கசகசாவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் 15 முக்கிய பலன்கள்!!

By Bala Latha
Subscribe to Boldsky

கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல. ஆனால் இடைக்காலங்களில் இது மனதை அமைதிப்படுத்தும் தூக்கத்தை வரவழைக்கும் மயக்க மருந்தாக கருதப்பட்டதாக வரலாறு வெளிப்படுத்துகிறது. வெண்கலக் காலத்திலேயே மக்கள் கசகசாவைப் பற்றி விழிப்புணர்வுடன் இருந்தார்கள். அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த அவர்கள் கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுத்தார்கள்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஹிந்தியில் கஸ் கஸ் என்றும், கன்னடத்தில் கசிகீஸ் என்றும், பெங்காலியில் போஸ்டோ என்றும் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. கசகசா விதைகள் பல்வகை உணவுகளில் சேர்க்கப்படும் புகழ்பெற்ற மூலப்பொருளாகும்.

15 Top Benefits Of Khus Khus (Poppy Seeds) That Will Shock You!

வர்த்தகப் பயன்பாட்டில் மேற்கத்திய உலகிலும் அத்துடன் ஆசிய நாடுகளிலும் பல்வேறு உணவு வகைகளில் இதைச் சேர்த்திருப்பதை நீங்கள் காணலாம். கசகசாவிற்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை கிடையாது.

இதன் புல்லும் வேரும் கூட அதன் புல்வேர்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருத்துவப் பயன்கள், சோப்புகள், நறுமண திரவியங்கள், மேலும் உணவுகள் மற்றும் பானங்களிலும் கூட பயன்படுத்தப்படுகிறது.

இந்த அளவற்ற பயன்களைக் கொண்ட மூலப்பொருள் உணவுகளுக்கு நல்ல நறுமணத்தைச் சேர்க்கிறது. கசகசா விதைகளின் சில நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானத்திற்கு நல்லது:

செரிமானத்திற்கு நல்லது:

கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக இருப்பதால் இது முறையான செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலை முற்றிலுமாக ஒழிக்கிறது. இது உடலின் இயக்க அமைப்பை மேம்படுத்தி அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வாயு உற்பத்தி போன்ற நோய்களிலிருந்து நிவாரணமளிக்கிறது.

கருவளத்தை மேம்படுத்துகிறது:

கருவளத்தை மேம்படுத்துகிறது:

கசகசாவின் மருத்துவ குணம் பெண்களின் கருவளத்திற்கு நன்மை பயக்கிறது. கசகசா விதைகளின் எண்ணையயைப் பயன்படுத்தி கருக்குழாய் கழுவப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு பெண்களில் கருவுறும் விகிதம் அதிகரிக்கிறது.

இது கருக்குழாயிலுள்ள கருச் சிதைவுகள் அல்லது சளி போன்ற திரவ கசடுகளை நீக்குகிறது. இது சுமார் 40 சதவிகித பெண்களுக்கு நேர்மறையான விளைவுகளைக் காட்டியுள்ளது. மேலும், கசகசா விதைகள் உங்கள் பாலியல் விருப்பங்களை அதிகரித்து ஆண்மையையும் பாலுணர்ச்சியையும் அதிகரித்து பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆற்றலை அதிகரிக்கிறது:

ஆற்றலை அதிகரிக்கிறது:

கடினமான வேலைகளை செய்வதற்கு ஆற்றல் அளவை அதிகரிக்க நமது உடலுக்கு போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகள் தேவைப்படுகிறது. கசகசா விதைகள் கலப்பு கார்போஹைட்ரேட்டுகளின் வளமான ஆதாரமாக இருக்கிறது. இது உடலில் கரையும் போது ஆற்றலை உற்பத்தி செய்கிறது. மேலும் சோர்வுக்கு வழிவகுக்கும் கால்சியம் குறைபாடு ஏற்படும் போது இது போதுமான கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள உதவுகிறது.

