தொப்பையை வேகமா கரைக்கணுமா? அப்ப இந்த பச்சை நிற உணவுகளை சாப்பிடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

உடலிலேயே அடிவயிற்றில் தான் கொழுப்புக்கள் வேகமாக சேரும். அதே சமயம் அதைக் கரைப்பது என்பது தான் மிகவும் கடினமான ஒன்று. மேலும் அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அதாவது தொப்பை மிகவும் பெரிதாக இருந்தால், அனைத்து வியாதிகளும் மிகவும் வேகமாக ஒருவருக்கு வந்துவிடும்.

ஆனால் இப்படி அடிவயிற்றில் சேரும் கொழுப்புக்கள் பச்சை நிற உணவுகளை உண்பதன் மூலம் குறைக்க முடியும். மேலும் நிபுணர்களும், பச்சை நிற உணவுகளை தினமும் சேர்ப்பதன் மூலம் 90 சதவீதம் மெட்டபாலிசம் அதிகரிக்கும், 93 சதவீதம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் பச்சை நிற உணவுப் பொருட்களில் கலோரிகள் அதிகம் இருக்காது என்று கூறுகின்றனர்.

ஆகவே உங்களது அடிவயிற்றுக் கொழுப்பு அல்லது தொப்பையைக் குறைக்க உதவும் பச்சை நிற உணவுப் பொருட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து தொப்பையைக் குறைத்து சிக்கென்று இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாயில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இது தன்னுள் மிகுந்த ஊட்டச்சத்துக்களை அடக்கியுள்ளது. இதில் உள்ள உட்பொருட்களால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் வேகமாக கரையும். எனவே இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

பச்சை ஆப்பிள்

பச்சை ஆப்பிள்

இதுவரை நீங்கள் சிவப்பு ஆப்பிள் தான் நல்ல என்ற நினைத்துக் கொண்டிருப்பவரா? அப்படியெனில் உங்கள் எண்ணத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. அதாவது இதனை உட்கொண்டால் உடலின் ஆற்றல் அதிகரித்து, கொழுப்புக்களும் வேகமாக கரையும்.

பச்சை மிளகாய்

பச்சை மிளகாய்

பச்சை மிளகாய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். எனவே தொப்பையைக் கரைக்க நினைப்போர் உணவில் பச்சை மிளகாயை சேர்த்து சமைத்து சாப்பிட்டால், கொழுப்புக்களை கரைக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு, தொப்பை வேகமாக குறையும்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், தொப்பையைக் குறைக்க நினைப்போர், பீன்ஸை வாரத்திற்கு 2 முறை சமைத்து சாப்பிடுவது நல்லது. அதிலும் பீன்ஸை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பான பலனைத் தரும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் உள்ள ப்ராக்கோலியில் வைட்டமின் கே அதிகம் உள்ளது. இது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். ஏனெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மேலும் இது புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் வைட்டமின்களும், புரோட்டீன்களும் வளமாக உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவு, ஆற்றல் மற்றும் நார்ச்சத்து அதிகம். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் இந்த கீரையை உணவில் அடிக்கடி சேர்க்க நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

ஆம், முட்டைக்கோஸ் கூட கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும். அதிலும் முட்டைக்கோஸ் சூப்பை வாரத்திற்கு 2 முறை குடித்து வந்தால், உடல் எடையை வேகமாக குறைக்கலாம். எப்படியெனில் இந்த சூப் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Green Treats That Burn Lower Belly Fat

These green treats will burn your lower belly fat in just about no time. Here are 7 foods that will transform your life, making you healthier.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter