For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓட்கா குடிச்சா இவ்ளோ நல்லதா?... இத்தனை நாளா ஏன் மச்சி சொல்லவே இல்ல...

By Gnaana
|

ஓட்காவால், அப்படியென்ன நன்மையென ஆர்வமாகி, தலைப்பை க்ளிக் செய்யும் சில இளைஞர்களிடையே, அதான் எங்களுக்குத் தெரியுமே என்பதுபோல, குறும்பான புன்முறுவலுடன் கிளிக் செய்யும் சில பெண்களும், இதைப் படிப்பார்கள்.

ways vodka is actually pretty good for your health

உண்மைதான் சார், சில வருஷங்களுக்கு முன்வரை இந்த விஷயத்தில்,உலகத்திலேயே, நாமும் பின்தங்கிதான், இருந்தோம், அப்புறம்தான் சுதாரிச்சு, நாமளும் வளர்ந்து, இன்னைக்கு உலகத்திலே, மூணாவது இடத்திற்கு முன்னேறி ஸ்டெடியாக நிற்கிறோம் என்றால், நாட்டின் பெண்களில் பதினோரு சதவீதமுள்ள மதுப்பிரியைகள்தான் அதற்குக் காரணம் எனும் பேருண்மையை, நாம் மறந்துவிடக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்கள் மது அருந்துதல்

பெண்கள் மது அருந்துதல்

முன்பெல்லாம் பெண்கள் குடிப்பார்களா, என்று கேட்கும் காலம் இருந்தது, இன்று, வாரவிடுமுறை என்றாலே, ஒரே கும்மாளம்தான் என்று பசங்களைப்போல, சகதோழிகளும் குடிப்பதைக் கொண்டாடும் காலமாகிவிட்டது. மது பலவகைகளில் இருந்தாலும், ஓட்கா மட்டுமே, உலகஅளவில் அதிகம் பேரால், குடிக்கப்படும் பிரபலமான மதுவாக விளங்குகிறது.

ஓட்கா

ஓட்கா

ரஷ்யா உலகுக்கு அளித்த நற்கொடைகளில் ஓட்காவும் ஒன்று, ஓட்கா என்றால், இரஷ்ய மொழியில், தூய்மையான தண்ணீர் என்றுபொருள். மணமற்ற, தெளிவான நீரைப்போன்ற சுத்தமான சாராயம்தான், ஓட்கா. கம்பு, கோதுமை, உருளை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் கரும்பிலிருந்து தயாரிப்பதே, ஓட்காவாகும். நீருடன் நிறைந்த ஆல்கஹாலை பலமுறை வடிகட்டி, கார்பன் நிலைகளில் மீண்டும் வடிகட்டுவதன் மூலம், உலகிலேயே, மிகவும் சுத்தமான ஆல்கஹாலாக, ஓட்கா, திகழ்கிறது.

ஃபுரூட் ஓட்கா

ஃபுரூட் ஓட்கா

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில், திராட்சை,ஆப்பிள்போன்ற பழங்களிலிருந்து ஓட்கா தயாரித்தாலும், அதை ஓட்கா எனப் பெயரிடக்கூடாது என்கிறார்கள், இரஷ்யர்கள். பின்னே, சிரமப்பட்டு தானியங்களில் இருந்து வடிகட்டி கண்டுபிடித்ததை, மற்றவர்கள், இதுதான் ஓட்கா என்றால், அந்த ஓட்காவிற்குதானே, அவமானம். ஓட்கா ஆரம்பத்தில் மருத்துவத்துக்கே, அதிகம் பயன்பட்டது. நாம்குடிக்கும் இருமல் மருந்துகள் மற்றும் பல மருந்துகளில் ஆல்கஹால் கலந்திருப்பதை, அறிந்திருப்போம். எந்தக்கலப்பும் இல்லாததும், சுவாசத்தில் எந்தவிதமான வாசனையையும் தராததாலும், பலர் ஒட்காவை குடிக்கிறார்கள். தற்காலங்களில் பழங்கள், இஞ்சி, இலவங்கம், வெணிலா போன்ற பல நறுமணங்களும் ஓட்காவில் சேர்க்கப்படுகின்றன.

