Just In
- 21 min ago
சுவையான... தேங்காய் சாதம்
- 1 hr ago
ஆண்களே! உங்க மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் தெரிஞ்சா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- 1 hr ago
இந்த பிரச்சனை இருந்தா மாம்பழம் சாப்பிடாதீங்க... இல்லன்னா அது பெரிய ஆபத்தாயிடும்...
- 1 hr ago
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்க லாக்கர் இந்த இடத்தில் இருந்தா உங்க வறுமை எப்பவுமே உங்களைவிட்டு போகாது!
Don't Miss
- Movies
"ஜெயிச்சவன் மட்டும் தான் உயிரோடு இருப்பான்"… அக்னி சிறகுகள் மிரட்டலான டீசர் அவுட் !
- News
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் ஆளுநர் ரவி தீவிரம்.. அரசுகள் மறைத்த கலாச்சாரத்தை மீட்குமாம்
- Automobiles
சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்தது கீவே!
- Sports
"ப்ளான் சக்சஸ்" டாஸில் தோற்றாலும் ஆர்சிபிக்கு அடித்த லக்.. எவ்வளவு ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம்?
- Finance
கிரெடிட் ஸ்கோர் குறைஞ்சிருக்கா.. இந்த 5 முக்கிய விஷயங்களில் கவனமா இருங்க..!
- Technology
ரூ.12,500-க்கு ஒப்போ ஏ57 2022 அறிமுகம்: மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி, 5000 எம்ஏஎச் பேட்டரி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க...
புற்றுநோய் என்பது உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பிரிந்து சுற்றியுள்ள திசுக்களில் பரவும் போது ஏற்படும் ஒரு நோயாகும். இந்த புற்றுநோய் டிஎன்ஏ-வில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது. பெரும்பாலான புற்றுநோயை உண்டாக்கும் டிஎன்ஏ மாற்றங்கள் மரபணுக்கள் எனப்படும் டிஎன்ஏ பிரிவுகளில் நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் மரபணு மாற்றங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த புற்றுநோயால் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இந்த புற்றுநோய் ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவுகளை உண்பதால் கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆரோக்கியமான உணவுகளின் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம். ஏன் புற்றுநோயைக் கூட தடுக்கலாம். இப்போது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கக்கூடிய சில உணவுகளைப் பற்றிப் பார்ப்போம். இந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டு வந்தால், புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம்.

ஆப்பிள்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்தது தான் ஆப்பிள். அதே வேளையில், இதில் உள்ள நார்ச்சத்து போன்ற பிற சத்துக்கள் புற்றுநோயின் ஒரு வகையான மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே ஆப்பிளை அதிகம் சாப்பிட்டு வந்தால், மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

வேர்க்கடலை எண்ணெய்
வேர்க்கடலை எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளன. இவை பல வகையான புற்றநோய்களின் அபாயத்தைக் குறைக்கக்கூடியது. எனவே வேர்க்கடலை எண்ணெயை அன்றாட சமையலில் சேர்ப்பதோடு, முடிந்தால் வேர்க்கடலையை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.

மாதுளை
சில வகையான புற்றுநோய்கள் ஈஸ்ட்ரோஜென்களால் ஏற்படுவதாக ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகின்றனர். 2015 ஆம் ஆண்டின் ஆய்வின் படி, பருவகால பழமான மாதுளையில் உள்ள கூறுகள் ஈஸ்ட்ரோஜென்களால் ஏற்படும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்தது. அதோடு மாதுளை புரோஸ்ரேட் புற்றுநோய் மற்றும் இதய நோயின் அபாயத்தில் இருந்தும் பாதுகாக்கிறது.

கேரட்
கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, கேரட்டில் உள்ள பாலிஅசிட்லின் தான் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும், இதில் உள்ள கரோட்டினாய்டு அமிலம் பெண்களில் மார்பக புற்றுநோய் செல்களைத் தடுக்கிறது. கேரட் ஜூஸ் குடிப்பதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக மருத்துவர்களும் நம்புகிறார்கள்.

ப்ராக்கோலி
காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் காணப்படும் ப்ராக்கோலி உடலில் உள்ள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் திறனைக் கொண்ட பண்புகளைக் கொண்டுள்ளது. அதோடு ப்ராக்கோலியில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் காணப்படுகின்றன. கூடுதலாக இதில் பைட்டோநியூட்ரியண்டுகளும் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக, இது மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

பெர்ரி பழங்கள்
நற்பதமான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களை அடிக்கடி உணவில் ஒருவர் சேர்த்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே பெர்ரி பழங்களை உங்களின் அன்றாட உணவில் சிறிது சேர்த்து வாருங்கள்.

பிற உணவுகள்
டார்க் சாக்லேட்டில் 70 சதவீதம் கொக்கோ உள்ளது. மேலும் அனைத்து வகையான உலர் பழங்கள், ஒமேக-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் போன்றவையும் புற்றுநோயைத் தடுப்பதில் சிறந்தது. அதோடு மஞ்சள், ஆலிவ் ஆயில், பருப்பு வகைகள், திராட்சை, க்ரீன் டீ போன்றவையும் புற்றுநோயைத் தடுப்பதில் நன்மை பயக்கும்.