இந்த உணவுகளை சாப்பிடுங்க... சீக்கிரம் தொங்கும் தொப்பையைக் குறைக்கலாம்...

Posted By:
Subscribe to Boldsky

உலகில் உள்ள அனைவருக்குமே வாழ்நாள் முழுவதும் தொப்பை இல்லாமல் ஃபிட்டான கட்டுடலுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் சுவைமிக்க உணவுகளால் பலரது வாயைக் கட்டுப்படுத்த முடியாமல், சாப்பிடும் போது கட்டுப்பாடின்றி சாப்பிடுகிறோம். இதற்கு பரிசாக பலர் தொப்பையை பெறுகிறார்கள். இளம் வயதிலேயே தொப்பை வந்துவிட்டால், அது முதிய தோற்றத்தைக் கொடுக்கும். அதோடு பல நோய்களும் விரைவில் தொற்றிக் கொள்ளும்.

Flab Fighting Foods That Extremely Burns Your Fat

உணவுகளால் வந்த தொப்பையை உணவுகளின் மூலமே சரிசெய்யலாம். ஆனால் என்ன அதற்கு சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதோடு குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இயற்கை நமக்கு தந்த சில உணவுகள் நட் உடலில் கொழுப்புக்களைக் கரைக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும். அந்த உணவுகளை உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் உட்கொண்டு வந்தால், அசிங்கமான தொங்கும் தொப்பையைக் குறைத்து, தட்டையான வயிற்றைப் பெறலாம்.

சரி, இப்போது கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் உணவுகள் எவையென்று காண்போம். அதைப் படித்து அவற்றை அன்றாட உணவில் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும். பக்கவாதம், சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் அபாயத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்கும் மற்றும் இதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரம்பிக்கச் செய்யும்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவு. இது உடலில் இருந்து தேவையில்லாத உப்புகள் மற்றும் திரவங்களை வெளியேற்றி, சிறுநீரக பாதைத் தொற்றுகள் மற்றும் வயிற்று உப்புசத்தைத் தடுக்கும். இதில் உள்ள ஃபோலிக் அமிலம், கர்ப்பிணிகளுக்கு மற்றும் கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது.

அவகேடோ

அவகேடோ

அவகேடோவில் வைட்டமின்களான வைட்டமின் கே, பி, மற்றும் ஏ அதிகளவில் உள்ளது. இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். மேலும் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மற்றும் இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலி கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் மற்றும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே, எலும்புகள் மற்றும் இதயத்திற்கு நல்லது. அதோடு இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றம் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இந்த காய்கறி இரத்த சர்க்கரை அளவில் உள்ள பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவியாக இருக்கும்.

முளைக்கட்டிய ஃபுருஸல்ஸ்

முளைக்கட்டிய ஃபுருஸல்ஸ்

இதில் புரோட்டீன்கள் அதிகம் மற்றும் இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே, இதய நோய் மற்றும் சர்க்கரை நோயைக் குறைப்பதோடு, உடலின் ஆற்றலை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவர்

காலிஃப்ளவரில் உள்ள வைட்டமின் கே, எலும்புகளை வலிமைப்படுத்தும், நினைவாற்றலை மேம்படுத்தும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கும். அதோடு உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீ மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்கும். அதோடு இது சர்க்கரை நோய், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். க்ரீன் டீயை உடல் பருமன் உள்ளவர்கள் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் மேம்பட்டு, உடல் எடை குறைய க்ரீன் டீ உதவும்.

பச்சை தக்காளி

பச்சை தக்காளி

சிவப்பு தக்காளியை விட பச்சை தக்காளியில், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் கே சத்துடன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் உள்ளது. இது இரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் பச்சை தக்காளி உடல் எடையையும் குறைக்க உதவும். ஆகவே இதை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய்

பச்சை மிளகாய்

பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், தலைவலி மற்றும் உடலி உள்ள வீக்கத்தைக் குறைக்கும். இதில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதோடு, அதிகளவு திரவத்தை வியர்வையின் வழியே வெளியேற்றும்.

கேல்

கேல்

கேல் கீரையில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே, இதய நோய் அபாயம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். இந்த கீரை எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் கொழுப்பு ஏதும் இல்லை. அதோடு இந்த கீரையில் இரும்புச்சத்து அதிகம். ஆகவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு நல்லது.மேலும் இந்த கீரை மெட்டபாலிசம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.

சாத்துக்குடி

சாத்துக்குடி

சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிகம். இது ஸ்கர்வியை எதிர்த்து பாதுகாப்பு அளிக்கும். இதில் உள்ள ஆன்டி-பயாடிக், பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்வதாடு, உடலில் வீசும் துர்நாற்றத்தையும் போக்கும். அதோடு சாத்துக்குடியில் உள்ள அமிலத்தன்மை டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றி, உடல் எடை குறையச் செய்யும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கும். மேலும் இந்த எண்ணெய் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நோயெதிர்ப்பு மண்டல வலிமை மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இந்த எண்ணெய் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்வதோடு, மனநிலையின் ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் கொழுப்பு குறைவு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே அதிகம். இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையையும் குறைக்கும். மேலும் இந்த கீரையை சாப்பிட்டால், சரும ஆரோக்கியம் மேம்படும், எலும்புகள் வலிமைப் பெறும், டாக்ஸின்கள் வெளியேற்றப்படும்.

உடற்பயிற்சி அவசியம்

உடற்பயிற்சி அவசியம்

உணவுகள் மட்டும் ஒருவரது உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவாது. உடற்பயிற்சிகளும் அவசியம் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சியை மேற்கொள்வதால், உடலின் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, நுரையீரல் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் ஜிம் சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை, ரன்னிங், நீச்சல், வேகமான நடைப்பயிற்சி போன்ற எளிமையான பயிற்சிகளை செய்தாலே போதும்.

இனிப்புகளுக்கு குட்-பை சொல்லுங்கள்

இனிப்புகளுக்கு குட்-பை சொல்லுங்கள்

சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களுக்கு முதலில் குட்-பை சொல்லுங்கள். ஏனெனில் உடலினுள் செல்லும் அதிகப்படியான சர்க்கரை தான் கொழுப்புக்களாக மாற்றப்பட்டு, உடலினுள் ஆங்காங்கு தேங்குகிறது. எனவே எடையைக் குறைக்க வேண்டுமானால், இனிப்பு பண்டங்கள் பக்கமே செல்லாதீர்கள். மேலும் மாலை 6 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவு உண்பதைத் தவிர்த்திடுங்கள். முக்கியமாக நொறுக்குத்தீனிகளை இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Flab Fighting Foods That Extremely Burns Your Fat

Eating healthier foods can produce or enhance various fat burning hormones, resulting in weight loss. There are so many different types of foods, which do wonders for the gut. Here are some flab fighting foods that extremely burns your fat. Read on...