வாய்ப்புண்ணை குணப்படுத்துகிறது:

வாய்ப்புண்ணை குணப்படுத்துகிறது:

நீங்கள் வாய்ப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா? கசகசா விதைகளின் குளிர்ச்சியான மூலக்கூறுகள் உங்களுக்கு நன்மை தரக்கூடியது. இந்தப் பிரச்சனைக்கு கசகசாவை பொடித்த சர்க்கரை மற்றும் கொப்பரைத் தேங்காய்த் துருவலுடன் சேர்த்து சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உங்களுக்கு வாய்ப்புண்ணிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

 மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது:

மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது:

கசகசா விதைகளில் கால்சியம், இரும்புச் சத்து மற்றும் தாமிரம் ஆகியன அடங்கியுள்ளன. இது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு அத்தியவசியமானதாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நரம்பியல் கடத்திகளின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்த உதவுகிறது மேலும் மூளையின் ஒழுங்கான இயக்கத்திற்கு உதவுகிறது. மேலும் இது அறிவுத்திறன் மங்கும் குறைபாட்டை குறைக்க உதவுவதாகச் சொல்லப்படுகிறது.

எலும்புகளை பலப்படுத்துகிறது:

எலும்புகளை பலப்படுத்துகிறது:

நமது எலும்புகளின் வலிமைக்கு போதுமான கால்சியம் மற்றும் தாமிரச் சத்து தேவைப்படுகிறது. 40 வயதுக்குப் பிறகு எலும்புகள் தேயத் தொடங்குகின்றன. அப்போது மக்கள் கால்சியம் மாத்திரைகளை தேர்ந்தெடுக்கின்றனர். கசகசா விதைகள் எலும்புகளையும் அத்துடன் தொடர்புடைய திசுக்களையும் பலப்படுத்தக்கூடிய இயற்கையான மூலக்கூறு ஆகும்.

இதில் செறிந்துள்ள பாஸ்பரஸ் எலும்பு திசுக்களை உறுதிப்படுத்துகிறது. இதைத் தவிர கசகசா விதைகளில் அடங்கியுள்ள மாங்கனீசு எலும்புகளை தீவிரமான காயங்களிலிருந்து காக்கிறது.

இரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்துகிறது:

இரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்துகிறது:

நீங்கள் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால் கசகசா அதிகம் அடங்கிய உணவுகளை உட்கொள்ளுதல் உங்களுக்கு நன்மை தரும். கசகசா விதைகளில் அடங்கியுள்ள ஓலிக் அமிலம் இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது:

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது:

கசகசா விதைகளில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. இதில் உள்ள துத்தநாக மூலக்கூறுகள் சுவாசக் கோளாறுகளை சரிசெய்வதில் முக்கியமாக தொடர்பு கொண்டுள்ளது. மேலும் இந்த விதைகள் உடலில் நோயெதிர்ப்பு செல்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

இதயத்துக்கு நல்லது:

இதயத்துக்கு நல்லது:

கசகசாவில் அடங்கியுள்ள துத்தநாகம் சுவாசக் கோளாறுகளை குறைக்க உதவுகிறது. இந்த கசகசா விதைகள் உண்ணக்கூடிய நார்ச்சத்து நிறைந்தது இது உடலில் கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அது மட்டுமன்றி கசகசா விதைகளில் அடங்கியுள்ள ஒமேகா - 3 மற்றும் ஒமேகா - 6 மூலக்கூறுகள் இதயத்தின் சீரான இயக்கத்திற்கு நன்மை புரிகிறது.

நீரிழிவு நோயை குணப்படுத்த உதவுகிறது:

நீரிழிவு நோயை குணப்படுத்த உதவுகிறது:

கசகசா விதைகளின் ஏராளமான மருத்துவப் பயன்களுடன் இது இரத்தத்தில் சர்க்கரை அளவையும் முறைப்படுத்துகிறது. நீரழிவு நோயாளிகளுக்கு கசகசா விதைகளில் அடங்கியுள்ள உயர் அளவு நார்ச்சத்தும் மாங்கனீசும் சர்க்கரை நோய்க்கு குணமளிப்பதற்கு சிறந்தது.

கேன்சரைத் தடுக்க உதவுகிறது:

கேன்சரைத் தடுக்க உதவுகிறது:

ஓபியம் கசகசா விதைகளிலிருந்து பிரத்தெடுக்கப்படும் நாஸ்காபைன் என்றழைக்கப்படும் ஒரு மருந்து மூளைக்கட்டிகளையும் மற்றும் மார்பக மற்றும் புராஸ்டேட் கேன்சர் செல்களுக்கு சிகிச்சையளிக்க சிறந்த திறன் வாய்ந்த விளைவுகளை ஏற்படுத்துவதைக் காண முடிகிறது.

