்காய் அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள்.

இப்போது கெட்ட கொழுப்புக்களைக் கரைக்க உதவும் பழங்கள் மற்றும் பிற உணவுகளைக் காண்போம்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கூட கெட்ட கொழுப்புக்கள் அதிகரிக்காது. ஏனெனில் இவற்றில் பொட்டாசியம், மக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். ஆப்பிளில் உள்ள பெக்டின் என்னும் ஒரு வகையான நார்ச்சத்து, கெட்ட கொழுப்புக்களைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பல முக்கியமான பாலிஃபீனால்கள் உள்ளதால், இது இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புக்களை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக்கும். அதுவும் ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் தான், அதில் உள்ள முக்கிய சத்துக்கள் கிடைக்கும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவது கொழுப்புக்களைக் குறைக்க உதவும். ஏனெனில் அதில் அதிகளவிலான பாலிஃபீனால்கள் உள்ளன. இது கெட்ட கொழுப்புக்கள் உடலில் தேங்கி அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

நட்ஸ்

நட்ஸ்

வால்நட்ஸ், பாதாம் போன்ற நட்ஸ்களை தினமும் சாப்பிட்டு வருவதால் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இவற்றில் அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் தாவர வகை ஸ்டெரால்கள் உள்ளன. ஆனால் நட்ஸில் கலோரிகள் அதிகம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம். எனவே அளவாக சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cholesterol Reducing Foods: Eat These Vegetables To Remove Bad Cholesterol From Blood Vessels

In this article, we shared some vegetables to remove bad cholesterol from blood vessels. Read on...
Desktop Bottom Promotion