உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் சாப்பிட வேண்டிய பழங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடையைக் குறைக்க குறைவாக சாப்பிட வேண்டும் என்பதில்லை, சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டாலே போதும். மார்கெட்டில் எடையைக் குறைக்க உதவும் வகையில் ஏராளமான உணவுகள் விற்கப்படுகின்றன.

அதில் ஒன்று தான் பழங்கள். பழங்களில் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன்கள், நார்ச்சத்துக்களுடன், உடலுக்கு ஆற்றலை வழங்கும் இயற்கையான சர்க்கரைகளும் உள்ளன.

எடையை அதிகரிக்க நினைப்போர் சர்க்கரை அதிகம் உள்ள பழங்களை சாப்பிட வேண்டும். அதுவே எடையைக் குறைக்க நினைப்போர் சர்க்கரை குறைவாக உள்ள பழங்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதுவும் 7-23 கிராம் நிறைந்த பழங்களை உட்கொள்வது நல்லது.

இங்கு உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் சாப்பிட வேண்டிய சில பழங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

எடையைக் குறைக்க நினைப்போருக்கு எலுமிச்சை மிகவும் சிறப்பான பொருள். காலையில் எழுந்ததும் இப்பழத்தைக் கொண்டு ஜூஸ் போட்டு வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை வேகமாக குறையும்.

ப்ளாக்பெர்ரி

ப்ளாக்பெர்ரி

ப்ளாக்பெர்ரியில் வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் வைட்டமின் கே போன்றவை வளமான அளவில் உள்ளது. அதே சமயம் ப்ளாக்பெர்ரியில் 7 கிராம் சர்க்கரை தான் உள்ளது. எனவே நீங்கள் டயட்டில் இருந்தால், ஸ்நாக்ஸ் நேரத்தில் இப்பழத்தை சாப்பிடுங்கள்.

ராஸ்ப்பெர்ரி

ராஸ்ப்பெர்ரி

ராஸ்ப்பெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள செல்களுக்கு நல்ல பாதுகாப்பு வழங்கும். மேலும் இப்பழத்திலும் சர்க்கரை குறைவாக உள்ளது. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை உட்கொள்ளுங்கள் மற்றும் இது புற்றுநோயின் அபாயத்தையும் தடுக்கும்.

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரி பெண்களுக்கு ஏற்ற பழம். இதில் 23 கிராம் சர்க்கரை உள்ளது. இது உடலுக்கு வேண்டிய ஆற்றலை வழங்கும். மேலும் இப்பழத்தை உட்கொண்டால், சிறுநீரக பாதை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் 7 கிராம் சர்க்கரையும், ஏராளமான அளவில் வைட்டமின் சி சத்தும் உள்ளது. இதனை ஸ்நாக்ஸ் நேரத்தில் அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடல் எடை குறைய உதவும்.

பப்பாளி

பப்பாளி

பப்பாளியிலும் சர்க்கரை குறைவாகத் தான் உள்ளது. இது கோடையில் கூட கிடைக்கும் ஓர் அற்புத பழம். இப்பழத்தில் 10 கிராம் சர்க்கரை உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் ஏ, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் வளமாக உள்ளது. இது உடல் எடை குறைய உதவி புரியும்.

தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணியில் 90 சதவீதம் நீர்ச்சத்தும், 10 சதவீதம் சர்க்கரையும் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டால், வயிறு விரைவில் நிறைவதோடு, உடல் எடையும் குறையும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் சாப்பிட்டால் பட்டியலிட முடியாத அளவில் நன்மைகள் கிடைக்கும். இப்பழத்தில் 17 கிராம் சர்க்கரை உள்ளது மற்றும் நார்ச்சத்துக்களும் போதிய அளவில் உள்ளதால், இதனை உட்கொள்ள நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய ஆற்றலும் கிடைத்து, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் 18 கிராம் சர்க்கரையும், வளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இதனை உட்கொள்வதன் மூலமும் உடல் எடையைக் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fruits Low In Sugar For A Weight Loss Diet

Want to lose weight? Well with the help of these fruits that are low in sugar, you can add them to your daily diet. Enjoy these delicious foods.
Story first published: Friday, March 4, 2016, 15:15 [IST]
Subscribe Newsletter