TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
தினமும் இந்த உணவுகளை நீங்கள் தவறான முறையில் சாப்பிடுகிறீர்கள் என்று தெரியுமா?
குறிப்பிட்ட சில பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளும் முறையால், அது வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் உடைக்கப்படுகிறது என்பது தெரியுமா? அதாவது பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு துண்டுகளாக்கவோ, வேக வைக்கவோ அல்லது சமைக்கவோ செய்வோம். இப்படி தவறான வழியில் உணவுகளை உட்கொண்டால், ஊட்டச்சத்துக்களின் அளவு குறைந்து பெறும் நன்மைகளின் அளவும் குறையும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு, அவற்றின் தோலை உரித்தாலோ, ஆவியில் வேக வைக்காமல் முழுமையாக வேக வைத்தாலோ குறையும். எனவே எந்த காய்கறி மற்றும் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இப்படி தெரிந்து வைத்திருப்பதால், செரிமானம் சிறப்பாக நடைபெற்று, ஊட்டச்சத்துக்கள் முறையாக உடலால் உறிஞ்சப்படும்.
சொல்லப்போனால் ஒருவருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கு உணவுப் பொருளை தவறான முறையில் எடுப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த கட்டுரையில் எந்த உணவுப் பொருளை எப்படி சாப்பிடக்கூடாது மற்றும் சாப்பிட வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
ப்ராக்கோலி
ப்ராக்கோலியை நீரில் போட்டு கொதிக்க வைத்தால், அதில் உள்ள வைட்டமின் சி 22 முதல் 34 சதவீதம் குறைவதோடு, இதர ஊட்டச்சத்துக்களும் நீரில் சென்றுவிடும். இதனால் ப்ராக்கோலியில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போகும். ஆகவே ப்ராக்கோலியில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கான சிறந்த வழி ஆவியில் வேக வைப்பது, மைக்ரோ ஓவன் அல்லது குக்கரில் வேக வைப்பது. இதனால் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர சத்துக்கள் 90 சதவீதம் தக்க வைக்கப்படும்.
உருளைக்கிழங்கு
பெரும்பாலானோர் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு முன்பே சிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு கழுவி, அதில் உள்ள சத்துக்களை முழுமையாக வெளியேற்றிவிடுகிறோம். ஆனால் சிறந்த வழி என்றால் உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக வெட்டி, தோலுடன் நீரில் போட்டு 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதனால் உருளைக்கிழங்கின் தோலில் உள்ள நார்ச்சத்து மற்றும் உருளைக்கிழங்கில் தக்க வைக்கப்படும்.
ஆளி விதை
ஆளி விதையில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள், ஏராளமான நார்ச்சத்து உள்ளது. ஆளி விதையை முழுமையாக அப்படியே சாப்பிடுபவராக இருந்தால், நீங்கள் தவறாக சாப்பிடுகிறீர்கள். ஏனெனில் உடலால் முழுமையான ஆளி விதையை உடைக்க முடியாமல், உடலுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் போகும். சிறந்த வழி என்றால், ஆளி விதையை அரைத்து பொடி செய்து, ஸ்மூத்தியின் மேலே தூவியோ அல்லது சாலட்டின் மீது தூவியோ சாப்பிடலாம்.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸை சாப்பிடும் சிறந்த வழி என்றால் அது ஆவியில் வேக வைத்து உண்பது. இந்த வழியால், ஊட்டச்சத்துக்கள் இழக்காமல் தக்க வைக்கப்படும். மேலும் ஆவியில் வேக வைப்பதால் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் எதுவும் அதிகரிக்காமல் இருக்கும். அதே சமயம் முட்டைக்கோஸை அளவுக்கு அதிகமாக வேக வைப்பதைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால், அது கசப்பாகிவிடும்.
