நீங்கள் ஆரோக்கியம் என நினைக்கும் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது! ஏன் தெரியுமா?

By: Bala Karthik
Subscribe to Boldsky

நீங்கள் மளிகை சாமான்கள் வாங்க எந்த ஒரு பல்பொருள் அங்காடிக்கு சென்றாலும், அந்த நிமிடம் இனிப்பு இல்லாத, குறைவான கலோரி அல்லது கரிமத்தை பற்றி உணவு பையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறதா? என பார்த்து உடனே அவற்றை வாங்கிவிடக்கூடும்.

ஆனால், அவை உன்னதமான ஆரோக்கியத்தை தருகிறதா? இந்த ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரினால் நீங்கள் குழம்பி போகலாம். பலமுறை நாம் பார்த்து பார்த்து சாப்பிடும் உணவில் ஆரோக்கியம் இருப்பதாக நாம் நினைக்க, ஆனால் அவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது இருப்பதில்லை. அவற்றுள் செயற்கை இனிப்பு மற்றும் வண்ணமிருக்க, இதனால் வீக்கம் உண்டாகிறது.

நீங்கள் ஒழுங்கான முறையில் உணவை சோதித்து, அவற்றுள் என்ன இருக்கிறது? என தெரிந்துக்கொண்டு சாப்பிடலாம். உணவானது ஆரோக்கியத்தை ஒருவருக்கு தரும் அடிப்படையாக அமைகிறது. ஆகையால், நீங்கள் சாப்பிடும் உணவில் கவனம் தேவைப்பட வேண்டியது அவசியமாகிறது.

ஆரோக்கியமற்ற உணவை நாம் சாப்பிட, பல்வேறு உடல் நலக்குறைவானது வயிற்றில் உண்டாவதோடு, ஹார்மோன் சமநிலையின்மையும் இதனால் உண்டாகிறது.

சரியான உணவை தேர்ந்தெடுத்து நாம் சாப்பிடுவது நமக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, அனைத்து விதமான நோயிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.

அதனால், ஒரு சில ஆரோக்கியமான உணவுகள் அடங்கிய பட்டியலையும், எவற்றை நாம் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்? என்பதையும் இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழச் சாறு:

பழச் சாறு:

பழச் சாறு குடிப்பதென்பது பழத்திற்கு நிகரான சத்துக்களை தருவதாக நாம் நம்புகிறோம். ஆனால், உங்கள் எண்ணம் முற்றிலும் தவறு. ஒரு கிளாஸ் ஆரஞ்ச் சாறு நாம் சாப்பிட சுமார் 4 முதல் 5 ஆரஞ்கள் நமக்கு தேவைப்படுகிறது. இதனால் பிரக்டோஸ் அளவு அதிகரிக்கிறது. முழு பழத்தை நாம் சாப்பிடாமல் சாறாக பிழிந்து சாப்பிடுவதனால் நார் சத்து நமக்கு கிடைப்பதில்லை.

சோயா :

சோயா :

பால் பொருட்களுக்கு சிறந்த மாற்றாக சோயாவை நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், இதுவும் தவறான எண்ணம் தான். சோயாவில் க்ளைப்போசேட், உறுப்பு பாஸ்பரஸ் கலவை இருக்க, அவை களைகளை கொன்றுவிடுகிறது. ஆகையால், சோயா பால் அல்லது சோயா பொருட்கள் இதனால் உடம்புக்கு கேடு விளைவிக்கக்கூடும்.

இதன் தாக்கத்தால் உடம்பில் இருக்கும் செல் சாக, நாசி அலர்ஜி, ஆஸ்துமா, மார்பக புற்று நோய் அல்லது சிறு நீர்ப்பை புற்றுநோயும் இதனால் உண்டாகிறது.

சூயிங்க் கம் :

சூயிங்க் கம் :

நீங்கள் மெல்லும் சீவிங்க் கம்மிலும் (Chewing Gum), வேகவைத்த உணவிலும் இனிப்பு இல்லை என்னும் ஸ்டிக்கர்களை பார்த்திட, அதனால் அவை ஆரோக்கியமானது என தாங்கள் நினைத்திடலாம். ஆனால், உண்மையிலயே அவை ஆரோக்கியம் கிடையாது.

