For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குங்குமப் பூ கலந்த பாலை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன ?

குங்குமப் பூ எண்ணற்ற மருத்துவ பயன்களை தன்னுள் கொண்டுள்ளது. அவற்றில் சில பயன்களை இக்கட்டுரையில் காணலாம்

By R. Suganthi Rajalingam
|

குங்குமப் பூ கேசார் என்றும் அழைக்கப்படுகிறது. இது விலை உயர்ந்த பொருள். இதை கலரிங் ஏஜெண்ட்டாக பயன்படுத்துகின்றனர். இதை உணவில் சேர்க்கும் போது அழகான ஆரஞ்சு மஞ்சள் நிற வண்ணத்தை கொடுப்பதோடு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கிறது.

எனவே கொஞ்சம் இந்த குங்குமப் பூவை பாலில் கலந்து சாப்பிடும் போது நமது உடலுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன.

10 Saffron Milk (Kesar Doodh) Health Benefits That Will Shock You!

பண்டைய கிரேக்க காலத்தில் இந்த குங்குமப் பூவை சமையலிலும், அதே நேரத்தில் மருத்துவ பயன்களுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த குங்குமப் பூ பொதுவாக குரோஸஸ் சட்வைஸ் என்ற பூவிலிருந்து பெறப்படுகிறது. இந்த பூவின் சூலக முடிகளை பறித்து காய வைக்கும் போது மெரூன் மற்றும் மஞ்சள் நிற வண்ண குங்குமப் பூ கிடைக்கின்றன.

இதில் அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கரோட்டினாய்டு போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன. சாஃபிரானல் என்ற இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது. குங்குமப் பூ நிறைய உடல் நலக் குறைகளை எதிர்த்து போரிடுகிறது.

இதில் உள்ள மற்றொரு பொருளான குரோசின் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மேலும் இதில் விட்டமின் சி, மாங்கனீஸ் போன்ற இன்னும் நிறைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

எனவே இப்படி எண்ணற்ற நன்மைகளைத் தரும் குங்குமப் பூவை நம் உணவில் சேர்த்துக் கொள்ளவது நல்லது. ஒரு டம்ளர் பாலில் சிறுதளவு குங்குமப் பூ சேர்த்து குடித்தாலே போதும் அனைத்து நன்மைகளையும் எளிதாக பெறலாம்.

சரி வாங்க இப்பொழுது குங்குமப் பூ பாலின் ஆச்சரியமூட்டும் பயன்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இன்ஸோமினியாவை குணப்படுத்துகிறது

இன்ஸோமினியாவை குணப்படுத்துகிறது

குங்குமப் பூவில் உள்ள அதிகமான மாங்கனீஸ் ஒரு லேசான மயக்க மருந்து மாதிரி செயல்பட்டு நமது மூளையை ரிலாக்ஸ் ஆக வைத்து நமக்கு இரவில் நிம்மதியான தூக்கத்தை தருகிறது.

குங்குமப் பூ பால் தயாரிக்கும் முறை :

குங்குமப் பூ பால் தயாரிக்கும் முறை :

2-3 குங்குமப் பூக்களை எடுத்து சூடான பாலில் கலந்து 5 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும். பிறகு கொஞ்சம் தேன் சேர்த்து நன்கு கலந்து தூங்குவதற்கு முன்பு இந்த பாலை பருக வேண்டும். இந்த பால் இன்ஸோமினியா பிரச்சினைகளை சரி செய்து உங்களுக்கு நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும்.

நினைவாற்றல் அதிகரித்தல்

நினைவாற்றல் அதிகரித்தல்

குங்குமப் பூவில் அதிகமான குரோசின் இருப்பதால் அவை நமது எண்ணம் மற்றும் நினைவாற்றலை ஒருமுகப்படுத்துகிறது. எனவே தினமும் உணவிலோ அல்லது தினமும் ஒரு டம்ளர் பாலிலோ குங்குமப் பூ சேர்த்து குடித்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும்.

