உங்களுக்கு பசி உண்டாகலையா? நீங்க என்ன செய்யனும்?

Written By:
Subscribe to Boldsky

பசி உண்டாவது நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறி. நீங்கள் நன்றாக ஓடியாடி வேலை செய்யும்போது விரைவில் வளர்சிதை மாற்றம் உண்டாகி பசி உண்டாகும். ஆனால் எதுவேமே வேலை செய்யாமல் பசி எடுத்தால் அது ஆரோக்கியமானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

These foods make you hungrier

சிலருக்கு பசி ஏற்படாததற்கு காரணம் அவர்கள் சாப்பிடும் உணவு மற்றும் போதிய உடல் உழைப்ப்பிலாமல் இருப்பது காரணமாகும். பசியை தூண்டும் உணவுகளை சாப்பிடுவதால் ஜீரண உறுப்புகள் தூண்டப்பட்டு உங்களுக்கு பசியை ஏற்படுத்தும். அவ்வறு எந்த உணவுகள் உங்கள் பசியை தூண்டும் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழு கோதுமை பிரட் :

முழு கோதுமை பிரட் :

முழுகோதுமை பிரட்ட்டில் அதிக நார்சத்து இருந்தாலும் கொழுப்பு மற்றும் புரதம் குறைவாகவே இருப்பதால் அதனை உர்கொள்ளும்போது வேகமாக ஜீரணித்துவிடும். அதனை முட்டை அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடும்போது சத்துக்கள் கிடியப்பதோடு முழுதும் ஜீரணமாகிவிடும். பசியை தூண்டும்.

பழச் சாறு :

பழச் சாறு :

பழச் சாறுகளில் இருக்கும் அதிக நார்ச்சத்து உடலுக்கு தேவையான நீர்சத்தை தருகிறது. அதொ0அடு ஜீரண நொதிகளை தூண்டுவதால் பசி நன்றாக ஏற்படும்.

பச்சை காய்கறிகளின் ஸ்மூதி :

பச்சை காய்கறிகளின் ஸ்மூதி :

காய்கறிகளை அரைத்து வடிகட்டாமல் சாப்பிடுவதால் அவற்றின் முழு சத்துக்களும் கிடைக்கிறது. வேகமாக வளர்சிதை மாற்றத்தை உண்டு பண்ணும். பசியும் விரைவில் உண்டாகும். பசி உண்டாகாமல் அவதிப்படுபவர்கள் இதனை முயற்சிக்கலாம்.

மோர் :

மோர் :

மோர் அற்புதமான பசியை தூண்டும் உணவு. கொழுப்பும் இல்லை. இதனை தினமும் குடித்தால் உணவு மண்டலம் நன்றாக தூண்டப்படும். பசி உண்டாகும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

ஊறுகாய் :

ஊறுகாய் :

ஊறுகாய் எண்ணெயில் செய்யபப்டுவதுதான். ஆனால் பசியை தூட்னும். எலுமிச்சை, நார்த்தங்காய் போன்ற சிட்ரஸ் வகை ஊறுகாய் ஜீரண சக்தியை உண்டாக்கும். பசியை தூண்டும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் உண்டாக்கும்.

முட்டையின் வெள்ளைக் கரு :

முட்டையின் வெள்ளைக் கரு :

முட்டையின் வெள்ளைக் கருவில் 3-4 கிராம் புரதம் உள்ளது. வெள்ளைக் கரு உங்கள் பசியை நிரப்புவது போல் தெரிந்தாலும் அதில் கொழுப்பில்லை. கலோரியும் குறைவு. இதனை ஆம்லெட்டாக சாப்பிடுவதாலும் நல்லதுதான். இவை உடல் எடை கூடச் செய்யாது. சாப்பிடவும் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These foods make you hungrier

6 foods that make you hungrier
Story first published: Thursday, February 9, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter