For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொலஸ்ட்ரால் அதிகமிருப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்!

கொலஸ்ட்ரால் பிரச்சனையினால் அவதிப்படுகிறவர்கள் இந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும்.

|

இன்றைக்கு பெரும்பாலானோரின் மிகமுக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் எடை. உடல் எடையைப் பற்றி பேச ஆரம்பிக்கும் போதே அதைத் தொடர்ந்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேச வேண்டியிருக்கும்.

அவற்றில் ஒன்றாக, கொலஸ்ட்ரால். கொலஸ்ட்ரால் என்றால் என்ன? அது உடலுக்கு ஏன் தேவைப்படுகிறது... அதன் அளவு அதிகரித்தால் என்னவாகும் என்பன போன்ற சில விரிவான தகவல்களை இங்கே பார்க்கப்போகிறோம். கூடுதலாக கொலஸ்ட்ரால் அதிமிருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியலும் இருக்கிறது. படித்துப் பயன்பெறுங்கள்.

Avoid these foods who is in high cholesterol

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலஸ்ட்ரால் என்றால் :

கொலஸ்ட்ரால் என்றால் :

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol

80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது.

சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

கண்டிப்பாக தேவை :

கண்டிப்பாக தேவை :

நம் உடலில் கொல்ஸ்ட்ராலின் பங்கு மிக முக்கியமான ஒன்று. ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகிக்கிறது.

முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.

கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன்,ஈஸ்ட்ரஜன்,டெஸ்டோஸ்டிரான் சுரப்பதற்கு தேவைப்படுகிறது.

நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ'க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.

எவ்வளவு இருக்கிறது? :

எவ்வளவு இருக்கிறது? :

உடலில் உள்ள 100 மில்லி ரத்தத்தில் 150 மில்லிகிராம் முதல் 200 மில்லிகிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் இருக்க வேண்டும். இந்த அளவு அதிகரிக்கும்போதுதான் உடல் நலம் சீர்குலைகிறது.

75 கிலோ உள்ள ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் சுமார் 5 அவுன்ஸ் அல்லது 75 முதல் 150 கிராம் அளவுள்ள கொலஸ்ட்ரால் இருக்கும். மனித மூளையின் மொத்த எடையில் 3 சதவீதம் கொலஸ்ட்ரால்தான்.

தோல், கல்லீரல் ஆகியவற்றின் மொத்த எடையில் 0.3 சதவீதம் கொலஸ்ட்ரால் உள்ளது.சிறுநீரக மேல் சுரப்பிகள், சினைப்பைகள், விதைப்பைகள் போன்ற உறுப்புகளில் கொலஸ்ட்ராலானது 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உடலில் உள்ள மொத்த அளவு கொலஸ்ட்ராலில் 20 சதவீதம் ரத்தத்தில் இருக்கிறது.

நன்மை தரும் கொலஸ்ட்ரால் :

நன்மை தரும் கொலஸ்ட்ரால் :

இவற்றின் செயல் திறனை அடிப்படையாகக் கொண்டு அடர்த்தி குறைந்த கொழுப்புப் புரதத்தைத் தீமை தரும் கொலஸ்ட்ரால் என்றும், அடர்த்தி மிகுந்த கொழுப்புப் புரதத்தை நன்மை தரும் கொலஸ்ட்ரால் என்றும் பிரித்துள்ளனர்.

நன்மை தரும் கொலஸ்ட்ரால் ரத்தக் குழாய்களில் படியும் தீமை தரும் கொலஸ்ட்ராலை அகற்றி அவற்றை ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் சென்று அழிக்கின்றன.

இவ்வாறு ரத்தக் குழாய்களில் குறிப்பாக இதயத் தமனிகளில் படிந்திருக்கும் கொழுப்புப் படிவங்களை அகற்றி, ரத்தக் குழாய்களில் ரத்தமானது தடையில்லாமல் ஓட துணை புரிவதால் அதாவது ரத்தக் குழாய்களைத் தூய்மைப்படுத்தும் சிறப்பான பணியைச் செய்வதால் இவற்றை நன்மை தரும் கொலஸ்ட்ரால் என்கிறார்கள்.

உங்களின் செயல்பாடுகள் :

உங்களின் செயல்பாடுகள் :

நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளிலும் வாழ்க்கை முறை மாற்றத்தால் மட்டுமே உங்களுக்கு தேவையாய் உள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்க உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள் போன்றவை மிகவும் அவசியமாகும்.

அதோடு, உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது தெரிந்தால் இந்த வகை உணவுகளை எல்லாம் எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.

ஆட்டு ஈரல் :

ஆட்டு ஈரல் :

ஆட்டு ஈரலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் அதனைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள்,கொலஸ்ட்ரால் பிரச்சனை இல்லாதவர்கள் அதனை தாரளமாக சாப்பிடலாம்.

