பல்லாண்டு காலம் வாழனும்னா நீங்க குடிக்க வேண்டிய பால் எது தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு விதமான பாலுக்கும் ஒவ்வொரு நிறைகளும் குறைகளும் உள்ளன. இது ஒரு நபரின் டயட், உடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து தேவை, அவருக்கு பிடித்த சுவை இவற்றை பொருத்து வேறுபடும். இன்று குழந்தைகள், இளம் தலைமுறையினர்கள், கர்ப்பமாக உள்ள பெண்கள் என அனைவருக்கும் பாலில் உள்ள விட்டமின் டி, புரோட்டின், கால்சியம் ஆகியவை தேவைப்படுகின்றன.

which type of milk is good for your health

மறுபுறம் பார்க்கும் போது, அதிக கலோரிகள், கொழுப்பு, உடல் எடை அதிகரிப்பு, இருதய ஆரோக்கியம் போன்றவற்றிற்காக சிலர் பாலை தவிர வேறு சில ஆதாரங்களை தேடவேண்டியுள்ளது. மற்ற பால்களை காட்டிலும், முழுமையான பசும்பாலில் அதிக கலோரிகளும், கொழுப்பும் உள்ளது.

ஒவ்வொரு வகையான பாலுக்கும் ஒரு சில நிறைகளும் குறைகளும் உள்ளன. இவற்றில் உங்களுக்கு எந்த பால் ஏற்றது என்பதை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழுமையான பால்

முழுமையான பால்

மாட்டின் முழுமையான பால் என்பது கொழுப்பு நீக்கப்படாமல் இருக்கும், கரந்த பால் ஆகும். இந்த ஒரு கப் பாலில் 8 கிராம் கொழுப்பு உள்ளது. 8.5 சதவீதம் கொழுப்பு அல்லாத பால் பொருட்கள் உள்ளன. 88 சதவீதம் தண்ணீர் உள்ளது. இந்த பாலில் புரோட்டின், கொழுப்பு, கால்சியம், விட்டமின் டி போன்றவை உள்ளன.

கொழுப்பு நீக்கப்பட்ட பால்

கொழுப்பு நீக்கப்பட்ட பால்

மாட்டிலிருந்து கிடைக்கும் கொழுப்பு நீக்கப்பட்ட ஒரு கப் பாலில் 150 கலோரிகள் உள்ளன. 1 சதவீதம் பாலில் இருந்து நமக்கு 110 கலோரிகள் கிடைக்கிறது. ஆனால் இந்த கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் இருந்து 80 கலோரிகள் மட்டுமே கிடைக்கின்றன. கொழுப்பு நீக்கப்பட்ட பாலிலும் கூட பாலின் அனைத்து நன்மைகளும் கிடைக்கின்றன. பலர் கொழுப்பு நீக்கிய பாலை தான் குடிக்கின்றனர்.

லேக்டோஸ் நீக்கிய பால்

லேக்டோஸ் நீக்கிய பால்

லேக்டோஸ் என்பது பாலில் இயற்கையாகவே காணப்படும் சர்க்கரை ஆகும். லேக்டோஸ் நீக்கப்பட்ட பாலில் புரோட்டின், கால்சியம், விட்டமின்கள் மற்றும் மினரல்கள் மற்ற பால்களை போலவே உள்ளன. ஆனால் கொழுப்பின் அளவு மட்டும் மற்ற பால்களை காட்டிலும் வேறுபடுகிறது. இது ஒரு சதவீதம் அல்லது 2 சதவீதம் கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது முழுமையாக கொழுப்பு நீக்கப்பட்ட பாலாகவும் கிடைக்கிறது.

மாட்டுப்பாலின் நன்மைகள்

மாட்டுப்பாலின் நன்மைகள்

1. முழுமையான பாலானது உங்களது உடலுக்கு தேவையான புரோட்டின் மற்றும் அதிக கலோரிகள், உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தருகிறது.

2. லேக்டோஸ் நீக்கப்பட்ட பாலை லேட்டோஸ் அலர்ஜி உள்ளவர்கள் பருகலாம்.

3. மாட்டுப்பால் அதிகமாக கிடைக்கக்கூடியதாகும். இதனை எளிதில் பெறமுடியும்.

குறிப்பு :

குறிப்பு :

விலங்குகளில் இருந்து கிடைக்கும் பாலில் கொழுப்பு ஒராளவுக்காவது இருக்கும். இதில் கலோரிகளும் அதிகம் என்பதால் இதனை இருதய பாதிப்பு உள்ளவர்கள், கொழுப்பை கட்டுப்படுத்த நினைப்பவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் குடிக்காமல் இருப்பது நல்லது.

பாதாம் பால்

பாதாம் பால்

பாதால் பால் பாதாமில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் இனிப்பு சேர்க்காமல் இருந்தால், இது மற்ற பால்களை விடவும் கொழுப்பு குறைவாக உள்ளது. மேலும் இதில் கொழுப்பு இல்லை, லேக்டோஸ் இல்லை. அதற்கும் மேலாக, பாதாம் ஒரு சிறந்த புரோட்டின் ஆதாரமாக இருந்தாலும், பாதாம் பாலில் புரோட்டின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிக அளவு கால்சியமும் இல்லை.

பாதாம் பாலின் நன்மைகள்

பாதாம் பாலின் நன்மைகள்

1. இதில் குறைந்த அளவு கலோரிகள் தான் உள்ளது. கொழுப்புகள் இல்லை.

2. இதில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் டி அதிகமாக உள்ளது.

3. இதில் இயற்கையாகவே லேக்டோஸ் இல்லை.

குறிப்பு :

குறிப்பு :

இதில் புரோட்டின் மற்றும் கால்சியம் இல்லை. ஆனால் புரோட்டின் மற்றும் கால்சியம் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்களுக்கு முக்கிய தேவையாகும். நட்ஸ் அலர்ஜி மற்றும் பாதாம் அலர்ஜி உள்ளவர்கள் இதனை கண்டிப்பாக பருக கூடாது.

சோயா பால்

சோயா பால்

சோயா பால் சோயா பீன்ஸ்களில் இருந்து பெறப்படுகிறது. சைவ உணவு உண்பவர்கள் மற்றும் லேக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது சிறந்தது. இது தாவரத்தில் இருந்து பெறப்படுவதால் இதில் இயற்கையாகவே கொழுப்பு இல்லை. இதில் லேக்டோஸ் இல்லை. இது புரோட்டின், கால்சியம் மற்றும் பொட்டாசியத்திற்கு சிறந்த ஆதாரமாக உள்ளது.

சோயாவின் நன்மைகள்

சோயாவின் நன்மைகள்

1. புரோட்டின், விட்டமின் ஏ, பி12, விட்டமின் டி மற்றும் பொட்டாசியத்திற்கு சிறந்த ஆதாரமாக திகழ்கிறது.

2. சோயா பாலில் கிட்டத்தட்ட மாட்டு பாலின் அளவிற்கு புரோட்டின் உள்ளது. இதில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் கொழுப்பு நீக்கப்படாத முழுமையான பாலில் உள்ள கலோரியின் அளவை விட குறைவாக உள்ளது.

3. இதில் கொழுப்பு இல்லை. இது இருதயத்திற்கு மிகவும் நல்லது.

குறிப்பு

குறிப்பு

மிக அதிகளவு சோயா ஒருவேளை தைராய்டு பிரச்சனை அல்லது பிற மருத்துவ பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிகளவு சோயா சார்ந்த பொருட்களை சாப்பிடுவது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி பால்

அரிசி பால்

அரிசிப்பால் அரிசி மற்றும் தண்ணீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது மற்றவைகளை விட மிக குறைந்த அலர்ஜி தன்மை உடையது. லேக்டோஸ் மற்றும் நட்ஸ் அலர்ஜி உடையவர்களுக்கு இது மிகவும் சிறந்தது. இது சோயா மற்றும் பாதாம் போன்று இயற்கை ஆதாரம் இல்லை.

நன்மைகள்

நன்மைகள்

1. அரிசி பாலை குடிப்பதால் அலர்ஜி ஏற்படுவது மிகமிகக்குறைவு.

2. இதில் கால்சியம் அதிகமாக உள்ளது.

3. இது சைவ உணவு பிரியர்களுக்கு மிகச்சிறந்தது.

குறிப்பு :

குறிப்பு :

அரிசிப்பாலில் அதிகளவு கார்போஹைட்ரைட்டும், மிகக்குறைந்த அளவு புரோட்டினும் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஏற்றதல்ல. புரோட்டின் தேவை அதிகம் இருப்பவர்களுக்கும் இது ஏற்றதாக இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

which type of milk is good for your health

which type of milk is good for your health
Story first published: Tuesday, October 3, 2017, 16:58 [IST]