கசகசா விதைகளிலுள்ள கார்சினோஜென் என்னும் நச்சுகளை நீக்கும் நொதியும் குளுடதைன் (ஜிஎஸ்டி) என்னும் கடத்தியும் கிட்டத்தட்ட 78 சதவிகிதம் வரை கேன்சர் செல்கள் பரவுவதை தடுக்கிறது. மேலும் இந்த கசகசா செடியின் தாய்த்திரவம் கூட கேன்சர் புண்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது:

சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது:

சிறுநீரகக் கற்களால் அவதிப்படுபவர்கள் கசகசா விதைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணலாம் ஏனென்றால் இது சிறுநீரகக் கற்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுவதுடன் மீண்டும் வராமல் தடுக்கிறது.

ஆனால் ஹைப்பர்ரோக்ஸ்லூரியாவால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் கசகசாவை தவிர்த்து விடுங்கள் அல்லது கசகசா சாப்பிடும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதில் அடங்கியுள்ள ஆக்சாலிக் ஆசிட் கால்சியம் ஆக்ஸலேட் (சிறுநீரகக் கற்கள்) உற்பத்தியை தூண்டும் அபாயம் உள்ளது.

தைராய்டு செயல்பாட்டிற்கு நல்லது:

தைராய்டு செயல்பாட்டிற்கு நல்லது:

கசகசாவில் அடங்கியுள்ள தைராய்டு சுரப்பிக்கு தேவையான முக்கிய மூலக்கூறான துத்தநாகம் தைராய்டு சுரப்பியின் இயக்கத்திற்கு உதவுகிறது. ஐயோடின் சேர்க்கப்பட்ட கசகசா விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தைராய்டு செயல்பாட்டில் பிழை ஏற்படுத்தும் ஐயோடின் குறைபாட்டை குறைக்க உதவுகிறது.

தீவிரமான கண் நோய்களைத் தடுக்கிறது:

கசகசா விதைகள் உங்கள் பார்வைத்திறனை மேம்படுத்துகிறது மேலும் கண் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. கசகசா விதைகளில் அடங்கியுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்டுகளும் மற்றும் துத்தநாகமும் தீவிர கண் பிரச்சனையான கருவிழி படலத்தின் நசிவால் ஏற்படும் குருட்டுத்தன்மையை தடுக்க உதவுகிறது.

தூக்க பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது:

தூக்க பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது:

நீங்கள் அளவுக்கதிகமான மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் உள்ளவர்களுக்கு ஒரு குவளை கசகசா பானம் குடிக்கக் கொடுத்தால் அது கார்டிசால் அளவைக் குறைத்து உங்கள் உடலை அமைதிப்படுத்துவதன் மூலம் மன அழுத்த அளவைக் குறைக்கிறது. கசகசா அதிலும் குறிப்பாக ஓபியம் கசகசா போதுமான தூக்கத்தை தூண்டுகிறது.

கசகசா விதைகளில் தேநீர் தயாரித்துக் குடியுங்கள் அல்லது கசகசாவை பேஸ்டாக அரைத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து இரவில் படுக்கப் போவதற்கு முன் குடியுங்கள். இது உங்கள் துக்கமற்ற இரவுகளின் பிரச்சனையை முற்றிலும் ஒழித்துவிடும்.

எனவே இவை தான் கசகசா விதைளின் முக்கிய நற்பயன்களாகும். இது உங்கள் உடலில் உள்ள எந்த நோயாக இருந்தாலும் இயற்கையாக தீர்த்து விடும். இருந்தாலும், நோய்கள் மிகப் பெரிய வடிவில் இருந்தால் சிறந்த வழிகாட்டுதலுக்கு மருத்துவரை கலந்தாலோசிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், உங்கள் குழந்தைக்கு கசகசா விதைகளை கொடுப்பதற்கு முன் ஒரு குழந்தை நல சிறப்பு மருத்துவரை கலந்தாலோசியுங்கள். இதனால் அவர்களுடைய உடலில் தீங்கான விளைவுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    15 Top Benefits Of Khus Khus (Poppy Seeds) That Will Shock You!

    15 Top Benefits Of Khus Khus (Poppy Seeds) That Will Shock You!
    Story first published: Thursday, December 7, 2017, 20:00 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more