30 வயதிற்கு மேல் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

முந்தைய காலத்தில் 50 வயதானாலும் நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் 30 வயதை எட்டியதுமே பலருக்கும் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சருமத்தில் சுருக்கம் மற்றும் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் என பல ஆரோக்கிய கோளாறுகளால் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் தான் முக்கிய காரணம். மேலும் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால், உடலில் உள்ள கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோன்கள் கண்ட உணவுகளின் மீது நாட்டத்தை அதிகரிக்கிறது.

Foods You Should Never Eat After Age 30

இதன் விளைவாக தற்போது அதிகம் விற்கப்படும் ஜங்க் உணவுகளின் மீது ஆவல் அதிகரித்து, ஆரோக்கியமற்ற அந்த உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர். இதனால் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் உட்பொருட்கள், உடலில் பல நோய்கள் வர வழிவகுக்கும். எனவே ஒருவர் நீண்ட நாட்கள் நோய் தாக்குதலின்றி ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள சில உணவுகளைத் தவிர்த்திடுங்கள். இப்போது 30 வயதிற்கு மேல் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுகள் எவையென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேன் சூப்

கேன் சூப்

தற்போது சூப்பர் மார்கெட்டுகளில் கேன் சூப்புகள் விற்கப்படுகின்றன. இன்ஸ்டன்ட் கேன் சூப்புகளில் பதப்படுத்தும் பொருட்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் உப்பு போன்றவை ஏராளமான அளவில் இருப்பதால், அவற்றை ஒருவர் 30 வயதிற்கு மேல் வாங்கி சமைத்து சாப்பிட்டால், அதன் விளைவாக அதில் உள்ள சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, அதன் விளைவாக இதய நோய்க்கும் வழிவகுக்கும். எனவே சூப் வேண்டுமானால், கடைகளில் வாங்கி சாப்பிடாமல், வீட்டிலேயே தயாரித்துக் குடியுங்கள்.

டயட் சோடாக்கள்

டயட் சோடாக்கள்

வயது அதிகரிக்கும் போது, உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்கிறேன் என்று பலர் டயட் சோடாக்களை வாங்கி குடிப்பார்கள். டயட் சோடாக்கள் பார்ப்பதற்கு கெமிக்கல் குறைவாக சேர்க்கப்பட்டிருப்பது போன்று இருக்கும். ஆனால் அவற்றில் நிறத்திற்காக புரோமினேட்டட் வெஜிடேபிள் ஆயில் மற்றும் ராக்கெட் எரிபொருள் மற்றும் எரிவதற்கு பயன்படும் ஒரு வகையான கெமிக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வுகளில் இந்த பானங்களைக் குடித்தால், அது தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் கருவளத்தைப் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த பானங்களில் உள்ள BVO, உடலினுள் அழற்சி அல்லது வீக்கத்தை உண்டாக்கி, உடல் பருமனை உண்டாக்கும். எனவே முதலில் இந்த பானங்களுக்கு குட்-பை சொல்ல வேண்டும்.

சுகர்-ப்ரீ ஸ்நாக்ஸ்

சுகர்-ப்ரீ ஸ்நாக்ஸ்

சுகர்-ப்ரீ உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த வகை உணவுகளை வாங்கி சாப்பிடுவதற்கு முன் நன்கு யோசியுங்கள். ஏனெனில் சுகர்-ப்ரீ உணவுகளில் சுவைக்காக செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த சுவையூட்டிகள் உடலில் டாக்ஸின்களை அதிகரித்து, கல்லீரல் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். ஆகவே சுகர்-ப்ரீ உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

சலாமி மற்றும் ஹாட் டாக்ஸ்

சலாமி மற்றும் ஹாட் டாக்ஸ்

பதப்படுத்தப்பட்ட உணவுகளான சலாமி மற்றும் ஹாட் டாக்ஸ் போன்றவற்றை ஆண்கள் சாப்பிட்டால், அது விந்தணு எண்ணிக்கையைக் குறைப்பதாக 2014 இல் பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்தது. மேலும் இவற்றில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதோடு, உடலில் கெட்ட கொழுப்புக்களை அதிகரித்து, உடல் பருமனை உண்டாக்கும். எனவே இம்மாதிரியான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

