பச்சை காய்கறிகளில் மறைந்திருக்கும் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்...

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

அந்த காலத்தில் 80 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் வாழ்நாள் என்பது மிக மிக குறைவாக உள்ளது. இதற்குக் காரணம் இன்றைய மக்களின் உணவுப் பழக்கம் தான்.

பச்சை காய்கறிகளில் மனித உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.எல்லா காய்கறிகளையும் போதுமான அளவு தினமும் எடுத்துக் கொண்டால் தான் உடலுக்கு பலன் முழுவதும் கிடைக்கும்.

10 Reasons Why Doctors Recommend To Eat More Of Green Vegetables

காய்கறிகளை நாம் எந்த விதத்திலும் சாப்பிடலாம். அதாவது ஜூஸ், சாலட், டாப்பிங்ஸ், சாஸ் அல்லது அனைத்து வகையான உணவுகளிலும் காரம் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். ஆனால் காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதற்கு பதில் பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் முழுவதுமாக நம் உடலுக்குக் கிடைக்கும். சமைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் குறையக்கூடும்.

வாருங்கள் இப்போது பச்சை காய்கறிகளில் உள்ள முக்கியமான 10 சத்துக்கள் பற்றி படித்துத் தெரிந்துக் கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோயைத் தடுக்கும் :

புற்றுநோயைத் தடுக்கும் :

குறைந்தபட்சம் எல்லா காய்களிலும் அதிகப்படியாக ஆன்டிஆன்ஸிடன்ட்கள் இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் நோய் தொற்றுகளை அழிக்கக்கூடியது. மேலும், அவை ஏற்படாமலும் தடுத்துவிடும்.

ஆரோக்கியமான இதயம்

ஆரோக்கியமான இதயம்

மருத்துவர்கள் அனைவரும் கூறும் ஒரு முக்கியமான விஷயம் என்றால் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள் என்பது தான். பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கு பச்சை காய்கறிகள் தான் மிகச் சிறந்த உணவாகும். காய்கறிகளில் உள்ள அனைத்து சத்துக்களும் இதயத்திற்கு பலத்தைக் கூட்டுகிறது.

உடல் எடை குறைதல்

உடல் எடை குறைதல்

உடல் எடையை குறைக்க பலர் உணவு முறைகளை மாற்றுவர். ஆனால், அவற்றால் உடல் எடை கூறுவது தான் பெரும்பாலும் நடக்கும். ஆனால், அதுவே காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நம் வயிற்றை விரைவில் நிரப்பி விடும். அதனால் நம்மால் அதிகமாக சாப்பிட முடியாது. உடல் எடையும் விரைவில் குறைந்துவிடும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர

இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர

நிறைய காய்கறிகளில் சோடியம் சிறிதும் இல்லை. இதனால் தான் அவற்றால் நம் உடலின் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து கொள்ள முடிகிறது. எனவே, தினமும் சில காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

மலச்சிக்கலை சரி செய்யும்

மலச்சிக்கலை சரி செய்யும்

மலச்சிக்கலால் நீங்கள் அவதிப்பட்டால் உங்கள் உணவு பழக்கத்தை சற்று மாற்றி காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், காய்கறிகளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை தக்க விடலாம் வெளியேற்றி விடும்.

ஆரோக்கியமான சிறுநீரகம்

ஆரோக்கியமான சிறுநீரகம்

காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். ஏனென்றால், சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்களை பாதிக்கக் கூடிய எந்த ஒரு வேதிப்பொருளும் காய்கறிகளில் இல்லை. அதுவும் இயற்கை முறையினாலானா காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பொலிவான சருமத்திற்கு

பொலிவான சருமத்திற்கு

காய்கறிகளில் அதிகப்படியான வைட்டமின்கள் உள்ளன. இது நமது சருமத்திற்கு நல்ல பொலிவான தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்வதும் காய்கறியின் ஒரு முக்கியப் பயனாகும்.

முடி உதிர்வதைத் தடுக்கிறது

முடி உதிர்வதைத் தடுக்கிறது

தலை முடி உதிர்வதில் இருந்து அனைத்து விதமான தலைப் பிரச்சனைக்கும் வைட்டமின் மற்றும் புரதச் சத்துக் குறைப்பாடு தான் முக்கியக் காரணம். இதனால் தான் மருத்துவர்கள் இந்த விதமான பிரச்சனைகளுக்கு அதிக அளவில் காற்கறிகளை சேர்த்துக் கொள்ள கூறுகிறார்கள். எனவே, இந்த பிரச்சனை இருந்தால் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

 நாள்பட்ட வியாதிகள்

நாள்பட்ட வியாதிகள்

நமக்கு இருக்கும் சில நாள்பட்ட வியாதிகளுக்கு நம் வாழ்க்கை முறை தான் காரணம். நாள்பட்ட வியாதிகள் என்றால் நீரிழிவு நோய், இருதய சம்மந்தபட்ட நோய்கள் போன்றவை தான். இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க தினசரி உணவில் காய்கறிகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஆரோக்கியமான குடல் இயக்கம்

ஆரோக்கியமான குடல் இயக்கம்

காய்கறிகளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. இது குடலின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதனால், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் சுலபமாகத் தடுத்துவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Reasons Why Doctors Recommend To Eat More Of Green Vegetables

10 Reasons Why Doctors Recommend To Eat More Of Green Vegetables
Please Wait while comments are loading...
Subscribe Newsletter