ஆண்கள் சந்திக்கும் விறைப்புத்தன்மை குறைபாட்டைப் போக்கும் சில 'வயாகரா' உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

வயாகரா என்பது பாலுணர்ச்சியைத் தூண்டி படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவும் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வயாகரா ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வளிக்கக்கூடியது. விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கும் ஆண்கள் வயாகராவை உபயோகித்தால் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்படலாம்.

பெரும்பாலான ஆண்கள் வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தைப்படும் ஓர் பாலியல் பிரச்சனை தான் விறைப்புத்தன்மை குறைபாடு. இந்த குறைபாடு உள்ள ஆண்கள் மலட்டுத்தன்மையற்றவர்களாகவே கருதப்படுகிறார்கள். உலகில் சுமார் 80 மில்லியன் ஆண்கள் இந்த விறைப்புத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்படுகிறார்கள்.

Best Foods That Work Like Viagra

இந்த பிரச்சனை குறித்து மருத்துவர்களிடம் பேச கூட பல ஆண்கள் கூச்சப்படுகிறார்கள். ஆனால் இதுக்குறித்து பேச எவ்வித கூச்சமும் கொள்ளத் தேவையில்லை. ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை உடலில் உள்ள சில தீவிர ஆரோக்கிய பிரச்சனைகளாலும் ஏற்படலாம். எனவே இப்பிரச்சனைக் குறித்து மருத்துவரிடம் அவசியம் பேச வேண்டும்.

ஆண்கள் சந்திக்கும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு ஏராளமான மருந்துகள் கடைகளில் விறகப்படலாம். ஆனால் உணவுகளின் மூலமே விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு எளிதில் தீர்வு காணலாம்.

இக்கட்டுரையில் வயாகரா போன்று செயல்பட்டு விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வளித்து, ஆரோக்கியமான காதல் மற்றும் மண வாழ்க்கைக்கு உதவும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதுளை

மாதுளை

மாதுளை உடலின் ஆற்றலை மேம்படுத்துவதோடு, இரவு நேரத்தில் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும். ஏனெனில் மாதுளை வயாகரா போன்று செயல்பட்டு ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு உதவுகிறது. மாதுளையில் உள்ள வளமான அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட், அந்தரங்க பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே உங்கள் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்க நினைத்தால், மாதுளை ஜூஸைக் குடியுங்கள்.

தர்பூசணி

தர்பூசணி

சமீபத்திய பல ஆய்வுகளில் தர்பூசணி வயாகரா போன்று செயல்படும் பழங்களுள் மிகச்சிறப்பானதாக தெரிய வந்துள்ளது. ஒரு துண்டு தர்பூசணி காதல் வாழ்க்கையை பரவசப்படுத்தும். தர்பூசணியில் உள்ள சிட்ருலின் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, அர்ஜினைன் என்னும் கெமிக்கலை உற்பத்தி செய்து, நைட்ரிக் ஆக்ஸைடை உருவாக்குகிறது. நைட்ரிக் ஆக்ஸைடு பாலியல் வாழ்வில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஏனெனில் இது உணர்வுகளைத் தூண்டிவிடுவதோடு, நீண்ட நேரம் விறைப்பை தக்க வைக்கும்.

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, முட்டைக்கோஸ் போன்றவை வயாகரா போன்று செயல்படுபவைகளாகும். இவற்றில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்கும் ஹார்மோன்களை வெளியிடச் செய்வதோடு, உடலின் ஆற்றலையும் மேம்படுத்தும். முக்கியமாக பசலைக்கீரை பெண்களுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள மாங்கனீசு, பெண்களின் கருவளத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

பூசணி விதைகள்

பூசணி விதைகள்

விதைகளுள் ஒன்றான பூசணி விதை வயாகரா போன்று செயல்படும் உணவுப் பொருட்களுக்கு சிறப்பான ஒன்று. இதில் உள்ள ஜிங்க் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், செக்ஸ் ஹார்மோன்களின் அளவை அதிகரித்து, படுக்கையில் துணையுடன் சிறப்பாக செயல்பட உதவி புரியும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் பாலுணர்ச்சியை தூண்டிவிடும் உணவுப் பொருட்களுள் ஒன்று. இந்த சிறப்பான நேச்சுரல் வயாகரா மனநிலையை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். இந்த டார்க் சாக்லேட்டில் உள்ள கெமிக்கல்களான செரடோனின் மற்றும் பினிஎத்திலமைன் பாலுணர்ச்சி ஊக்குவிக்கும். ஆகவே ஆண்கள் தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லது.

மிளகாய் தூள்

மிளகாய் தூள்

மிகவும் காரமான மிளகாய் தூள் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, இரவு நேரத்தில் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்படவும் உதவும். இதில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், அந்தரங்க பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாலுணர்ச்சியைத் தூண்டி, துணையைத் திருப்திப்படுத்த உதவியாக இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியும் வயாகரா போன்று செயல்படும் பழங்களுள் ஒன்று. இதில் உள்ள வளமான அளவிலான வைட்டமின் சி, விந்தணுவின் தரத்தை மேம்படுத்தும். ஆண்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தை கிடைக்கும் போதெல்லாம் சாப்பிட்டால், அவர்களது பாலியல் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி, நீண்ட நேரம் ஆற்றலுடன் உடலுறவில் ஈடுபட உதவியாக இருக்கும். மேலும் வாழைப்பழத்தை ஆண்கள் தினந்தோறும் உட்கொண்டு வந்தால், அவர்களது உடலில் ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும்.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

உடலின் ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள் பாலியல் வாழ்வில் திருப்தியை வழங்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. நட்ஸ்களில் உடலின் ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் விந்தணுவின் தரத்தை அதிகரிக்கும் வைட்டமின் பி3 அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரங்களில் நட்ஸ் மற்றும் உலர் பழங்களை சாப்பிடுங்கள்.