ஈரலில் இரும்பு,செலினியம்,துத்தநாகம் போன்ற நமக்கு மிகவும் அவசியமான பல்வேறு சத்துக்கள் அதில் அடங்கியிருக்கின்றன. அதோடு ஃபோலிக் அமிலம் மற்றும் பல்வேறு உயிர்ச்சத்துக்களும் இதில் அடக்கம்.

ரத்த சோகை இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

பாப்கார்ன் :

பாப்கார்ன் :

பாப்கார்ன் ஆரோக்கியமான தீனியாகத் தான் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை கொலஸ்ட்ரால் அதிகமிருப்பவர்கள் சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும்.

மைக்ரோவேவ் மூலமாக தயாரிக்கப்படும் பாப்கார்னில் அதிகப்படியாக எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்திருப்பார்கள்.அதோடு சுவைக்காக சேர்க்கப்படும் ரசாயனங்களும் உடலுக்கு நல்லதல்ல.

சர்க்கரை :

சர்க்கரை :

நீங்கள் தொடர்ந்து அடிக்கடி சர்க்கரையை சேர்த்து வந்தால் அது உங்கள் உடலில் இருக்கும் நல்ல கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்திடும். சராசரியாக ஒரு நாளைக்கு பெண்ணெண்றால் ஆறு ஸ்பூனும் ஆண் என்றால் ஒன்பது ஸ்பூன் சர்க்கரையும் பயன்படுத்தலாம்.

குளிர்பானங்கள் :

குளிர்பானங்கள் :

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குளிர்பானம் குடிப்பதை அறவே தவிர்த்திட வேண்டும். அதில் சேர்க்கப்பட்டிருக்கும் கெமிக்கல்களால் உங்கள் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பார்த்திருக்கிறோம்.

அதே சமயம், அந்த குளிர்பானங்களில் இனிப்புக்காக சேர்க்கப்படும் சர்க்கரையளவு அதிகமாக இருக்கும் என்பதால் அதனை அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் முற்றிலுமாக தவிர்த்திடுவது நன்று.

வெண்ணெய் :

வெண்ணெய் :

சமையலில் அடிக்கடி பட்டர் பயன்படுத்துவோம். சுவைக்காக இதனைச் சேர்க்கப்படும் இதனையும் நீங்கள் தவிர்ப்பது தான் நல்லது. இதில் அதிகப்படியான கொழுப்பு இருக்கும் என்பதால் இதனை பயன்படுத்த வேண்டாம்.

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கு பலருக்கும் பிடித்தமான காயாக இருக்கிறது. உணவுகளில் உருளைக்கிழங்கு அதிகமாக சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். ஏனென்றால் இது உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும்.உருளைக்கிழங்கை எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

முட்டையின் மஞ்சள் கரு :

முட்டையின் மஞ்சள் கரு :

பொதுவாக முட்டையில் ஏராளமானசத்துக்கள் இருக்கின்றன. அவற்றை சாப்பிடாமல் தவிர்க்க கூடாது என்று தான் சொல்வார்கள், ஆம். முட்டையில் சத்துக்கள் இருக்கிறது அதனை நீங்கள் தினமும் சாப்பிடலாம்.

ஆனால் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் சாப்பிடாமல் தவிர்ப்பது தான் உங்களுக்கு நல்லது. இதில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் தன்மை நிறைய இருக்கிறது.

பர்கர் :

பர்கர் :

இன்றைய இளைஞர்கள் பலரும் துரித உணவினைத் தான் தங்களின் அன்றாட உணவாக பீட்சா,பர்கர் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்கள்.எப்போதாவது தானே... வாரம் ஒரு முறை தானே என்று சொல்லி பர்கர் சாப்பிடும் நபராக இருந்தால் முதலில் அதனை நிறுத்துங்கள்.

பர்க்கர் சாப்பிடுவதால் உங்களுக்கு ஒரு நாளில் கிடைக்கக்கூடிய கொலஸ்ட்ரால் அளவை விட அதிகமாக கிடைத்திடும்.

கறி :

கறி :

மாட்டுக்கறி மற்றும் ஆட்டுக்கறியில் அதிகப்படியாக கொழுப்பு இருக்கிறது. அதனால் நீங்கள் இதனை சாப்பிடாமல் தவிர்ப்பது தான் நல்லது. அதற்கு பதிலாக மீன் சாப்பிடலாம்.

ஃப்ரை செய்யப்படாத கோழிக்கறி ஆகியவற்றையும் சாப்பிடலாம்.

ஐஸ்க்ரீம் :

ஐஸ்க்ரீம் :

பலருக்கும் பிடித்தமான டெஸர்ட்களில் ஐஸ்க்ரீம் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது.

கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் அதனைத் தவிர்த்துவிடுவது நல்லது.

மிகச் சாதரணமாக நீங்கள் சாப்பிடக்கூடிய வெண்ணிலா ஐஸ்க்ரீமில் மட்டும் 80மில்லி கிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Avoid these foods who is in high cholesterol

Avoid these foods who is in high cholesterol
Story first published: Friday, November 24, 2017, 12:19 [IST]
Desktop Bottom Promotion