உடலுக்கு நல்லது

உடலுக்கு நல்லது

ஓட்கா, 38-40 சதவீதம்வரை, ஆல்கஹாலைக் கொண்டிருப்பதால், அதிகமாகக் குடித்தால், மயங்கி போதையில் தள்ளாடவேண்டியதுதான். குறைவாகக்குடித்தால், உடலுக்கு நன்மை தரும் ஓட்கா. உலகில் அதிகம் குடிக்கப்படும் மதுபானமாக விளங்கும் ஓட்கா, குடிப்பதைத் தவிர, மருந்தாகப் பயன்படுத்த, உடல்நலனுக்கு, சரும பொலிவிற்கு, மனவளத்திற்கு நன்மைகள் செய்து, வீடுகளில் பூச்சிகள்,கிருமிகளை அழித்து, சுத்தம் செய்வதிலும் நம்பர் ஒன்னாக இருக்கிறது, என்பதை நாமறிவோமா? உடல் நலம் காக்கும் ஓட்கா ஒரு சிறந்த கிருமிநாசினி.

 பல் வலி

பல் வலி

பல்வலி வந்தால், சாப்பிடவும் பேசவும் முடியாமல், வேதனைதரும், பஞ்சில் சிறிது ஓட்காவை நனைத்து, பல் ஈறுகளில் வைத்து வர, பல்வலி உடனே மறையும்.

வாய் துர்நாற்றம் போக்கும் மவுத்வாஷ். சிலர் வாயைத்திறந்தாலே, கெட்டவாடை வீசி, மற்றவரை முகம் சுளிக்கவைத்துவிடும், ஓட்காவை நீரில் கலந்து, அதனுடன் சிறிது இலவங்கப்பட்டைத்தூள் சேர்த்து, ஒருவாரம் ஊறவைக்கவேண்டும். பின் அந்தநீரை வடிகட்டி சேகரித்து வைத்துக்கொண்டு, தினமும் காலையில் வாயிலிட்டு கொப்புளித்துவரலாம், வாய்க்கிருமிகளை அகற்றி, நாற்றத்தை ஒழித்துவிடும்.

நோ ஹேங் ஓவர்

நோ ஹேங் ஓவர்

இது, வாய்நாற்றத்தை மட்டும் போக்குவதில்லை, முன்னிரவு பார்ட்டியில் மூக்குமுட்ட குடித்து, மூச்சுவிட்டாலே வரும் சாராய நாற்றத்தைக்கண்டு, மற்றவர்கள் முகம்சுளிப்பதைத் தடுக்கவும், துணைபுரியும். சரியான அளவில் நீர்சேர்த்து குறைவாகக் குடித்தால், தூய்மையான ஓட்கா, ஹேங்க்ஓவர், எனும் தலைவலி, உடல் சோர்வைத் தருவதில்லை.

 சரும பொலிவு

சரும பொலிவு

ஓட்கா முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி, முக தசைகளை சுருக்கி, முகத்தை மிருதுவாக்கும். ஆறவைத்த க்ரீன்டீத்தூள் நீரில், சிறிது ஒட்காவைக்கலந்து, பஞ்சைக்கொண்டு, முகத்தில் மென்மையாகத் தடவிவர, விரைவில் முகம் மலர்ந்து பொலிவாகும். தர்பூசணிசாற்றை, ஓட்கா கலந்தநீரில் இட்டு, முகத்தில் தடவிவர, முகம் பொலிவாகும். இவற்றை தினமும் முறையாக செய்துவந்தால், முக அழகுக்காக, மாதாமாதம் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்யத் தேவையில்லாமல், இயற்கை முக அழகை, குறைவான செலவில் பக்க விளைவில்லாமல், நீங்களே அடையலாம்.

அரிப்பு தடிப்பு நீங்க

அரிப்பு தடிப்பு நீங்க

ஒரு ஸ்ப்ரேபாட்டிலில், நீருடன் சிறிது ஒட்காவை சேர்த்து, வாசனைக்காக சந்தனம் அல்லது ரோஜா எண்ணையை சிறிதுகலந்து, பாதித்த இடங்களில் தெளிக்க, அரிப்பு,தடிப்பு விலகிவிடும்.

ஓட்கா ஹேர் ஸ்ப்ரே

ஓட்கா ஹேர் ஸ்ப்ரே

அவிழ்ந்துவிழும் தலைமுடிகள், காற்றில் பறந்து தலை கலைந்துபோவதைத்தடுக்க, தலைமுடிகளின்மேல் ஹேர்ஸ்பிரேவைத் தெளிக்கலாம். நறுக்கிய எலுமிச்சை பழங்களை நீரிலிட்டு மூடி, இதமானசூட்டில் கொதிக்கவைத்து, ஆறியபின், சிறிது ஒட்காவை அதில் சேர்த்து, தலைமுடிகளின் மேல்தெளிக்க, அலைபாய்ந்த முடிகள், அமைதியாகிவிடும்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

மனஅழுத்தம் போக்கத்தானே, நாங்கள் குடிக்கிறோம், இதில் ஓட்கா என்ன ஸ்பெஷல் என்று குடிமகன்கள் கோபித்துகொள்ளலாம், ஆனால், ஓட்காவில்தான், உடலை இலகுவாக்கி தளரவைத்து, அலைபாயும் மனதின் எண்ணங்களை தடுத்து, மூளையின் செயலை அமைதியாக்கி, தூக்கத்தைத்தூண்டக்கூடிய தன்மைகள் அதிகமுள்ளதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிலகாலங்களுக்கு முன்புவரை ஐரோப்பாவில், குறை பிரசவத்தைத்தடுக்க, ஓட்காவை, கர்ப்பிணிகளுக்கு அளித்துவந்தார்கள் என்கிறது, ஒரு ஆய்வு.

எடை குறைக்க

எடை குறைக்க

ஓட்காவை குறைவாக எடுத்துக்கொண்டால், இரத்தஓட்டத்தை சீராக்கி, இரத்தநாள அடைப்புகள், சுருக்கத்தை நீக்கி, இதயத்தை வலுவாக்கும். உடலில் நல்ல கொழுப்புகளை உண்டாக்கி, நச்சு கொழுப்புகளை கரைப்பதால், உடல் எடைக்குறைப்பில், ஓட்கா முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜுரம் தலைவலி தீர

ஜுரம் தலைவலி தீர

சிலருக்கு, ஜுரம், தலைவலி வரும் சமயங்களில், ஓட்காவை நெற்றிப்பொட்டில் சிலதுளிகள் இட்டு மென்மையாகத் தடவிவர, ஜுரம் சீக்கிரம் விலகிவிடும். தலைவலியும் தீர்ந்துவிடும்.

மூட்டு பாதிப்புகள்

மூட்டு பாதிப்புகள்

இதோடுகூட, உடல் அழற்சியைத் தடுத்து, மூட்டு வலி பாதிப்புகளுக்கு தீர்வாகிறது, சில துளி ஓட்காவை நீரில் கலந்து, பருகி வர, உடல் எதிர்ப்பு ஆற்றல் மேம்படுகிறது. எலும்பு வலி இருப்பவர்கள், 40 வயதுக்கு மேல் இயல்பாகவே மூட்டு பாதிப்புக்கு ஆளாகிறவர்கள் ஓட்காவை குடிக்கலாம்...

இரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை

எதையும் கலக்காமல், பருகும் சுத்தமான ஓட்கா, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி, பாதிப்புகளை குணமாக்குகிறது என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

தற்காலத்தில், உடல்நல பாதிப்புகளுக்குத் தீர்வாக, மூலிகைகள் கலந்த ஓட்கா வகைகள், பழச்சாறுகள் கலந்த ஓட்கா காக்டெயில்கள் என்று ஏராளமானவை கிடைத்தாலும், தேவாமிர்தமானாலும், அளவுக்கு மிஞ்சாமல் இருப்பதே, உடல்நலத்தை காக்கும் சிறந்த வழியென்பதை மனதில், இருத்தினால், நன்மையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ways vodka is actually pretty good for your health

Vodka is a natural disinfectant, antitoxin, and antiseptic. It can be used to treat toothaches, clean wounds, and clean your house.
Story first published: Tuesday, April 3, 2018, 19:20 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more