கடல் சிப்பி

கடல் சிப்பி

கடல் சிப்பியில் செக்ஸ் கனிமச்சத்தான ஜிங்க் ஏராளமாக நிறைந்துள்ளது. ஜிங்க் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் அந்தரங்க உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். உடலுறவில் ஈடுபடும் முன் கடல் சிப்பியை சாப்பிடுங்கள், இது வயாகரா போன்று செயல்பட்டு, உடலுறவின் போது முழு திருப்தியை வழங்கும்.

உலர் திராட்சை

உலர் திராட்சை

உலர் திராட்சை பாலுணர்ச்சியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களுள் ஒன்று. பொதுவாக பாலியல் பிரச்சனைகளான விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு அர்ஜினைன் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த அர்ஜினைன் உலர் திராட்சையில் அதிகம் உள்ளது. எனவே ஆண்கள் உலர் திராட்சையை தினமும் சிறிது சாப்பிட பாலியல் பிரச்சனைகள் நீங்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் பாலுணர்ச்சியைத் தூண்டும் மிகச்சிறந்த உணவுப் பொருள். இந்த ஓட்ஸ் உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுவதோடு, டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ரோஜென் அளவை சரியான அளவில் பராமரிக்க உதவி புரியும். எனவே அவ்வப்போது ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய்

பச்சை மிளகாய்

உணவில் பச்சை மிளகாயை சேர்ப்பதனால் உடல் பருமன் மற்றும் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, உடலின் அனைத்து பகுதிகளுக்கும், குறிப்பாக அந்தரங்க பகுதிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாலுணர்ச்சியை அதிகரிக்கும். குறிப்பாக பச்சை மிளகாய் எண்டோர்பின்களின் உற்பத்தியைத் தூண்டி, மனநிலையை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோவில் உள்ள வைட்டமின் பி6, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொழுப்புக்கள் மற்றும் ஃபோலிக் அமிலம், உடலின் ஆற்றலை அதிகரிக்கும். முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் பி6, ஆண்களின் உடலில் ஹார்மோன் உற்பத்திக்கு உதவும். மேலும் இது தான் ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைக்கும் தீர்வளிக்கவும் செய்கிறது.

பாதாம்

பாதாம்

நட்ஸ்களில் ஒன்றான பாதாமில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், ஆண் ஹார்மோன்களின் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானவைகளாகும். எனவே ஆண்கள் அன்றாடம் பாதாமை சாப்பிட்டு வந்தால், அது அவர்களது பாலியல் வாழ்வை சிறக்கச் செய்வதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். முக்கியமாக உப்பு இல்லாத பாதாமை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

முட்டை

முட்டை

முட்டையில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி5 ஏராளமான அளவில் உள்ளது. இந்த வைட்டமின்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை நிலையாக வைத்துக் கொள்வதோடு, மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும் செய்யும். முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால், அது பாலுணர்ச்சியை அதிகரித்து, பாலியல் வாழ்க்கையை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

ஏலக்காய்

ஏலக்காய்

தர்பூசணிக்கு அடுத்தப்படியாக சிறந்த வயாகராப் பொருளாக கருதப்படுவது ஏலக்காய் ஆகும். ஏலக்காயில் உள்ள சினோல், அந்தரங்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே குடிக்கும் டீயில் ஒரு ஏலக்காயை தட்டிப் போட்டு குடியுங்கள். இல்லாவிட்டால் அன்றாட உணவுகளில் ஏலக்காய் பொடியைத் தூவி உட்கொள்ளுங்கள்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸில் உள்ள வைட்டமின் ஈ, பாலுணர்ச்சியை அதிகரிக்கத் தேவையான முக்கியமான சத்தாகும். இதில் உள்ள ஃபோலேட் கருவுற நினைக்கும் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. எனவே பெண்கள் அஸ்பாரகஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், விரைவில் கருத்தரிக்க முடியும்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும். முக்கியமாக இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்றவை அதிகம் உள்ளது. இவை அனைத்தும் பாலியல் உணர்வை தூண்டிவிட்டு, காதல் வாழ்க்கையை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

கீரைகளுள் ஒன்றான பசலைக்கீரை பாலியல் ஆசையை அதிகரிக்கும். அதோடு இது விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கும் நல்ல தீர்வளிக்கும். எனவே நீங்கள் கடைக்கு செல்லும் போது பசலைக்கீரையைப் பார்த்தால், தவறாமல் அதை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். இதனால் உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும் மற்றும் பாலியல் வாழ்க்கையும் சிறக்கும்.

செலரி

செலரி

செலரி பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுகளுள் ஒன்று எனத் தெரியுமா? ஆம், ஆண்கள் செலரியை சாப்பிடும் போது, ஆணின் வியர்வையில் பெரோமோன் அளவை அதிகரித்து, பெண்களைக் கவரச் செய்யும். இதனால் தம்பதியர்களின் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், அந்தரங்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதற்காக ஒரே ஒரு முறை உணவில் சேர்த்ததும் பலன் ஏதும் தெரியாது. தொடர்ந்து ஒரு மாதம் உணவில் சேர்த்து வரும் போது தான் உண்மையான பலனைக் காண முடியும். உங்களான பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட முடியாவிட்டால், அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Foods That Work Like Viagra

Food and dietary products also help you overcome erectile dysfunction problem easily. In this article you can find best foods that work like Viagra and helps you lead healthy and happy marital life.
Subscribe Newsletter