இந்த உணவுகள் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒருவருக்கு எப்போது புற்றுநோய் தாக்கும் என்று சரியாக கூறவே முடியாது. பெரும்பாலும் உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களால் தான் புற்றுநோய் தாக்குகிறது. இந்த புற்றுநோயால் ஏராளமானோர் தங்களது உயிரை இழந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் உலகில் ஆயிரக்கணக்கான மக்கள் புற்றுநோயால் உயிரை இழக்கின்றனர்.

புற்றுநோயில் குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இரத்த புற்றுநோய் மற்றும் பல வகைகள் உள்ளன. உடலில் புற்றுநோய் செல்களின் அசாதாரண பெருக்கம் இருக்கும் போது, அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதில் குடல் புற்றுநோய் என்பது பெருங்குடலைத் தாக்கும்.

Top Foods That Prevent Colon Cancer

பொதுவாக இது பெருங்குடலின் சுவற்றில் மொட்டுக்கள் போன்று வளர ஆரம்பிக்கும். குடல் புற்றுநோய் இருந்தால், ஆரம்ப காலத்தில் இதற்கான அறிகுறிகள் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், நாம் அதை இரைப்பை பிரச்சனைகள் என்று சாதாரணமாக நினைத்துவிட்டுவிடுவோம்.

ஒருவருக்கு குடல் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தால் குறிப்பிட்ட சில அறிகுறிகள் தென்படும். அதே சமயம் குடல் புற்றுநோய் வராமல் இருக்க ஒருசில உணவுகள் உதவும். அந்த உணவுகளை ஒருவர் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், இந்த அபாயகரமான நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். உங்களுக்கு குடல் புற்றுநோயைத் தடுக்கும் உணவுகள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

குடல் புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் எவ்வித அறிகுறிகளையும் கண்டறிய முடியாது. ஆனால் முற்றிய நிலையில் குறிப்பிட்ட சில அறிகுறிகள் தென்படும். அவையாவன:

* வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல்

* மலத்தின் நிலைத்தன்மையில் மாற்றங்கள்

* இரத்தக்கசிவுடனான மலம்

* அடிவயிற்று வலி, பிடிப்பு, உப்புசம் அல்லது வாய்வுத் தொல்லை

* மலம் கழிக்கும் போது வலி

* தொடர்ச்சியான களைப்பு

* விவரிக்க முடியாத எடை குறைவு

* இரும்புச்சத்து குறைபாடு

இப்போது குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் எவையென்று காண்போம்.

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசி

வாரத்திற்கு ஒருமுறை கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவோருக்கு குடல் சுவற்றில் கட்டிகள் பெருக்கமடைவது 40 சதவீதம் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதற்கு கைக்குத்தல் அரிசியில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து தான் முக்கிய காரணம். ஒரு கப் கைக்குத்தல் அரிசியில் 3.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதுவே ஒரு கப் வெள்ளை அரிசியில் 1/2 கிராம் தான் நார்ச்சத்து உள்ளது. இப்போது புரிகிறதா ஏன் கைக்குத்தல் அரிசி ஆரோக்கியமானது என கூறுகிறார்கள் என்று.

சால்மன்

சால்மன்

வைட்டமின் டி குறைபாடு கூட சில சமயங்களில் குடல் புற்றுநோயை உண்டுபண்ணும் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சால்மன் மீன் இந்த வைட்டமின் டி சத்து ஏராளமான அளவில் உள்ளது. அதுவும் மற்ற உணவுகளை விட சால்மன் மீனில் தான் ஏராளமான அளவில் வைட்டமின் டி சத்துள்ளது. ஆகவே வாரத்திற்கு ஒருமுறையாவது சால்மன் மீனை சாப்பிடுங்கள்.

வேர்க்கடலை

வேர்க்கடலை

வேர்க்கடலை நட்ஸ் வகையைச் சேர்ந்தது அல்ல. அது ஒரு பருப்பு வகையைச் சேர்ந்தது என்பது தெரியுமா? பருப்பு வகைகளான கொண்டைக்கடலை, ப்ளாக் பீன்ஸ் மற்றும் பட்டாணியை வாரத்திற்கு 3 முறை உட்கொண்டால் 33 சதவீதம் குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதாக லோமா லிண்டா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 1/2 கப் வேர்க்கடலையில் 6 கிராம் நார்ச்சத்துள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரங்களில் வேர்க்கடலையை சாப்பிடுங்கள்.

இஞ்சி

இஞ்சி

ஒருவர் தொடர்ந்து 28 நாட்கள் இஞ்சியை உட்கொண்டு வந்தால் 28 சதவீதம் குடலில் அழற்சி வரும் அபாயம் குறைவதாக புற்றுநோய் ஆராய்ச்சி தடுப்பு கூறுகிறது. குடலில் அழற்சி வந்தால், அது குடலில் கட்டிகளின் வளர்ச்சியை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தினமும் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சீரகம்

சீரகம்

சீரகம் தனித்துவமான சுவையைக் கொண்டது. இது பல்வேறு இயற்கை மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அந்த அளவில் இதில் நோய்களைத் தடுக்கும் சக்தி உள்ளது. அதிலும் சீரகத்தில் உள்ள க்யூமின் அல்டிஹைடு, குடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தைத் தடுத்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

அன்றாட உணவில் சேர்க்கப்படும் மஞ்சளில் உள்ள குர்குமின், குடலில் வளரும் புற்றுநோய் செல்களை அழிக்கும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அதிலும் ஒருவர் மஞ்சள் தூளை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், அது 24 மணிநேரத்தில் 25 சதவீத புற்றுநோய் செல்களை அழிப்பதாக லூசியானா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் உள்ள பீட்டா கரோட்டீன் குடல் புற்றுநோயைத் தடுப்பதாக ஜர்னல் ஆஃப் ஊட்டச்சத்து ஆராய்ச்சியில் தெரிய வந்தது. மற்றொரு ஆய்வில் தினமும் ஒருமுறை கீரையை உணவில் சேர்த்து வந்தால், 24 சதவீதம் குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.

காளான்

காளான்

காளான் மிகச்சிறந்த புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுப் பொருள். அதிலும் பசலைக்கீரையுடன் காளானை சேர்த்து ஆம்லெட் போட்டு தினமும் சாப்பிட்டால், புற்றுநோயே தாக்காது. அதிலும் வெள்ளை பட்டன் காளானில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான எர்கோதியோனைன் என்னும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம் பலரது மிகவும் விருப்பமான பழம். இதில் உள்ள வைட்டமின் சி, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளான அதிகமான மெட்டபாலிச விகிதம், வலிமையான நோயெதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான சருமம் போன்றவற்றை வழங்கும். அதோடு கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, குடலில் வளரும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, குடல் புற்றுநோயைத் தடுக்கும். எனவே கொய்யாப்பழம் கிடைத்தால் தவறாமல் சாப்பிடுங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஓர் அற்புதமான பழம். இதில் உள்ள பொட்டாசியம் சத்து, மெட்டபாலிச இயக்கத்தை மேம்படுத்துவதோடு, உடலில் ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் மன இறுக்கத்தை சரிசெய்யும். ஆய்வு ஒன்றில் ஒருவர் தொடர்ச்சியாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் ஆரோக்கியமாக இருந்து, வயிற்று அல்சர் மற்றும் குடல் புற்றுநோய் வருவது தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Foods That Prevent Colon Cancer

Here we listed some of the foods that prevent colon cancer. Read on to know more...
Story first published: Monday, February 5, 2018, 18:12 [IST]
Subscribe Newsletter