Just In
- 9 hrs ago
வார ராசிபலன் (03.06.2022-09.07.2022) - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- 10 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்க நேரிடலாம்...
- 20 hrs ago
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- 21 hrs ago
தினமும் இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்குமாம் தெரியுமா?
Don't Miss
- Finance
அந்த மனசுதான் சார் கடவுள்.. அமேசான் ரியல் ஹீரோவுக்கு குவியும் பாராட்டு மழை.. ஏன் தெரியுமா?
- Movies
"ராக்கெட்ரி" கிளைமாக்ஸில் செம ட்விஸ்ட்.. யோசிச்சு கூட பாக்கமுடியால.. மாதவனை புகழ்ந்த சூர்யா !
- News
வாசலில் "கோலம்" போட்ட அம்சா.. கரெக்ட்டா வந்த பாய்பிரண்ட்.. வீட்டிற்குள் ஒரே அலறல்.. பாவம் எழுமலை..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Sports
பிசிசிஐ போட்ட சூப்பர் திட்டம்.. டி20 உலகக் கோப்பை நமக்கு தான்.. ஆஸி செல்லும் இந்திய அணி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
எகிறும் தக்காளி விலை: தக்காளிக்கு பதிலாக வேறு எந்தெந்த பொருட்களைப் பயன்படுத்தலாம் தெரியுமா?
நாளுக்கு நாள் தக்காளியின் விலை எகிறிக் கொண்டிருக்கிறது. இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100 ஆக உள்ளது. மழையின் காரணமான தக்காளி வரத்து குறைவால், இம்மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளியின் விலை அதிகரிப்பால் சாமானிய மக்களால் தக்காளியை அன்றாட சமையலில் பயன்படுத்த முடியாமல் உள்ளது. ஆனால் இந்திய சமையலில் தக்காளி மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்திய சமையலின் தனித்துவமான சுவைக்கு தக்காளியும் ஓர் முக்கிய காரணம்.
இப்படிப்பட்ட தக்காளி இன்று விலை அதிகம் விற்கப்படுவதால், அனைவராலும் அவ்வளவு பணம் கொடுத்து தாராளமாக சமையலில் தக்காளியை பயன்படுத்த முடியாது. இன்னும் சிலரால் தக்காளி வாங்க கூட முடியாமல் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தக்காளிக்கான சிறந்த மாற்று பொருள் என்னவென்பதை அறிந்து, அவற்றைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம். இப்போது தக்காளிக்கு பதிலாக வேறு எந்தெந்த பொருட்களை சமையலில் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம் வாருங்கள்.

சிவப்பு குடைமிளகாய்
தக்காளிக்கு சிறந்த மாற்றுப் பொருள் சிவப்பு குடைமிளகாய் ஆகும். நீங்கள் சாண்விட்ச், சாலட்டுகளை தினமும் சாப்பிடுபவராக இருந்து, அவற்றில் தக்காளிக்கு பதிலாக சிவப்பு குடைமிளகாயை பயன்படுத்தலாம். மேலும் இவற்றை சமைக்கும் போது தக்காளி போன்ற நிறத்தையும், அமைப்பையும் கொண்டிருக்கும். இன்னும் சுவையை அதிகரிக்க, சிவப்பு மிளகாய் பேஸ்ட் அல்லது சிவப்பு குடைமிளகாயில் சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, தக்காளிக்கு ஒரு சிறந்த மாற்றாக மாற்றலாம்.

தயிர்
இந்திய சமையலில் தக்காளிக்கு ஒரு சிறந்த மாற்றாக தயிர் விளங்கும். இந்த தயிரானது குழம்பின் அடர்த்தி மற்றும் தேவையான அளவு புளிப்பை அளிக்கிறது. எனவே சமையலில் தக்காளியை பயன்படுத்த முடியவில்லை என்ற கவலை கொள்ள வேண்டிய அவசியமிருக்காது. அதற்கு சமைக்கும் போது இறுதியாக சிறிது தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பரங்கிக்காய்/ மஞ்சள் பூசணிக்காய்
தற்போதைய தக்காளி விலை உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் இந்த தக்காளிக்கு சிறந்த மாற்றாக பூசணிக்காய் இருக்கும். குறிப்பாக பூசணிக்காயை கூழ் வடிவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் இது சமையலில் சிறிது இனிப்பு மற்றும் க்ரீமி அமைப்பைக் கொடுக்கும்.

தக்காளி கெட்சப்
இந்த மாற்றுப் பொருளை அனைத்து சமையலிலும் பயன்படுத்த முடியாவிட்டாலும், சில இனிப்பு சேர்க்கக்கூடிய சமையலிலாவது தக்காளி கெட்சப்பை பயன்படுத்தலாம். சாண்விட்ச் செய்யும் போது, இதை ஒரு லேயர் கூட போட்டுக் கொள்ளலாம். இதனால் சாண்விட்ச்சில் தக்காளியின் சுவை கிடைக்கும்.

வினிகர்
தக்காளிக்கு பிறகு, ஒரு தனித்துவமான புளிப்புச் சுவையைக் கொண்ட பொருள் என்றால் அது வினிகர். அதுவும் ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் மற்றும் குடல் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, செரிமானத்தை சீராக்கி ஆதரிக்கும்.

புளி
தக்காளிக்கு அடுத்தப்படியாக புளிப்புச் சுவையைக் கொடுக்கும் சமையல் பொருள் என்றால் அது புளி தான். புளியின் சுவை தக்காளியின் சுவையை சற்று ஒத்திருக்கும். எனவே நீங்கள் சமைக்கும் தால், குழம்பு மற்றும் வறுவல் போன்றவற்றில் தக்காளிக்கு பதிலாக புளியைப் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.

மாங்காய் தூள்
தக்காளி எப்படி புளிப்புச் சுவையைக் கொண்டுள்ளதோ, அதேப் போல் மாங்காய் தூளும் புளிப்புச் சுவையைக் கொண்டது. உங்கள் வீட்டில் தக்காளி இல்லாத போது, சமைக்கும் உணவில் சிறிது மாங்காய் தூளை சேர்த்துக் கொண்டால், அது உணவின் சுவையை கூட்டிக் காட்டும்.

சீஸ்
தக்காளி மற்றும் சீஸ் இரண்டுமே உணவிற்கு ஒரு அற்புதமான சுவையை சேர்க்கின்றன. நீங்கள் சாண்விட்ச் அல்லது சாலட்டுகளை செய்யும் போது, தக்காளிக்கு இணையான சுவையைப் பெற நினைத்தால், சிறிது சீஸை துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் சாண்விட்ச் அல்லது சாலட் அட்டகாசமான சுவையுடன் இருக்கும்.