For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டைகர் நட்ஸ் என்றால் என்ன தெரியுமா? இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும்...!

நட்ஸ் வகைகளை பொறுத்தவரை நாம் அதிகம் கேள்விப்படுவது பாதாம், முந்திரி, வால்நட் போன்றவை மட்டுமே ஆனால் இவை தவிர்த்து எண்ணற்ற நட்ஸ் வகைகள் உள்ளது.

|

இந்த பூமியில் நமக்கு தெரியாத பல ஆரோக்கிய உணவுகள் இருக்கிறது. நட்ஸ் வகைகளை பொறுத்தவரை நாம் அதிகம் கேள்விப்படுவது பாதாம், முந்திரி, வால்நட் போன்றவை மட்டுமே ஆனால் இவை தவிர்த்து எண்ணற்ற நட்ஸ் வகைகள் உள்ளது. அந்த வகையில் முக்கியமான நட்ஸ் வகையை சேர்ந்தது டைகர் நட்ஸ் என்பதாகும். இதனை சுஃபா என்றும் அழைப்பார்கள்.

Benefits of tiger nuts

ஆரம்ப காலகட்டத்தில் இது எகிப்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது உலகம் முழுவதும் பிரபலமடைந்து விட்டதால் இந்தியாவிலேயே அனைத்து சூப்பர் மார்க்கெட்களிலும் எளிதாக கிடைக்கிறது. இதனை ஊறவைத்து, அரைத்து பாலாக குடிப்பது இதிலிருந்து அதிக ஊட்டச்சத்துக்களை பெறும் வழியாகும். உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, ஜிங்க், வைட்டமின் ஈ மற்றும் சி என இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது வழங்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானம்

செரிமானம்

பழங்காலம் முதலே டைகர் நட்ஸ் வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் இது உதவுகிறது. இது பல மருந்துகளில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொட்டாசியம்

பொட்டாசியம்

டைகர் நட்ஸில் அதிகம் இருக்கும் பொட்டாசியம் நம்முடைய தசைகளையும், செல்களையும் ஒழுங்குபடுத்துவதோடு இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. தினமும் 100கி டைகர் நட்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

கார்டியோவாஸ்குலர் நோய்

கார்டியோவாஸ்குலர் நோய்

தேசிய சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி டைகர் நட்ஸில் அதிகளவு வைட்டமின் ஈ உள்ளது. இது பல கொழுப்பை கரைக்கும் சேர்மங்களை உருவாக்குவதுடன் கார்டியோவாஸ்குலர் நோயையும் கட்டுப்படுத்துகிறது.

MOST READ: இராவணனை வீழ்த்துவதற்கு இராமருக்கு சூரிய பகவான் எப்படி உதவினார் தெரியுமா?

வயதாவதை தடுக்கிறது

வயதாவதை தடுக்கிறது

வைட்டமின் ஈ மற்றும் பாலிபினால் மூலக்கூறுகள் போன்ற வலிமையான ஆன்டி ஆக்சிடண்ட்கள் இதில் அதிகமுள்ளது. இது விரைவில் வயதாவது, சுருக்கம், மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது.

விறைப்புத்தன்மை

விறைப்புத்தன்மை

இந்த நட்ஸ் விறைப்புத்தன்மை பிரச்சினையை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. கானா பிராந்தியத்தின் பூர்வீகம் இந்த கொட்டைகளை மற்ற இனப்பெருக்க பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தியது.

புற்றுநோய்

புற்றுநோய்

இதிலுள்ள கரையக்கூடிய குளுக்கோஸ் உங்களை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் பால் ஈரல் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுத்துவதில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

MOST READ: எடையை நினைத்ததை விட வேகமாக குறைக்க இந்த ஜூஸை தினமும் குடித்தால் போதுமாம்...!

எடை குறைப்பு

எடை குறைப்பு

இதில் மிதமான அளவில் இருக்கும் கலோரியும், அதிகளவில் இருக்கும் நார்சத்துக்களும் இதனை எடைகுறைக்க உதவும் சிறந்த பொருளாக மாற்றுகிறது. ஆய்வுகளின் படி 100 கிராம் டைகர் நட்ஸில் 60கி நார்ச்சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இதனால் இது உங்களை நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of tiger nuts

Check out the health benefits of tiger nuts.
Story first published: Friday, July 5, 2019, 17:08 [IST]
Desktop Bottom Promotion