For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடையை குறைக்க முயற்சி பண்றீங்களா? இந்த மைனஸ் கலோரி உணவுகளை சாப்பிடுங்க.

இங்கு சில உணவுப் பொருள்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அது நெகட்டிவ் கலோரி உணவுகள். அவற்றை சாப்பட்டு உங்கள் கலோரிகளைக் குறையுங்கள்.

By Suganthi Rajalingam
|

உடல் எடையை குறைப்பதற்குள் நமக்கு போதும் போதும் என்றாகி விடும். நாம் பின்பற்றாத வழிமுறைகளே இருக்காது. அதிலும் டயட் மேற்கொண்டால் போதும் ஒவ்வொரு உணவின் கலோரியையும் எண்ணிக் கொண்டே தான் சாப்பிடவே செய்வோம். இந்த டயட் திட்டமும், உடற்பயிற்சியும் உடல் எடையை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றே கூறலாம்.

negative calorie foods

ஆனால் சமீபத்தில் உடல் எடையை குறைக்க "எதிர்மறை கலோரி உணவுகள்" பக்கம் மக்கள் சார்ந்துள்ளன. சரி வாங்க இந்த எதிர்மறை டயட் முறையை பற்றி இப்பொழுது காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதிர்மறை கலோரி உணவுகள்

எதிர்மறை கலோரி உணவுகள்

எதிர்மறை கலோரி உணவுகள் சீராணமாக நிறைய கலோரிகளை எடுத்து எரித்து விடுகின்றன. இதனால் நீங்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பே இல்லை. இதனால் மிஞ்சக் கூடிய கலோரிகளும் சீரணத்திற்காக பயன்படுத்தப்பட்டு விடுவதால் உடல் பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

எதிர்மறை உணவுகள்

எதிர்மறை உணவுகள்

தாவர உணவுகள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து கொண்ட உணவுகள். இந்த உணவுகளில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் நமது உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து சீரணிக்க வெகு நேரம் எடுத்து கலோரிகளை எரித்து விடுகிறது.

எடை இழப்பு

எடை இழப்பு

கலோரி இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அவை நமது உடல் எடையை அதிகரிக்கவே செய்கிறது. இதில் சர்க்கரை உணவுகள், ஜங்க் ஃபுட் போன்றவைகள் அடங்கும்.

உணவுகளில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் தண்ணீர் சத்து இருந்தால் குறைந்த அளவு கலோரிகளை கொண்டு இருப்பதோடு சீரணிக்க அதிகளவு கலோரிகளை செலவிடுகின்றன. செலரி ஒரு அற்புதமான எதிர்மறை கலோரி உணவாகும். 100 கிராம் செலரி யில் 16 கலோரிகள். இந்த 16 கலோரிகளும் இந்த பொருள் சீரணமாகவே செலவிடப்படுகின்றன. எனவே எதிர்மறை கலோரி உணவுகள் உங்கள் உடல் எடையை குறைக்க சரியானது என்றே கூறலாம்.

உணவுகள்

உணவுகள்

பிரக்கோலி, கீரைகள், தர்பூசணி, கேரட், ஸ்பெர்ரி, வெள்ளரிக்காய், ஆப்பிள், தக்காளி, சீமை சுரைக்காய் போன்றவை எதிர்மறை உணவிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

முடிவு

முடிவு

இந்த டயட் முறையில் நீங்கள் சில குறிப்பிட்ட உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வது போல் தோன்றலாம். எனவே இதனுடன் ஒரு ஆரோக்கியமான உணவு முறையையும், அதே உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வந்தாலே போதும் உங்கள் உடல் எடை உங்கள் கைவசம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What are negative calorie foods? Can they help in weight loss?

we suggest some nutrient foods here. that was negative galorie,so eat well and burn your calories.
Story first published: Monday, August 27, 2018, 17:44 [IST]
Desktop Bottom Promotion