அன்னாசிப் பழச்சாறை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

அன்னாசியிலிருந்து தயாரிக்கப்படும் சாறு மிகுந்த சுவையுடன் இருக்கும். இயற்கையாகவே இதில் சர்க்கரை அதிகமாக இருக்கும். இதனால் அனைவரும் இந்த பழச்சாற்றை சுவைக்க பெரிதும் விரும்புவர் ஆனால் இதில் பல வகை ஊட்டச்சத்துகளும் உள்ளதை பலரும் அறிவதில்லை. வாருங்கள்! அன்னாசி பழச்சாறில் உள்ள மகிமைகளை அறிந்து கொள்வோம்.

அன்னாசி பல வித நன்மைகளை தன்னுள்ளேயே கொண்டது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, உடல் வளச்சியை ஊக்குவிப்பது, வீக்கத்தை குறைப்பது, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது, மன நிலையை சமன் செய்வது, தசை ஆற்றலுக்கு உதவுவது , கருவுருதலை அதிகரிப்பது , செரிமானத்தை அதிகரிப்பது போன்றவை பைனாப்பிளின் ஆரோக்கிய பலன்கள் ஆகும்.

Pine apple juice and its health benefits

இந்த பழச்சாறில் ப்ரோமெலைன் என்ற என்சைம் உள்ளது . இது செரிமானத்திற்கு உதவும் முக்கியமான என்சைம் ஆகும். மற்றும் பொட்டாசியம், பி குடும்ப வைட்டமின்கள், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.

உயர்ந்த இரத்த அழுத்தம், குறைந்த வளர்சிதை மாற்றம், குறைந்த நோயெதிர்ப்பு சக்தி, கருவுறுதலில் பிரச்சனைகள், வீக்கங்கள் , புற்றுநோய் அபாயம், மலச்சிக்கல், மனச்சோர்வு, பதட்டம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் அன்னாசி பழச்சாறை தொடர்ந்து அருந்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது:

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது:

பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தத்திற்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. இது ஒரு சிறந்த குழல்விரிப்பி. அதனால் ஹைப்பர் டென்ஷன் குறைகிறது. இதனால் இதய நலன் முற்றிலுமாக பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் மாரடைப்பு, வாதம் போன்றவற்றின் அபாயங்கள் குறைகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது:

நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது:

இந்த பழச்சாறில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. கடைகளில் கிடைக்கும் அன்னாசி பழச்சாறில் அஸ்கார்பிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. இதன்மூலம் வைட்டமின் சி ஊட்டச்சத்து இன்னும் அதிகரிக்கிறது. இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதுவே உடலை காக்கும் அரணாக இருக்கின்றது.

மன நிலை மாற்றங்களை சீராக்குகிறது:

மன நிலை மாற்றங்களை சீராக்குகிறது:

வைட்டமின் பி அன்னாசி சாற்றில் அதிகமாக உள்ளது. மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது . இதனை அருந்துவதால் பதட்டம் தணிக்க படுகிறது. மனச்சோர்வுக்கு ஒரு சிறந்த தீர்வை தருகிறது.

கீல்வாதத்தை தடுக்கிறது:

கீல்வாதத்தை தடுக்கிறது:

ப்ரோமெலைன் என்ற என்சைம் அன்னாசியில் காணப்படுகிறது . இது செரிமானத்திற்கு மிகவும் உதவும் ஒரு என்சைம். இந்த என்சைம் வீக்கத்தையும் குறைக்கிறது. கீல்வாதத்தின் அறிகுறிகளை களைகிறது. இந்த என்சைம், வலி நிவாரணியாக செயல்படுகிறது மற்றும் சைனஸ் தொந்தரவுகளை தீர்க்கிறது.

 செரிமானத்திற்கு உதவுகிறது:

செரிமானத்திற்கு உதவுகிறது:

அன்னாசியில் உள்ள நார்ச்சத்து , மற்றும் ப்ரோமெலைன் போன்றவை செரிமானத்திற்கு நன்மை செய்பவையாகும். செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலை தீர்க்கிறது. குடல் இயக்கத்தை அதிகப்படுத்தி சரியான ஊட்டச்சத்துகள் செரிமான மண்டலத்தில் சேர்வதற்கு உதவுகின்றன.

வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது:

வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது:

அன்னாசி சாறில் அதிகமாக உள்ள வைட்டமின் சி சத்து, கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது.

இதனால், திசுக்கள், தசைகள் , எலும்புகள் , இரத்த நாளங்கள், போன்றவற்றின் உருவாக்கத்திற்கு இந்த கொலாஜென் உதவுகிறது. நோயிலிருந்து மீண்டு வந்தவர்கள், சர்ஜெரி முடித்து வந்தவர்கள், மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு செல்ல இந்த பழச்சாறை பருகலாம்.

நல்ல உடல் வளர்ச்சியும் முன்னேற்றமும் காணப்படும். பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு இல்லாமல், உடலில் நீர்ச்சத்தை சமன் செய்கிறது. நரம்புகள் தூண்டப்படுகிறது.

மற்றும் தசைகள் சுருங்கும் தன்மை சீராக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்த தசை செயல்பாடு இருப்பது அவசியம். அவர்கள் அன்னாசி சாறை குடிப்பதன்மூலம் நல்ல பலனை அடையலாம்.

புற்று நோயை எதிர்க்கிறது :

புற்று நோயை எதிர்க்கிறது :

ப்ரோமெலைன் மற்றும் பீட்டா கரோடின் இரண்டுமே புற்று நோய்க்கு எதிராக செய்லபடும் தன்மை கொண்டவை. இவை புற்று நோய் ஏற்படுத்தும் மற்றும் பரப்பும் செல்களின் உற்பத்தியை குறைகின்றன. ஒக்ஸிஜனேற்றதால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குகிறது. இதனால் நாட்பட்ட வியாதிகள் குணமடைகின்றன .

தீய விளைவுகள்:

தீய விளைவுகள்:

இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வதால் சில தீய விளைவுகளும் ஏற்படுகின்றன. அவை, கர்ப்ப கால சிக்கல்கள், நீரிழிவு பாதிப்புகள் , எடை அதிகரிப்பு, ஒவ்வாமை, இரத்தப்போக்கு போன்றவை ஆகும்.

அதிகமான அளவு உட்கொள்ளாமல் இருப்பதால் சிறந்த பலன்களை அடையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pine apple juice and its health benefits

Pine apple juice and its health benefits
Story first published: Tuesday, September 5, 2017, 16:02 [IST]
Subscribe Newsletter