எல்லாவித சிறுநீர் கோளாறுகளில் இருந்தும் விடுபட ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்து!

Posted By:
Subscribe to Boldsky

இன்று நமது வாழ்வியல் முறை மற்றும் வேலை செய்யும் முறைகளில் உண்டாகியிருக்கும் மாற்றங்கள், உணவியல் பழக்க மாற்றங்கள் போன்றவை நமது முன்னோர்கள் அறியாத உடல்நல உபாதைகளை நமக்கு பரிசளித்து சென்றுள்ளன.

மலம் கழிப்பதில் நமது முன்னோர்கள் சிரமம் கண்டதில்லை, அவர்கள் சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் என ஒன்றை அறிந்ததே இல்லை. ஆனால், நாம் அப்படியா... காலை கடன் கழிப்பதே பெரும் போராட்டம் தான் பலருக்கு.

இதோ! நன்னாரி வேர், கறிவேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஆயுர்வேத மருந்து எல்லா விதமான சிறுநீர் கோளாறுகளையும் சரி செய்யும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

  1. நன்னாரி வேர்,
  2. கறிவேப்பிலை,
  3. சின்ன வெங்காயம்,
  4. வெந்தயம்,
  5. மிளகு சோம்பு மற்றும்
  6. சீரகம்
அறிகுறிகள்!

அறிகுறிகள்!

சிறுநீர் எரிச்சல், சரியாக சிறுநீர் போகாமல் இருத்தல் போன்ற அறிகுறி அதிகம் தென்பட்டால் நீங்கள் இந்த ஆயுர்வேத மருந்தை உட்கொள்ளலாம். இது சிறந்த மாற்றத்தை உணர செய்யும்.

செய்முறை!

செய்முறை!

நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதை நீருடன் சேர்த்து காய்ச்சி கசாயம் போல வைத்து குடித்து வந்தால் சிறுநீர் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.

நன்னாரி பயன்கள்!

நன்னாரி பயன்கள்!

நன்னாரி உடல் வியர்வையைக் கூட்ட, சிறுநீர் போக்கை அதிகரிக்க, இரத்தத்தை சுத்தப்படுத்த பயன்படும் ஒரு சிறந்த பொருளாகும். மேலும், இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு போன்றவைக்கும் தீர்வளிக்கிறது.

சின்ன வெங்காயம்!

சின்ன வெங்காயம்!

சின்ன வெங்காயம் நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவு பொருள். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

மிளகு!

மிளகு!

சளியோ இருமலோ வீட்டில் மிளகுஇருந்தால் போதும் நோயை போக்கிவிடலாம் என்பார்கள். பாட்டி வைத்தியத்தில் மிளகுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நறுமணப்பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Ayurvedic Medicine for All the Urination Problems!

Simple Ayurvedic Medicine for All the Urination Problems!
Story first published: Friday, June 23, 2017, 11:14 [IST]