வெங்காயம்
சாலட், பர்கர், சாண்விட்ச் போன்றவற்றில் வெங்காயத்தை பச்சையாக சேர்ப்போம். அதேப் போல் சமைக்கும் போது, தாளிப்பதற்கு வெங்காயத்தை சேர்ப்போம். இது தவறான விஷயம் அல்ல. இருப்பினும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது, அதில் உள்ள சல்பர் கொழுப்புக்களை உடைத்தெறிய உதவுவதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
ஸ்ட்ராபெர்ரி
எல்லோருக்குமே ஸ்ட்ராபெர்ரி பிடிக்கும். இந்த ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவதற்கான சரியான முறை முழுமையாக சாப்பிடுவது தான். ஸ்ட்ராபெர்ரியில் 8-12 சதவீதம் வைட்டமின் சி உள்ளது. ஸ்ட்ராபெர்ரியை வெட்டினால், அதில் உள்ள வைட்டமின் சி-யின் அளவு குறைந்துவிடும். ஏனெனில் இப்பழம் வெளிச்சம் மற்றும் ஆக்ஸிஜனுக்கு சென்சிடிவ் என்பதால், வைட்டமின் சி உடைந்து குறைகிறது.
ஆப்பிள்
பெரும்பாலானோர் ஆப்பிள் சாப்பிடும் போது, அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிட்டால், முக்கியமான சத்தை நீங்கள் இழக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆப்பிளின் தோலில் ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமான அளவில் உள்ளது. ஆப்பிள் தோலை நீக்கிவிட்டால், வயிறு நிரம்புவது, கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற நன்மைகளைப் பெற முடியாமல் போகும். எனவே ஆப்பிளின் முழு சத்தையும் பெற நினைத்தால், தோலுடன் சாப்பிடுங்கள்.
நட்ஸ்
நட்ஸை பச்சையாக அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் அதில் லெக்டின்கள் மற்றும் பைட்டிக் அமிலம் உள்ளது. இவை முறையாக செரிமானமாகாமல் தடுக்கும். இப்படி செரிமானத்தில் இடையூறை ஏற்படுத்துவதால், ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போகும். ஆகவே எப்போதும் நட்ஸை சாப்பிடுவதாக இருந்தால், ஊற வைத்து சாப்பிடுங்கள். அதுவும் வால்நட்ஸ் மற்றும் வேர்க்கடலை போன்றவற்றை 12 மணிநேரமும், பாதாம், முந்திரி போன்றவற்றை 6-7 மணிநேரமும் ஊற வையுங்கள்.
வாழைப்பழம்
நீங்கள் வாழைப்பழத்தை தவறான வழியில் உட்கொள்கிறீர்களா? பெரும்பாலானோர் வாழைப்பழத்தை எதோடும் சேர்த்து சாப்பிடமாட்டார்கள். ஆனால், ஊட்டச்சத்து நிபுணர்கள் வாழைப்பழத்தை சில வகையான கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான பாதாம் வெண்ணெய் அல்லது வேர்க்கடலை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிடுவதே நல்லது என்று பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகளவில் இருப்பதால், இந்த வெண்ணெகளுடன் சேர்த்து சாப்பிட வளர்சிதை மாற்றம் செய்ய உதவியாக இருக்கும்.
பசலைக்கீரை
பசலைக்கீரையை பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக ஆவியில் வேக வைத்தால், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சத் தடையாக இருக்கும் ஆக்சாலிக் அமில அளவைக் குறைத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, நார்ச்சத்து, ஜிங்க், கால்சியம், புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களை உடல் உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.
இறைச்சி மற்றும் கடல் உணவுகள்
இறைச்சிகள் மற்றும் கடல் உணவுப் பொருட்களைச் சமைக்கும் போது உயர் வெப்பநிலையில் சமைத்து சாப்பிடுவது என்பது தவறானது. ஏனெனில் இவ்வாறு உயர் வெப்பநிலையில் சமைக்கும் போது, இந்த உணவுகளில் உள்ள புரோட்டீன் மாற்றமடைந்துவிடும். எனவே இறைச்சிகள் மற்றும் கடல் உணவுகளை சமைக்கும் போது, குறைவான வெப்பநிலையில் சமையுங்கள். இதனால் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜெனிக் பொருட்களான ஹெட்ரோசைக்கிளிக் அமைன்களின் உற்பத்தி குறைக்கப்படும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களானவை அன்றாடம் நாம் தவறான முறையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முக்கிய உணவுப் பொருட்களாகும். எனவே இனிமேல் இந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் போது, சரியான முறையில் சாப்பிடும் முறையைத் தெரிந்து கொண்டு, தவறான முறையில் சாப்பிடுவதைத் தவிர்த்து, அந்த உணவுப் பொருட்களின் மூலம் கிடைக்கும் முழு நன்மைகளையும் பெறுங்கள்.