சர்க்கரை வியாதிக்கு மருந்தா இந்த காயை சாப்பிடுங்க!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

உலகளவில் இன்று அதிகம் தாக்கப்படும் நோய் சர்க்கரை வியாதிதான். அதுவும் இந்தியாவில்தான் அதிகமானோர் அதுவும் 40 வயதுகளிலிருந்து சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக சுகாதார மையங்கள் கூறுகின்றனர்.

சர்க்கரைவியாதி குணப்படுத்த இயலாத வியாதி. அதோடு இதயம், ரத்த அழுத்தம் தொடர்பான பல வியாதிகள் உண்டாவதற்கு சர்க்கரை வியாதிதான் காரணம்.

இந்த சர்க்கரை வியாதியை வராமலும் அதே சமயம் வந்தவர்களுக்கு குளுகோஸை கட்டுப்படுத்தவும் ஒரு காய்பலனைத் தருகிறது. அது வெண்ண்டைக்காய். அதனைப் பற்றி சில...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளுகோஸை கட்டுப்படுத்த :

குளுகோஸை கட்டுப்படுத்த :

வெண்டைக்காய் குளுகோஸை ரத்தத்தில் உறியப்படாமல் தடுக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாமல், குளுகோஸ் வளர்சிதை மாற்றத்திற்காக ஜீரண மண்டலத்திர்கு அனுப்ப்படுகிறது. எனவே சர்க்கரை வியாதி வந்தவர்கள் வெண்டைக்காய் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் :

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் :

வெண்டைக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு கேடு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து நோய் எதிர்ப்பு மண்டல்த்திற்கு ஊட்டம் அளிக்கிறது.

சிறு நீரக நோய்களை தடுக்கும் :

சிறு நீரக நோய்களை தடுக்கும் :

தொடர்ந்து வெண்டைக்காயை சாப்பிடுபவர்களுக்கு சிறு நீரக பாதிப்புகள் வராது. சர்க்கரைவியாதி வந்தவர்களுக்கு சிறு நீரக பாதிப்பு வரும் அபாயம் உள்ளது. எனவே அவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் வராது என ஜிலின் ஹெல்த் ஜர்னல் என்னும் இதழ் கூறுகிறது.

 கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டும் :

கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டும் :

கர்ப்பத்தின் போது தொடர்ந்து பெண்கள் வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தால், கரு சம்பந்தமான குறைபாடுகள் வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆஸ்துமாபை தடுக்கலாம் :

ஆஸ்துமாபை தடுக்கலாம் :

ஆஸ்துமா இருப்பவர்கள் வெண்டைக்காயை சாப்பிட்டால் மூச்சிரைப்பு, இருமல் ஆகியவை கட்டுப்படுத்தி, ஆஸ்துமா வராமல் காக்கிறது என பல மருத்துவ ஆய்வுகள் நிருபிக்கின்றன.

கொலஸ்ட்ராலை குறைக்கிறது :

கொலஸ்ட்ராலை குறைக்கிறது :

உடலில் கொலஸ்ட்ராலை குறைக்கும் வேலையை வெண்டைக்காய் செய்கிறது. இதயத்தில் அடைபடும் கொழுப்பை கரைத்து கல்லீரலும் அனுப்புகிறது. அதோடு உடல் பருமனானவர்கள் வாரம் 4 நாட்கள் வெண்டைக்காயை எண்ணெயில் வதக்காமல் வேக வைத்து சாப்பிட்டால் உடல் எடை குறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medicinal Properties of Okra

Eat Okra to keep all health problems such as Diabetes, Heart diseases at Bay
Story first published: Sunday, September 18, 2016, 9:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter