For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் முளைவிட்ட தானியங்களை நாம் கட்டாயம் சாப்பிட வேண்டும் என தெரியுமா?

முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதல் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகளை இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

|

முளைவிட்ட தானியங்கள் ஒரு முழுமையான உணவாக இருந்தாலும் இன்னும் மக்கள் அதை தினசரி உணவாகப் பயன்படுத்துவதில்லை. இப்போதுதான் ஜிம்மில் செல்பவர்கள், டயட் இருப்பவர்கள் என சிறிது உண்ணத் தொடங்குகிறோம். இருப்பினும் தினசரி உணவுகளில் இதனை சாப்பிடாமல் இருப்பது கவலைக்குரியதே.

பழைய காலங்களில் முளைவிட்ட பயறு வகைகள், தினசரி உணவின் ஒரு பாகமாக இருந்தது.

மனிதன் சாப்பிடும் உணவுகளில், ஒரு பிடி முளைவிட்ட தானியத்தில் கிடைக்கும் சத்து, வேறு எந்த உணவின் ஒரு பிடியிலும் இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஆயுள் நீடிப்பு :

ஆயுள் நீடிப்பு :

ஒருவரின் வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய தன்மைகொண்ட என்சைம்ஸ், முளைவிட்ட தானியத்தில் மிக அதிகமாக உள்ளது.

உடல் தளர்ந்துபோன நிலையில், என்சைம்ஸ் நிறைந்த முளைவிட்ட பயிரைச் சாப்பிடும்போது புத்துணர்ச்சி பிறக்கிறது. முளைவிட்ட தானியங்கள் மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரம் என்று சொல்லலாம்.

விட்டமின் சி :

விட்டமின் சி :

ஒரு தானியத்தில் உள்ள வைட்டமின் சக்தி, முளைவிடும் போது பன்மடங்காகிறது. முளைவிட்ட கோதுமையில் வைட்டமின் சி, அறுநூறு சதவிகிதம் அதிகமாகிறது. ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் ‘சி' அளவைவிட இது அதிகம்.

பச்சைப்பயிறு :

பச்சைப்பயிறு :

மற்ற முளைவிட்ட தானியங்களைவிட, முளைவிட்ட பச்சைப்பயிறுக்கு வயிற்றில் அதிக வாய்வை உண்டாக்காத தன்மை கொண்டது.

இதனால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவு. கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி ஆகியவை மட்டுமல்ல, அளவற்ற வைட்டமின் சி-யும் நிறைந்தது.

 நொதிகள்

நொதிகள்

பச்சைப்பயிறு முளைவிடாதபோது, அதில் உள்ள ட்ரிப்சின், புரதத்தை ஜீரணம் செய்யும் என்சைம்களைத் தடை செய்கிறது.

அதுவே, பயறு முளைவிட்டதும் அதில் உள்ள ட்ரிப்சின் (trypsin) குறைகிறது. முளைவிட்ட பயிரை வேகவைக்கும்போது, ட்ரிப்சின் முற்றிலும் நீங்கிவிடுகிறது. வேகவைப்பதால், இதில் உள்ள புரதச் சத்து குறைவதில்லை.

சாலட் :

சாலட் :

முளைவிட்ட தானியத்தைத் தயார் செய்ய, தண்ணீரும் காற்றுமே போதுமானது. தானியத்தை நீரில் ஊறவைத்தால், அரை நாளில் அவை முளைவிடத் தொடங்கும். இதனை நறுக்குவதோ, தோல் சீவுவதோ அவசியமில்லை.

பிறகு உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். இதைக்கொண்டு எளிதில் தயாரிக்கப்படும் சாலட் மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்

ஆரோக்கியம் :

ஆரோக்கியம் :

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் குக்கிராமங்கள் வரை, முளைவிட்ட பயிறு எளிதில் கிடைக்கும். மற்ற உணவுகளைவிட மிகக் குறைந்த விலையில் கிடைத்தாலும், தனது சத்துக்களால் அனைத்தையும்விட மிக அதிக அளவில் சிறப்பாக இருக்கின்றன முளைவிட்ட தானியங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why should you add sprout in your diet eveyday

This is why should you add sprouts in your diet everyday. Reasons detailed in this article.
Story first published: Saturday, March 18, 2017, 15:24 [IST]
Desktop Bottom Promotion