ரத்தத்தை சுத்தப்படுத்தி ஆரோக்கியமா வாழ இந்த ஒரே ஒரு அற்புத ஜூஸை குடியுங்க!!.

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

ரத்தம்!! இது எப்படி இருக்கோ அப்படி உங்கள் மன ஓட்டமும், உடல் ஓட்டமும் இருக்கும். சத்துக்கள், ஆக்ஸிஜன் ஆகியவற்றை உடலின் தலையிலிருந்து பாதம் வரை கடத்திச் செல்வது உங்க ரத்தம்தான்.

சுத்தமான அடர்த்தியில்லாத ரத்தம் வேகமாக உடல் முழுவதும் பாயும்போது எல்லா உறுப்புகளும் தேவையான சத்தும் ஆக்ஸிஜனும் கிடைக்கும். இதனால் பலத்தோடு உங்களால் வலம் வர முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ரத்த ஓட்டம் ஏன் குறைகிறது?

ரத்த ஓட்டம் ஏன் குறைகிறது?

நாம் சரியாக உடல் உழைப்பை பெறாத போதும் , கண்ட உணவுக் குப்பைகளை(சத்தில்லாத எதுவும் குப்பைதானே) சாப்பிடும்போதும், உணவுகளிலுள்ள நச்சுக்கள், கொழுப்பு ஆகியவை ரத்தத்தில் அதிகமாக இருக்கும்போது ரத்த ஓட்டம் குறையும்.

இதன் காரணமாக ரத்த அழுத்தம் முதற்கொண்டு பல வியாதிகள் வர காரணமாகிவிடும். எனவே உண்ணும் உணவே உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

ரத்தம் சுத்தம் செய்ய :

ரத்தம் சுத்தம் செய்ய :

ரத்தத்தை சுத்தப்படுத்த வெளியிலிருந்து நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது உள்ளே செல்லும் உணவுப் பொருட்களால் மட்டுமே முடியும்.

அவ்வாறு ரத்தத்தை சுத்தப்படுத்த இங்கே சிறந்த வல்லுநர்கள் கூறிய இந்த ஜூஸை குடித்துப் பாருங்கள். இது நிஜமாகவே அற்புதத்தை தரக் கூடியது.

தேவையானவை :

தேவையானவை :

கேரட் - 5

மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை - 1

இஞ்சி-1 துண்டு

வெள்ளரிக்காய் - 1

ஆரஞ்சு - 1

ஜூஸ் செய்யும் முறை :

ஜூஸ் செய்யும் முறை :

கேரட், எலுமிச்சை இஞ்சி வெள்ளரி, ஆரஞ்சு ஆகியவற்றின் தோலை மட்டும் நீக்கிக் கொள்ளுங்கள். இவற்றை எல்லாம் கலந்து மிக்ஸி ஜாரில் போட்டு 1 கப் நீர் ஊற்றி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். வடிகட்டாமல் அதனை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளுங்கள்.

குடிக்கும் முறை :

குடிக்கும் முறை :

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடித்தும் பாருங்கள். நிஜமாகவே இதன் பலன் கண்டு வியப்பீர்கள். தினமும் ஃப்ரஷாக செய்து குடியுங்கள். அதன் முழுப் பலனை அனுபவியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Drink this Healthy juice to purify your blood

Drink this Natural Juice to cleanse your blood and get rid if all diseases
Subscribe Newsletter