மைக்ரோவேவ் பாப்கார்ன்

மைக்ரோவேவ் பாப்கார்ன்

பாப்கார்ன் ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ். ஆனால் சில கம்பெனிகள், இந்த பாப்கார்னின் சுவையை அதிகரிக்கிறேன் என்று அத்துடன் பல செயற்கை சுவையூட்டிகளை சேர்த்து பாக்கெட் போட்டு விற்கின்றனர். மேலும் சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் பட்டர் பாப்கார்னில், 5 கிராம் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உள்ளன. அதாவது இவற்றில் ஒரு நாளைக்கு தேவையானதை விட இரண்டு மடங்கு அதிகமாக இந்த ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உள்ளன. ட்ரான்ஸ் கொழுப்புக்களானது கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இவை தான் இதய நோயின் அபாயத்தை அதிகரிப்பவை. வேண்டுமானால், வீட்டிலேயே பாப்கார்னை தயாரித்து சாப்பிடுங்கள்.

சோயா சாஸ்

சோயா சாஸ்

சோயா சாஸ் உப்பிற்கு சிறந்த மாற்றுப் பொருள் தன். ஆனால், சோயா சாஸில் ஏராளமான அளவில் சோடியம் நிறைந்துள்ளது. அதிலும் பாக்கெட் சோயா சாஸில் ஏராளமான அளவில் கெமிக்கல்களும், சோடியத்தின் அளவும் உள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸில் 879 மிகி சோடியம் நிறைந்துள்ளது. ஆகவே சோயா சாஸ் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.

காபி க்ரீமர்

காபி க்ரீமர்

காபி க்ரீமரில் டைடானியம் டைஆக்ஸைடு என்னும் ப்ளீச்சிங் ஏஜென்ட் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது. அதனால் தான் இது சற்று கெட்டியாக க்ரீம் போன்று உள்ளது. ஆய்வு ஒன்றில் எலியைக் கொண்டு மேற்கொள்ப்பட்ட ஆய்வில், காபி க்ரீமர் கொடுத்த எலிக்கு கல்லீரல் மற்றும் திசுக்கள் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் காபி க்ரீமரில் ட்ரான்ஸ் கொழுப்புக்களும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே 30 வயதிற்கு மேல் காபி க்ரீமர் பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

புரோட்டீன் பார்கள்

புரோட்டீன் பார்கள்

ஃபிட்டாக இருப்பதற்கு பலர் காலை உணவைத் தவிர்த்து, அதற்கு மாற்றாக எடையைக் குறைக்க உதவும் செரில்கள் அல்லது புரோட்டீன் பார்களை சாப்பிடுவார்கள். வயது அதிகரிக்கும் போது, ஒவ்வொரு வேளை உணவின் போதும் 20-30 கிராம் புரோட்டீனை சாப்பிடுவது சிறந்தது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் புரோட்டீன் பார்களில் சர்க்கரையின் அளவு அதிகம் மற்றும் ஒரு புரோட்டீன் பாரில் 10 கிராம் புரோட்டீன் தான் உள்ளது. இவற்றை சாப்பிட்டால் மதிய உணவு வரை பசி எடுக்காமல் இருக்காது. வேண்டுமானால், இந்த புரோட்டீன் பாருக்கு பதிலாக, வேக வைத்த முட்டிட மற்றும் ஆலிவ் ஆயில் தடவப்பட்ட முழு கோதுமை பிரட் டோஸ்ட் சாப்பிடலாம். இதனாலும் உடலுக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கும்.

மார்கரைன்

மார்கரைன்

வெண்ணெய்க்கு சிறந்த மாற்றாக மார்கரைன்கள் இருக்கும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த மார்கரைனில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த ஹைட்ரோஜினேட்டட் எண்ணெய்கள் அதிகம் உள்ளன. இந்த வகை கொழுப்பு இதய நோயுடன் தொடர்புடையது. அதே சமயம் இது சருமத்தில் முதுமை செயல்முறையையும் அதிகரிக்கும். எனவே இந்த மார்கரைன் பொருளையும் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Should Never Eat After Age 30

Here we listed some foods that you should never eat after age 30. Read on to know more...
Story first published: Wednesday, March 28, 2018, 12:20 [IST]