For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கால் பெருவிரல் இப்படி இருக்கா? அப்ப தினமும் இத ஒரு கையளவு சாப்பிடுங்க...

யூரிக் அமிலத்தின் அளவை உணவுகளின் மூலமும் கட்டுப்படுத்தலாம். அதற்கு முதலில் பியூரின் குறைவாக இருக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

|

யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருள். இது பியூரின் என்னும் கெமிக்கல் உடலால் உடைக்கப்படும் போது உருவாகிறது. பெரும்பாலான யூரிக் அமிலம் இரத்தத்தில் கரைந்து, சிறுநீரகங்கள் வழியாக சென்று சிறுநீரின் வழியே உடலில் இருந்து வெளியேறிவிடும். பியூரின்கள் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்கள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.

Dry Fruits To Reduce High Uric Acid Levels In Tamil

யூரிக் அமிலம் நீர் போன்றது. இது பியூரின்கள் நிறைந்த உணவுகளை உடைத்தெறியும் போது உருவாகிறது. பியூரின்கள் என்றால் என்ன? இது கார்பன் மற்றும் நைட்ரஜன் அடிப்படையிலான ஒரு ரசாயன மூலக்கூறு ஆகும். இது உடலால் உடைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹைப்பர்யூரிசிமியா

ஹைப்பர்யூரிசிமியா

சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை சரியாகவும் திறமையாகவும் வெளியேற்றாத போது உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால், அந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது. இது யூரிக் அமிலம் பெரும்பாலும் முட்டுக்களில் அதிகம் தேங்கும். இதன் விளைவாக வலிமிக்க கீல்வாத பிரச்சனையை சந்திக்ககூடும். அதோடு யூரிக் அமிலம் சிறுநீரகத்தில் சிறுநீரக கற்களை உருவாக்கும். உடலில் யூரிக் அமிலம் அதிகம் இருந்தால், பெரும்பாலும் கால் பெருவிரலின் பக்கவாட்டு பகுதி சற்று வீங்கி காணப்படும். இதைக் கொண்டும் ஒருவரது உடலில் யூரிக் அமிலம் அதிகம் உள்ளது என்பதை எளிதில் அறியலாம்.

உடலில் அதிக யூரிக் அமிலத்தைக் கொண்டவர்கள் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சையை மேற்கொண்டு கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். யூரிக் அமிலத்தின் அளவை உணவுகளின் மூலமும் கட்டுப்படுத்தலாம். அதற்கு முதலில் பியூரின் குறைவாக இருக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். உலர் பழங்களில் பியூரின் குறைவாக இருப்பதால், இப்பிரச்சனைக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இப்போது உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தைக் குறைக்க சாப்பிட வேண்டிய சில உலர் பழங்கள் என்னவென்பதைக் காண்போம்.

முந்திரி

முந்திரி

முந்திரி பருப்புகளில் பியூரின் குறைவாகவும், பிற சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. மேலும் முந்திரி உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களை அதிகரிப்பதில் உதவி புரிகிறது. அதோடு இதில் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. முக்கியமாக கீல்வாத நோயாளிகளுக்கு முந்திரி மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது மற்றும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. மேலும்வால்நட்ஸில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இது உடலில் யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவுப் பொருளும் கூட.

பாதாம்

பாதாம்

தினமும் பாதாம் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் இது உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவும். ஏனெனில் இதில் பியூரின்கள் குறைவாகவும், வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்றவை அதிகமாகவும் உள்ளன. முக்கியமாக பாதாமை தோலுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில் பாதாமின் தோலில் தான் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இது ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதையில் உடலால் உற்பத்தி செய்ய முடியாத அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. மேலும் ஆளி விதையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலில் அதிக யூரிக் அமில அளவுகளால் ஏற்படும் வலியைக் குறைக்க பெரிதும் உதவி புரியும்.

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸில் நார்ச்சத்து அதிகமாகவும், பியூரின்கள் குறைவாகவும் உள்ளன. ஆகவே இதை சாப்பிடுவதன் மூலம் இது யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவும் மற்றும் கீல்வாதத்தால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவி புரியும்.

பிற உணவுகள்...

பிற உணவுகள்...

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களைத் தவிர, பியூரின் குறைவாக இருக்கும் பழங்கள், காய்கறிகள், முட்டைகள், உருளைக்கிழங்கு, கொழுப்பு குறைவான மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர் போன்றவற்றையும் உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dry Fruits To Reduce High Uric Acid Levels In Tamil

Here are some dry fruits you should consume to control your uric acid levels. Read on to know more...
Story first published: Thursday, May 26, 2022, 17:46 [IST]
Desktop Bottom Promotion