அசைவத்தை விட சைவ உணவு ஏன் உடலுக்கு நல்லது என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

சைவ உணவுத் திட்டத்தைப பின்பற்றினால் அதில் ஏழு அற்புத நன்மைகள் உள்ளன என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. பிரிட்டீஷ் மருத்துவப் பத்திரிகை 39 வயது முதல் 60 வயது வரை உள்ள 6000 சைவ உணவுக்காரர்களையும், 5000 அசைவ உணவுக்காரர்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்தது.

Why veg foods are better than non-veg foods

சைவ உணவுக்காரர்கள், 40க்கும் குறைவாகவே புற்றுநோயால் இறக்கும் அபாயம் இருந்தது.

மற்ற வியாதிகளால் இறக்கும் அபாயம் 20 தான் இருந்தது. அசைவ உணவுக்காரர்கள் உடலில் இறப்பு அபாயம் அதிகம் இருந்தது. கொலாஸ்டிரல், புற்றுநோய் அறிகுறிகள் பரவலாகக் காணப்பட்டன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 செல் வளர்ச்சி :

செல் வளர்ச்சி :

அசைவ உணவுக்காரர்களைவிட சைவ உணவுக்காரர்களின் உடலில் வளர்ச்சி மாற்றம் பதினோரு சதவிகிதம் மெதுவாக நடைபெறுகிறது. குறைந்த அளவு கலோரி உணவு என்பதால் செல்களும் அழியாமல் இருக்கின்றன.

எனவே, காலையில் நம்பிக்கையுடன் எழும் உத்தரவாதம் உண்டு. அசைவ உணவு திடீர் ஸ்டிரைக் செய்து உடல் நலக்குறைவை ஏற்படுத்தும்.

சைவ உணவு மலிவானது. தினமும் அசைவம் சேர்த்துக்கொண்டால் உடல் நலம் கெடுவதுடன், ஏகப்பட்ட செலவு உணவிற்கே போய்விடும்.

நோய் விலகும் :

நோய் விலகும் :

பால் அருந்தும்போது கூட விஷ மருந்துகள் நம் உடலுக்குள் போய்விடுகின்றன. ஆனால் பழம், காய்கறிகளில் இப்படி இல்லை. காய்ச்சல் வருவதுபோல் இருந்தால் சாதாரணப் புடலங்காயைச் சாப்பிட்டால் போதும்.

இதில் எல்லாவகையான தாது உப்புக்களும் இருப்பதால் உடனடியாகக் காய்ச்சல் குறைகிறது. ஆக, சைவ உணவு என்பது மருந்தைப் போல் செயல்படுகிறது.

ஞாபக சக்தி :

ஞாபக சக்தி :

துரித உணவகங்களில் விற்கப்படும் அசைவ உணவுவகைகளைச் சாப்பிட்டுவிட்டு வந்தவர்களிடம் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களின் ஞாபகசக்தி, புலன் உணர்வு, எச்சரிக்கை உணர்வு முதலியன மிகவும் சராசரியாக இருந்தன.

சுற்றுப்புற ஆரோக்கியம் என்ற இதழில் இந்த உண்மை வெளியானது. ஆனால் பழங்கள், காய்கறிகளிலும் இந்த உப்பு ஓரளவு கிடைப்பதால் எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள்.

மந்தத் தன்மை :

மந்தத் தன்மை :

கொழுப்பு அதிகம் கொண்ட விலங்குகளைச் சாப்பிடும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது. மந்தப் புத்தியும் இயலாமையும் சேர்ந்து கொள்கின்றன. இரத்தக் குழாய்களில் தடை ஏற்படுகிறது.

இதயத்திற்கு நண்பன் :

இதயத்திற்கு நண்பன் :

எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் ஆர்வமாக வாழக் கீரைகளில் உள்ள இரும்புச் சத்தும், வைட்டமின் ‘சி'யும் உதவுகின்றன. இதனால் எல்லா உறுப்புகளுக்கும் இரத்தமும், ஆக்ஸிஜனும் நன்கு செயல்படுகிறது. ஆண்மைக்குறைவு, இருதய அடைப்பு முதலியன ஏற்பட வாய்ப்பில்லை. இந்த நன்மைகள் பழங்கள், காய்கறிகளில்தான் தாராளமாகக்க கிடைக்கின்றன.

உடல் பருமன் :

உடல் பருமன் :

உடல் வேகமாக குண்டாவதற்கு அசைவ உணவு காரணமாகிறது. ஆனால், சைவ உணவில் உள்ள கொண்டைக்கடலை, சோளம் போன்ற தானியம் மற்றும் பருப்பு வகைகள்கூட இரத்தக் கொதிப்பு, உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்கின்றன.

இவற்றில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை இரத்தக்கொதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்கின்றன. தேங்காய், சோளம் முதலியவற்றில் உள்ள துத்தநாக உப்பு உடலைக் கொழுக்கவிடாமல் இராணுவக் கட்டுப்பாட்டுன் பாதுகாக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why veg foods are better than non-veg foods

Reasons are here for veg foods are better than non-veg foods
Please Wait while comments are loading...
Subscribe Newsletter