மைக்ரோவேவ் பாப்கார்ன்:

மைக்ரோவேவ் பாப்கார்ன்:

வெண்ணெய்யில் டையாசிட்டில் எனப்படும் வேதிப்பொருளிருக்க, உங்களுக்கு பிடித்த பாப்கார்னில் அது இருப்பதால் கெடுதல் உண்டாகிறது. இதனால் உங்கள் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. ஆகையால், வீட்டிலே பாப்கார்ன் தயாரிக்க, ஒரிஜினல் வெண்ணெய்யை அதற்கு பயன்படுத்துவது நல்லதாகும்.

காய்கறி எண்ணெய்:

காய்கறி எண்ணெய்:

ஆரோக்கியமானதாக கருதப்படும் காய்கறி எண்ணெய், உண்மையிலேயே அப்படி அல்ல. காய்கறி எண்ணெய்யான கனோலா எண்ணெய், சோயாபீன் எண்ணெய் மற்றும் சோள எண்ணெய்யில் அதீத அளவிலான ஒமேகா - 6 கொழுப்பு அமிலம் இருக்கிறது.

ஆனால் இந்த எண்ணெய்களில் விஷத்தன்மை அதிகமிருக்க, இதனால் உங்கள் உடலானது அதீத விஷத்தன்மை அழுத்தம் பொங்க காணப்படுகிறது. இதனால் புற்றுநோய் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், காய்கறி எண்ணெய்யை பயன்படுத்துவதற்கு பதிலாக, விர்ஜின் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மற்றும் அவாகடோ எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

டேபிள் சால்ட்:

டேபிள் சால்ட்:

ஆரோக்கிய தேர்வாக டேபிள் சால்ட் அமைவதில்லை. இது பல்வேறு முறைகளுக்கு உட்படுத்துப்பட, இதனால் டெக்ஷ்ட்ரோஸ் மற்றும் வெளிறிய வெள்ளையானது இதனை நாம் உட்கொள்வதால் தீங்கு உண்டாக்கக்கூடும். ஆகையால், கடல் உப்பு அல்லது இமாலய உப்புவை நாம் தேர்ந்தெடுப்பது நல்லதாகும்.

செயற்கை இனிப்பு பொருட்கள்:

செயற்கை இனிப்பு பொருட்கள்:

இவை ஆரோக்கியமாக அமைவதில்லை. இதனால் உங்கள் குடலுக்கு தொந்தரவு உண்டாக, நீரிழிவு நோயும் இதனால் உண்டாகிறது. ஒரு காலக்கட்டத்திற்கு மேல்,செயற்கை இனிப்பு பொருட்களை நாம் தினமும் சாப்பிடுவதால் மார்பக புற்று நோய், மூளையில் கட்டி, உடல் கனப்பது போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.

 கொழுப்பு அற்ற பால்:

கொழுப்பு அற்ற பால்:

இந்த கொழுப்பற்ற பாலை ஆரோக்கியமானது என பலர் நினைத்துக்கொண்டிருக்க, ஆனால் அது உண்மையல்ல. பெரும்பாலும் கொழுப்பற்ற பாலில் இனிப்பு சேர்க்கப்பட, இரு விதமான நீரிழிவு நோயானது உண்டாக வாய்ப்பிருக்க, அவை இதய நோயாகவும், புற்று நோயாகவும் அமைகிறது.

சமைக்கப்பட்ட கறி:

சமைக்கப்பட்ட கறி:

கறியில் அமினோ அமிலத்துடன் கிரியேட்டினும் இருக்கிறது. ஆகையால், இறைச்சியானதை அதிக வெப்ப நிலையில் வேக வைக்க, இதனால் மூலக்கூறுகள் உண்டாக அவை விஷத்தன்மை மற்றும் புற்றுண்டாக்கக் கூடியதாகவும் அமைகிறது.

அதனால், சிறந்த தேர்வாக மெல்லிய வினிகர் சார்ந்த இறைச்சி மற்றும் மூலிகைகளான புதினா, துளசி, ஆர்கனோ, மற்றும் வறட்சியான தைம் (மணம் உள்ள இலைகள் கொண்ட தோட்டச் செடி வகை) சேர்ப்பதனால் அவற்றில் ஆக்ஸிஜனேற்ற பண்பு இருப்பதும் தெரியவருகிறது.

