For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜீரண சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய அற்புத உணவுகள்!!

By Divyalakshmi Soundarrajan
|

நமது உடலுக்கு நன்மைகள் செய்யும் நல்ல பாக்டீரியாக்களும் உள்ளன. அவற்றில் ஒன்று தான் புரோபயாடிக். இது மனித உடலில் குடல் பகுதியில் இயற்கையாகவே இருக்கக்கூடியது. நாம் சாப்பிடும் உணவுகளை செரிப்பதற்கு பயன்படக்கூடிய பாக்டீரியா தான் புரோபயாடிக். தினமும் சிறிதளவு இந்த பாக்டீரியாவை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளவது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நாம் உண்ணும் உணவு செரிமானத்தை சீர்செய்து உடலுக்குத் தேவையான சத்துக்களை உணவுகளில் இருந்து பிரித்து உடலில் சேர்க்கிறது. மேலும், தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை உடலில் இருந்து நீக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது.

Amazing Probiotic Foods That Aid In Digestion

லேக்டோபேசில்லஸ் என்பது இன்னொரு பாக்டீரியா. இது சிறுகுடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. ஸ்ட்ரெப்டோகோகஸ் தெர்மோமிலஸ் நுண்ணுயிர்களைக் கொன்று, நல்ல பாக்டீரியாக்களை பாதுகாக்கிறது.வயிற்றுப் போக்கு, வாயுப்பிரச்சனைகள் ஆகிவற்றை சரி செய்ய புரோபயாடிக் மிகவும் உதவுகிறது.

நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தயிர் முதல் டார்க் சாக்லேட் வரை அனைத்திலும் புரோபயாடிக் நிறைந்துள்ளது. இவற்றை தினமும் எடுத்துக் கொள்ளும் போது எந்த பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக இருக்கும். வாருங்கள் இப்போது எந்தெந்த உணவுகளில் புரோபயாடிக் பாக்டீரியா உள்ளது என்று படித்து தெரிந்துக் கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகார்ட் :

யோகார்ட் :

யோகர்ட்டில் லாக்டோபாகிலஸ் புல்கரிஸஸ், ஸ்ட்ரெப்டோகோகஸ் தெர்மோபைல்ஸ், லாக்டோபாகிலஸ் அசிடோஃபிலஸ், லாக்டோபாகிலஸ் கேசி மற்றும் பிஃபிடஸ் போன்ற நல்ல நுண்ணுயிரிகள் நிறைந்துள்ளது. இந்த நுண்ணுயிரிகளால் எந்த வகையான தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளையும் அழிக்க முடியும். மேலும் ஆட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் யோகர்ட் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகி

கிம்ச்சி

கிம்ச்சி

கிம்ச்சி மிகவும் பிரபலமான ஒரு கொரியன் ரெசிபி. இது காய்கறிகளால் ஆன ஊறுகாய், குறிப்பாக முட்டைக்கோஸ் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இதில் உள்ள லாக்டிக் ஆசிட் பாக்டீரியம் தான் இந்த உணவை மிகவும் ஆரோக்கியமான ஓர் உணவுப் பொருளாக்குகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியைப் பெருக்கி, இரைப்பைக் குடல் பாதையின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க உதவும். ஆகவே அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

காய்கறிகளால் ஆன ஊறுகாய்

காய்கறிகளால் ஆன ஊறுகாய்

நொதிக்க வைத்த காய்கறிகளில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது. ஆகவே காய்கறிகள் நிறைந்த ஊறுகாயை உணவில் அடிக்கடி சேர்த்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

சோயா பால்

சோயா பால்

லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் மாட்டு பாலுக்கு பதிலாக சோயா பாலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதுவும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.

 லஸ்ஸி

லஸ்ஸி

தயிரை லஸ்ஸி போன்று தயாரித்தும் குடிக்கலாம். இது மிகவும் சுவையானதாக இருப்பதோடு, செரிமான செயல்பாட்டை ஊக்குவிக்க உதவும் மற்றும் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கவும் செய்யும்.

தேங்காய் கெபிர்

தேங்காய் கெபிர்

தேங்காய் பால் மற்றும் கெபிர் என்னும் தானியத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானத்திலும் நல்ல பாக்டீரியாக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இதை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம் மற்றும் இதில் உள்ள ஈஸ்ட் குறிப்பிட்ட சில தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Probiotic Foods That Aid In Digestion

Amazing Probiotic Foods That Aid In Digestion
Story first published: Wednesday, June 7, 2017, 15:42 [IST]
Desktop Bottom Promotion