Latest Updates
-
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
உங்களின் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க வால்நட்டை ஒருநாளைக்கு இவ்வளவு சாப்பிட்டால் போதுமாம்...
வால்நட்களில் வைட்டமின்கள் உங்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் இதனை உங்கள் உணவில் சேர்த்து கொள்வது உங்களுக்கு பல அற்புத பலன்களை வழங்குகிறது.
பெரும்பாலான இனிப்புகளில் வால்நட் சேர்க்கப்படுகிறது. இதன் சுவைக்காகவும், சத்துக்காகவும் இது பல உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. தானியங்களின் ராஜா என்று அழைக்கப்படும் இது பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.

உடைத்த இந்த வால்நட் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. இதன் வெளிப்புற படலங்கள் ஊட்டச்சத்தை தக்கவைக்கிறது. வால்நட்டை தினமும் சாப்பிடுவது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இது மிகவும் உதவும். இந்த பதவில் வால்நட் எப்படி உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என்று பார்க்கலாம்.

சரும ஆரோக்கியம்
அனைத்து சருமம் மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளில் வால்நட் பயன்படுத்தப்படுவதை பார்க்கலாம். வால்நட்களில் வைட்டமின்கள் உங்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் இதனை உங்கள் உணவில் சேர்த்து கொள்வது உங்களுக்கு பல அற்புத பலன்களை வழங்குகிறது.

ஊட்டச்சத்துக்கள்
வால்நட்களில் இரும்புச்சத்து, ஜிங்க், வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் அதிகமுள்ளது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் நமது உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் ஒமேகா 3 அமிலம் மற்றும் ஆல்பா லினோலிக் அமிலம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. கார்டியோ வாஸ்குலர் பிரச்சினைகள் இருப்பவர்கள் வால்நட் எடுத்து கொள்வது அவர்களின் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் குறைந்த நிறைவுற்ற கொழுப்புகளை உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் இதிலிருக்கும் பாலிபீனால்கள், ALA ஒமேகா 3 அமிலம் மற்றும் மக்னீசியம் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. நீங்கள் ஒரு நாளைக்கு சாப்பிடும் ஒவ்வொரு கிராம் ஆல்பா லினோலிக் அமிலமும் இதய நோய்களால் இறக்கும் அபாயத்தை 10% குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

பக்க விளைவுகள்
இதனால் நீங்கள் வால்நட்களை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. ஆரோக்கியமான பொருளையும் அதிகமாகி சாப்பிடுவது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். 45 கிராம் அளவிற்கு மேல் ஒருபோதும் வால்நட்களை உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது அப்போதுதான் உங்களுக்கு அதன்மூலம் ஆரோக்கியம் கிடைக்கும். எளிதில் கிடைக்கக்கூடிய இதை எப்படி வேண்டுமென்றாலும் உங்கள் உணவில் சேர்த்து கொள்ளாலாம்.

எப்படி எடுத்துக்கொள்ளலாம்?
தயிர் அல்லது ஓட்ஸில் நொறுக்கப்பட்ட வால்நட்களை சேர்த்து சாப்பிடலாம். வால்நட்டை பச்சையாக சாப்பிடுவதை விட நீரில் ஊறவைத்து சாப்பிடுவது அதிக பலன்களை வழங்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications