For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...!

முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது.

|

உலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பொருள் என்றால் அது முட்டைதான். முட்டையை பல்வேறு வடிவங்களில் நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். முட்டை அதிகம் உபயோகிப்பட காரணம் அதன் சுவை மட்டுமல்ல அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும்தான்.

Foods You Should Not Eat With Eggs

முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதனை சரியான முறையில் சாப்பிட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்த பதிவில் முட்டை சாப்பிடும்போது எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை

சர்க்கரை

முட்டையை சமைத்த பிறகு, முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும். இந்த மூலக்கூறுகளை நமது உடல் உறிஞ்சி கொள்வது மிகவும் கடினமாகும். மேலும் இதனால் இரத்தம் உறைந்து போக வாய்ப்புள்ளது.

 பெர்சிமோன்

பெர்சிமோன்

முட்டை சாப்பிட்ட பிறகு பெர்சிமோன் பழத்தை சாப்பிடுவது விஷம் சாப்பிடுவதற்கு இணையானது. குமட்டல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுடன் கடுமையான இரைப்பை அழற்சிக்கு ஆளாக நேரிடும். ஒருவேளை நீங்கள் முட்டை சாப்பிட்ட பிறகு பெர்சிமோன் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் உப்பு கலந்த தண்ணீரை உடனடியாக குடிக்க வேண்டும். இல்லையெனில் சூடான இஞ்சி நீரை குடிக்கலாம். இது உங்கள் இரத்தத்தில் நச்சுத்தன்மை கலப்பதை தடுக்கும்.

சோயா பால்

சோயா பால்

காலை நேரத்தில் முட்டையும், சோயா பாலையும் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. முட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது உடல்களில் சிதைவு பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது.

MOST READ: கிருஷ்ணருக்கு முன்னால் பிறந்த அனைத்து குழந்தைகளும் பிறந்தவுடனேயே கொல்லப்பட காரணம் என்ன தெரியுமா?

வாத்து இறைச்சி

வாத்து இறைச்சி

முட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது குளிர்ச்சி மற்றும் இனிப்பு குணங்கள் கொண்டது. முட்டையில் புரதமும், குளிர்ச்சி பண்புகளும் உள்ளது. ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.

டீ

டீ

முட்டை சாப்பிட்ட பிறகு அதன் வாசனையை போக்க டீ குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள், ஆனால் இது ஆரோக்கியமற்ற செயல் என்று அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. தேயிலையில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டினுடன் சேர்வது நமது உடலுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும். மேலும் இதனால் நமது குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலில் தேங்கும் நச்சுப்பொருட்களின் அளவும் அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முட்டையில் இருந்து கால்சியம் மற்றும் இரும்புச்சத்தை நமது உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது. இந்த இரண்டு பொருட்களையும் ஒரே உணவில் சேர்ப்பது தவறாகும். இவற்றால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான தூங்குமூஞ்சிகளாக இருப்பார்களாம் தெரியுமா?

பழங்கள்

பழங்கள்

ஆப்பிள், பேரிக்காய், திராட்சை போன்ற பழங்களை புரோட்டீன் இருக்கும் உணவுகளை சாப்பிட்ட பின் சாப்பிடுவது நல்லதல்ல. இது செரிமானத்தை மெதுவாக மாற்றும். பழங்கள் 15 நிமிடத்தில் செரிமானம் அடைந்து விடும். ஆனால் முட்டை செரிமானம் அடைய நேரம் எடுத்துக்கொள்ளும். இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு நல்லதல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Should Not Eat With Eggs

After eatnig eggs never consume these foods.
Desktop Bottom Promotion