 மாதவிடாய் கால வலியை போக்குதல் :

மாதவிடாய் கால வலியை போக்குதல் :

குங்குமப் பூவில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் அடங்கியுள்ளது. எனவே ஒரு கப் குங்குமப் பூ பாலை சூடாக அருந்தும் போது அடி வயிற்று வலி, மாதவிடாய் வலி, அதிக இரத்த போக்கு போன்றவற்றை சரி செய்கிறது.

மன அழுத்தத்தை எதிர்த்து போரிடுகிறது

மன அழுத்தத்தை எதிர்த்து போரிடுகிறது

நீங்கள் மன அழுத்தம் மற்றும் மனக் கவலைகளால் கஷ்டப்பட்டால் ஒரு டம்ளர் குங்குமப் பூ பால் தினமும் சாப்பிடுங்கள். இவை மன அழுத்தத்தை எதிர்த்து போரிடுகிறது. குங்குமப் பூவில் கரோட்டினாய்டு, விட்டமின் பி போன்ற பொருட்கள் நமது மூளையில் உள்ள சொரோடோனின் மற்றும் மற்ற வேதியியல் பொருட்களை சரி செய்து மன அழுத்தத்தை குறைக்கிறது.

இதயத்திற்கு நல்லது

இதயத்திற்கு நல்லது

குங்குமப் பூவில் அதிகமான குரோசிடின் உள்ளது. இது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் ஆகும். குரோசிடின் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கிறது என்று நிறைய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.

 புற்று நோயை குணப்படுத்துதல்

புற்று நோயை குணப்படுத்துதல்

குங்குமப் பூ கொடிய நோயான புற்று நோயையும் குணப்படுத்துகிறது.இதிலுள்ள குரோசின் மற்றும் சாஃபிரானல் இரண்டுமே புற்று நோய் எதிர்ப்பு பொருட்களாக செயல்படுகின்றன.

எனவே தினமும் குங்குமப் பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் புற்று நோய் கட்டிகளை வளர விடாமல் தடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்று நோய் வருவதையும் தடுக்கிறது.

கீழ் வாதம் மற்றும் மூட்டு வலியை குறைத்தல்

கீழ் வாதம் மற்றும் மூட்டு வலியை குறைத்தல்

குங்குமப் பூவில் அதிகமான அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே தினமும் குங்குமப் பூ பால் அருந்தி வந்தால் திசுக்களில் உள்ள லாக்டிக் அமிலத்தை கரைத்து அழற்சியை போக்கி கீழ் வாத வலியை குணப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

குங்குமப் பூவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பொருளும் உள்ளது. தினமும் தூங்குவதற்கு முன் குங்குமப் பூ பால் அருந்தி வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்படும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

குங்குமப் பூவில் உள்ள குரோசிடின் நமது உடலில் இரத்த ஓட்டத்தை நன்றாக்கி இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இருப்பினும் அதிமான குங்குமப் பூ எடுத்துக் கொள்ள கூடாது. 2-3 குங்குமப் பூ துண்டுகளை மட்டும் எடுத்து சூடான பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒரு முறை என்ற விதத்தில் குடித்தால் போதும்.

இருமல் மற்றும் சளியை போக்குதல்

இருமல் மற்றும் சளியை போக்குதல்

குங்குமப் பூ இருமல், சளி மற்றும் தொண்டை புண் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த மருந்து. குறிப்பாக குளிர் காலத்திற்கு மிகவும் நல்லது. குங்குமப் பூ பாலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் போன்றவை சளியை போக்க பெரிதும் பயன்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Saffron Milk (Kesar Doodh) Health Benefits That Will Shock You!

10 Saffron Milk (Kesar Doodh) Health Benefits That Will Shock You!
Story first published: Monday, January 1, 2018, 16:28 [IST]
Desktop Bottom Promotion