சமைக்கப்பட்ட உணவுகள்:

சமைக்கப்பட்ட உணவுகள்:

தக்காளிகள் மற்றும் பீன்ஸானது அடைத்து வைக்கப்பட அது ஆரோக்கியமற்றது என நாம் நினைக்கிறோம். ஆம், அடைத்து வைக்கப்படும் முன்னர், இந்த தக்காளிகளையும், பீன்ஸையும் பல முறைகளுக்கு உட்படுத்தப்பட, இந்த முறைகளில் அதன் சத்தானதை இழந்துவிடுகிறது. அத்துடன் சேர்த்து, இந்த டின்களில் காணப்படும் பிசின் கோடுகள் பைஸ்பீனால்-A (BPA) எனப்படுமோர் செயற்கை எஸ்ட்ரோஜனை கொண்டிருக்க, இதனால் இனப்பெருக்க பிரச்சனை என்பது இணைந்துக்கொள்ள, இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சனைகளும் இதனால் உண்டாகக்கூடும்.

 அளவு சோடா:

அளவு சோடா:

அளவு சோடா கெடுதல் என நீங்கள் நினைக்கிறீர்கள். இவற்றில் கலோரி கம்மியாக இருக்க, ஆனால் அதே சமயம் இதில் செயற்கை இனிப்பானது இருக்க, இதனால் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் உண்டாகிறது. தினமும் அளவு சோடாவை சாப்பிட்டு வர, இதனால் வளர்சிதை மற்றும் எடை அதிகரிப்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மூட்டு வலி, செறிமான பிரச்சனைகள், தலைவலி, மன அழுத்தம், குடல் பிரச்சனை மற்றும் புற்று நோயும் உண்டாகக்கூடும்.

வெள்ளை சாக்லேட்:

வெள்ளை சாக்லேட்:

பலரும் தவறாக மனதில் நினைத்துக்கொள்ளும் ஒன்று., வெள்ளை சாக்லேட்டில் பால் மற்றும் ஆரோக்கியம் இருக்கிறது என நினைக்க, ஆனால் அது உண்மையல்ல. இதை விட கருப்பு சாக்லேட்டை நாம் சாப்பிட இதில் காணப்படும் கொக்கோவினால் இரத்தம் அதிகமாக மூளை நோக்கி பாய, இரத்த நாளங்களும் பாதுகாக்கப்பட்டு, நம் மன நிலையை உற்சாகத்துடன் மாற்றுகிறது.

 முறைப்படுத்தப்பட்ட கறி:

முறைப்படுத்தப்பட்ட கறி:

கறியில் எந்தவித சத்துக்கள் இருந்தாலும், அதனை முறைப்படுத்தும்போது அவை சென்றுவிடுகிறது. மேலும் செயல்படுத்தப்பட்ட கறி பற்றி நாம் பலவும் தெரிந்துக்கொள்ள, மிகவும் கொடுமையான நோய்களான நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் பெருங்குடல் புற்று நோய் கூட உண்டாக வாய்ப்பிருக்கிறது என தெரியவருகிறது.

குறைந்த கொழுப்பு கொண்ட தயிர்:

குறைந்த கொழுப்பு கொண்ட தயிர்:

இந்த குறைந்த கொழுப்பு கொண்ட தயிர் ஆரோக்கியமென நீங்கள் நினைத்தால் அதுவும் தவறு தான். இவற்றில் கொழுப்பு கம்மியாக இருக்க, சர்க்கரை அதிகமாக இருக்கிறது. நொதித்தல் முறைக்கு பிறகு, இந்த குறைந்த கொழுப்பு கொண்ட தயிரானது பாஸ்டியர் முறைப்படி தயாரிக்க, இதில் இருக்கும் பாக்டீரியாக்கள் கொல்லப்படுகிறது. ஆகையால், முழு கொழுப்பு கொண்ட தயிரை நாம் தேர்ந்தெடுப்பது மூலம், இதில் புரோபயாடிக் இருப்பதையும் நம்மால் காண முடிகிறது.

 காபி:

காபி:

ஒரு கப் அல்லது இரு கப் காபி குடிப்பது உடலுக்கு நல்லது என கருதப்படுகிறது. இதனால் கல்லீரல் ஈரல் அழற்சியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. காபியை மட்டும் குடிப்பதனால் நன்மை உண்டாக, ஆனால், அத்துடன் சர்க்கரை, பால் அல்லது கிளரிவிட்ட க்ரீம் சேர்ப்பதால், பாதிப்பை உண்டாக்கக்கூடும். இதனால் அல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் உண்டாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

15 Health Foods You Should Never Eat

15 Health Foods You Should Never Eat
Subscribe Newsletter