உடல் எடை குறைத்து, கொடியிடை பெற திராட்சை டயட்!

By: Hemi Krish
Subscribe to Boldsky

உங்கள் அன்றாட உணவில் திராட்சை சேர்த்துக் கொண்டால், உடலில் கொழுப்பு குறைவது நிச்சயம். சும்மா சொல்லலைங்க.ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனைப் பற்றி விரிவாக பார்ப்போமா?

யு.எஸ்ஸிலுள்ள, நார்த் கரோலினா கிரீன்ஸ்ப்ரோ என்ற பல்கலைக்கழகத்தில் திராட்சைப் பற்றி ஆராய்ச்சியை தொடங்கியிருக்கிறார்கள். அது உடலில் வியக்கும் வகையில் கொழுப்பினைக் குறைப்பதாக கூறியுள்ளார்கள். திராட்சையிலுள்ள பாலிஃபீனால் என்ற நுண்ணூட்டமானது , உடலில் படியும் அதிக்கபடியான கொழுப்பினை கரைக்க உதவுகிறது.

Consuming grapes leads to reduce body fat

இதற்காக இரண்டு விதமான ஆய்வினை அவர்கள் மேற்கொண்டனர். முதலாம் ஆய்வில் நிறைவுறும் கொழுப்பினைக்(saturated fat) கொண்ட வெண்ணெய்அதிகம் நிறைந்த உணவுகளை 3% திராட்சைப் பழங்களோடு கொடுத்தனர்.

இதை தொடர்ந்து 11 வாரம் கொடுத்து பின் அவர்களை சோதித்ததில், உடல முழுவதும் படிந்துள்ள கொழுப்பு கரைந்துள்ளது தெரிய வந்தது. திராட்சை பழங்கள், குடலிலுள்ள நல்ல பேக்டீரியாக்களின் செயல்களை ஊக்குவித்து, செயல் பட வைத்திருக்கிறது. இதனால் குடல் செயல்பாடு நன்றாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Consuming grapes leads to reduce body fat

இரண்டாவது ஆய்வு 16 வாரம் தொடர்ந்தது. இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களை இரு வகையினராக பிரித்தனர். ஒன்று திராட்சையில் உள்ள பாலிஃபீனால் பகுதியினை பிரித்தெடுத்து அதனுடன்அதிகமான நிறைவுற்ற கொழுப்பு( saturated fat) கொண்ட மாட்டிறைச்சி, பன்றிக் கொழுப்பு சேர்த்த உணவுகளை கொடுத்தனர். இரண்டாம் வகையினருக்கு 5% அளவு முழு திராட்சையை கொழுப்பு உணவுகளுடன் கொடுத்தனர்.

Consuming grapes leads to reduce body fat

இதில் முதல வகையினரில், மிக அதிக கொழுப்புடன் பாலிஃபீனால் அடங்கிய திராட்சை கொடுத்தவர்களுக்கு கொழுப்பு நன்றாக குறைந்து, குளுகோஸ் ஏற்புத்திறன் அதிகமடைந்துள்ளது. கல்லீரலில் காணப்படும் வீக்கத்தை குறைத்துள்ளது. குடலின் செயல்பாடுகளும் அதிகமாக காணப்பட்டன. இதனால் முழுவதும் செரிமானம் செய்து எனர்ஜியாக மாற்றப்படுகிறது.

இரண்டாம் வகையினரில் , கொழுப்புடன் கொடுத்த முழு திராட்சை உணவுகளில் கொழுப்புகள் போதுமான அளவில் கரையவில்லை. ஆனால் குடலிலுள்ள நுண்ணுயிர்கள் செயல்கள் தூண்டப்பட்டதாக தெரிய வந்துள்ளது..சிறு குடல் பெருங்குடலில் செயல்களில் நல்ல முன்னேற்றம் தெரியவந்துள்ளது.

Consuming grapes leads to reduce body fat

இரண்டு ஆய்விலும் தெரியவந்தது என்னவென்றால், முழு திராட்சை, பாலிஃபீனால் கொண்ட திராட்சை பகுதி ஆகிய இரண்டுமே சிறு மற்றும் பெருங்குடலில் செயல்களை ஊக்குவிக்கின்றது. கொழுப்பினைக் குறைக்கிறது என ஆராய்ச்சியாளர் மைக்கேல் மேக் இன்டோஷ் கூறியுள்ளார்.

இந்த கட்டுரையை பற்றி நியூட்ரிஷனல் பயோகெமிஸ்ட்ரி என்னும் இதழ் வெளியிட்டுள்ளது.

செட்டிநாடு அதிரசம் இப்ப உங்களுக்காக ஆன்லைனில்..

English summary

Consuming grapes leads to reduce body fat

Intake of grapes reducing higher fat..researchers found !read below for further details..,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter