மொச்சைக் கொட்டையை சாப்பிடுவதால் இந்த நோய்களை ஒதுக்கி வைக்கலாம் என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

மொச்சைக் கொட்டை பார்த்தாலே கடிக்கும் அளவிற்கு வசீகரமாக இருக்கும். அதிலுருக்கும் விதைதான் ருசியே. இது பீன்ஸ் வகையை சார்ந்தது.

மிக அதிக புரோட்டின் உள்ள காய்தான் மொச்சைக் கொட்டை. மிக அதிக மருத்துவ குணங்களும் பெற்றுள்ளது. சாப்பிடுவதற்கும் ருசியை தரும்.

Why should we consume Fava beans frequently

இதனை அவித்து சாப்பிடுவது நல்லது. இது வாய்வு தொல்லையை தரும். ஆனால் அதனை சமைக்கும்போது பெருங்காயம் இஞ்சி பூண்டு போன்றவற்றை கலந்து சமைத்தால் வாயுத் தொல்லை வராது. அதனை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கர்ப்பிணிகளுக்கு நன்மை :

கர்ப்பிணிகளுக்கு நன்மை :

கர்ப்பிணிகளுக்கு கால்சியம் மற்றும் இரும்பு சத்து மிக முக்கியம், இந்த இரண்டும் பரிந்துரைக்கபட்ட அளவு மொச்சையில் உள்ளது என்பது மகிழ்ச்சியான விஷயம்.

பார்கின்ஸன் நோய் :

பார்கின்ஸன் நோய் :

மொச்சையில் லெவோடோபா என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த பொருளைத்தான் பார்கின்ஸன் நோய் இருப்பவர்களுக்கு மருந்தாக மாத்திரைகளில் உபயோகப்படுகிறது.

 மன அழுத்தம் :

மன அழுத்தம் :

மொச்சையிலுள்ள அமினோ அமிலம் டோபமைன் நல்ல மன நிலையை அதிகரிக்கச் செய்கிறது. மன அழுத்தத்தை தடுக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன.

ஃபோலிக் அமிலத்தை அதிகம் கொண்டது :

ஃபோலிக் அமிலத்தை அதிகம் கொண்டது :

ரத்த உற்பத்தி, இதயம், நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவ்ற்றிற்கு நல்ல பலன்களை தரும் வகையில் மொச்சையில் ஃபோலிக் அமிலமும் மெக்னீசியமும் உள்ளது. இவை ஒட்டு மொத்த உடல் செயல்பாட்டிற்கு தேவையான சத்தை தருகிறது.

 அதிக சத்துக்களை கொண்டது :

அதிக சத்துக்களை கொண்டது :

வெறும் கால் கப் அளவு மொச்சையில் காப்பர், மெக்னீசியம், விட்டமின் பி1, தையமின், பொட்டாசியம், இரும்பு சத்து, ஆகியவ்ற்றை கொண்டுள்ளது..

 உடல் எடை குறைக்கும் :

உடல் எடை குறைக்கும் :

1 கப் மொச்சையில் 40 கிராம் புரோட்டின் உள்ளது. இது உடலிலுள்ள கொழுப்பை குறைத்து கலோரிகளை எரிக்க உதவும். அதனால் வேகமாக உடல் எடை குறைய உதவும்.

கரையும் நார்சத்து இதயத்திற்கு பலம் :

கரையும் நார்சத்து இதயத்திற்கு பலம் :

1 கப் அளவு மொச்சையில் 36 கிராம் நார்சத்து உள்ளது. அதுவும் கரையக் கூடிய நார்சத்து இருப்பதால் அது கொலஸ்ட்ராலையும் , சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why should we consume Fava beans frequently

Health benefits of Fava beans when you eat on a regular basis
Story first published: Tuesday, November 29, 2016, 9:00 [IST]