For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் தினமும் சாப்பிட கூடிய இந்த காய்கனிகள் எவ்வளவு விஷத்தன்மை வாய்ந்ததுனு தெரியுமா...?

|

நீங்கள் தினமும் சாப்பிட கூடிய உணவுகள் விஷம் என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும். உண்மையில் உங்களுக்கு தூக்கி வாரி போட்டுவிடும் தானே..! இதே நிகழ்வு தான் நாம் சாப்பிட கூடிய அன்றாட பழங்கள் மற்றும் காய்கறிகளில் நடந்து கொண்டிருக்கிறது. உணவின் தன்மை மாறி போனால் அது எத்தகைய விளைவை நமக்கு தரும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள் நண்பர்களே.

Toxic Fruits and Vegetables You May Be Eating Every Day

விஷ தன்மை நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை நாம் சாப்பிடுவதால் கொஞ்சம் கொஞ்சமாக நம் உயிர் பறிபோகிறது என்பதை இப்போதே எழுதி வைத்து கொள்ளுங்கள். இந்த பதிவில் கூறப்படுகின்ற காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அவை என்னென்ன காய்கனிகள் என்பதை இனி தெரிந்து உஷாராக இருப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவு அரசியல்...!

உணவு அரசியல்...!

இங்குள்ள ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு உயிர்களிடத்தும் ஏதோ ஒரு வித அரசியல் இருக்க தான் செய்கிறது. அதே போன்றுதான் நாம் சாப்பிட கூடிய உணவிலும் நடக்கின்ற அரசியல் தான் இத்தகைய நச்சுத் தன்மையான காய்கனிகளுக்கு காரணம். பேராசை கொண்டு, எண்ணற்ற அளவில் இது போன்ற நச்சு தன்மை வாய்ந்த உணவுகள் ஏராளமான அளவில் இருக்கிறது.

திராட்சை

திராட்சை

அதிக படியான பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் திராட்சையில் அதிக அளவில் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும். இத்தகைய நலன் கொண்ட திராட்சையும் நச்சு தன்மை அடைந்துள்ளதாம். திராட்சை பார்ப்பதற்கு பொலிவாக இருக்கவும், மளமளவென இந்த செடி வளர chlorpyrifos என்ற மோசமான பூச்சி கொல்லிகளை இதன் மீது பயன்படுத்துகின்றனர். எனவே, இவை மூளை சிதைவு ஏற்படும் பாதிப்பை தருகிறது.

ஆப்பிள்

ஆப்பிள்

"தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை" என்ற வழக்கு மொழி இங்கு இருந்து வருகிறது. அந்த வகையில் நாம் சாப்பிடுகின்ற ஆப்பிளானது விஷத்தன்மை வாய்ந்ததாக உள்ளதாம். diphenylamine என்ற வேதி பொருளை இதன் தோல் மீது பயன்படுத்துவதால் ஆப்பிள் முற்றிலுமாக விஷ தன்மை பெற்று விடுகிறது.

தக்காளி

தக்காளி

முக அழகு மற்றும் உடல் ஆரோக்கியம், இரண்டையும் ஒரு சேர வைத்து கொள்ளும் இந்த தக்காளியில் கூட endosulfins என்ற விஷத்தன்மை நிறைந்துள்ளதாம். 36 வயதினிலே படத்தில் கூடுவது போல "உணவே மருந்து என்பதை தண்டி மருந்தே உணவு" என்ற நிலைக்கு நாம் வந்து விடுவோம் போலிருக்கிறது.

MOST READ: 20 நாட்களில் உடல் எடை முதல் மலட்டு தன்மை வரை அனைத்தையும் சரி செய்யும் சீரகநீர்...!

ஸ்ட்ராவ்பேர்ரி

ஸ்ட்ராவ்பேர்ரி

செக்க சிவந்த இந்த ஸ்ட்ராவ்பேர்ரி பழத்தை பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். ஆனால், இந்த கவர்ச்சியான பழம் பூச்சிகளை கவர்ந்திழுக்கமால் இருக்க methyl bromide, chloropicrin, Telone போன்ற கொடூரமான வேதி பொருட்களை சேர்க்கின்றனர். எனவே, இவை ஸ்ட்ராவ்பேர்ரியை முழுமையாக விஷமாக்கி விடும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

கோடை காலத்தின் ராஜாவாக திகழும் இந்த வெள்ளரிக்காயில் கூட விஷம் உள்ளதாம். இதில் கிட்டத்தட்ட 86 வகை பூச்சி கொல்லிகள் சேர்ப்பதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இந்த வகையான வெள்ளரியை நாம் சாப்பிடுவதால் உடல் முழுவதும் நச்சு தன்மை ஆகிவிடும்.

உருளை கிழங்கு

உருளை கிழங்கு

நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த உருளை கிழங்கில் எண்ணற்ற வேதிகள் சேர்க்கப்டுகிறதாம். அந்த காலத்தில் உருளை கிழங்குக்காக ஒரு பெரிய போரே நடந்ததாம். இத்தகைய மகத்துவம் பெற்ற கிழங்கில் சேர்க்கப்படும் வேதி தன்மை நம் உடலின் ரத்த ஓட்டத்தை பெரிதும் பாதிக்கும்.

குடை மிளகாய்

குடை மிளகாய்

neonicotinoids என்ற மிக முக்கிய வேதி பொருள் குடை மிளகாய் உற்பத்தியில் பயன்படுத்த படுகிறது. எனவே, இவை நம் மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதித்து விடுமாம். இந்த வகையான குடை மிளகாய் முற்றிலுமாக நம் உடல் நலத்தை கெடுத்து விடும்.

MOST READ: ஆண்களே பிறப்புறுப்பின் நீளம் குறைய உங்களின் இந்த செயல்கள்தான் காரணம்

முளைக்கீரை

முளைக்கீரை

உடல் நலத்தை சீராக வைத்து கொள்ளவும் ஆரோக்கியமான உடல் அமைப்பை தரவும் இந்த கீரை வகைகளை நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், இவை இத்தகைய தீங்கு கொண்டவை என நீங்கள் அறிந்தால் அவ்வளவுதான். குறிப்பாக முளைக்கீரையில் acetamiprid மற்றும் imidacloprid என்ற இரு பூச்சி கொல்லிகள் சேர்பதப்பதாக கூறுகின்றனர். எனவே, இதனை பார்த்து வாங்குவது நல்லது.

காளான்

காளான்

காளானை உற்பத்தி செய்பவர்கள் தேவையற்ற வேதி பொருட்களை அதனுள் சேர்க்கின்றனர். காளான் நன்றாக அறுவடை ஆக வேண்டும் என்பதற்காக Amanita phalloides என்ற விஷ தன்மை மிக வேதியை இதில் கலந்து விடுகின்றார்களாம். எனவே, காளானை வாங்கும் போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

உஷார்...உஷார்..!

உஷார்...உஷார்..!

இனி எந்த வகை உணவாக இருந்தாலும் அது எந்த முறையில் தயாரிக்கபட்டது என்பதை முதலில் நன்கு பரிசோதிக்க வேண்டும். பிறகு தான் அவற்றை நாம் வாங்க வேண்டும். குறிப்பாக சூப்பர் மார்க்கெட்டில் வாங்க கூடிய காய்கனிகளின் கெட்டு போகும் தேதி முக அவசியமாகும்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Toxic Fruits and Vegetables You May Be Eating Every Day

Fruits & vegetables are vital for health. These antioxidant-rich are as tasty as they are healthy.
Desktop Bottom Promotion