ஆண்கள் ஆரோக்கியத்தைக் காக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் ஆண்களின் ஆரோக்கியம் மிகவும் மோசமாக உள்ளது. அதற்கு ஆண்கள் தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து அதிகம் ஊர் சுற்றி, அதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டு, உடலில் கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெறாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு விரைவில் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் தாக்குகின்றன.

ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமெனில், ஆண்கள் அன்றாடம் ஒருசில உணவுப் பொருட்களை உண்ணும் உணவில் சேர்த்து வர வேண்டும். முக்கியமாக காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொண்டு வர வேண்டும். முக்கியமாக கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால், ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஆண்கள் குறிப்பிட்ட உணவுகளின் மீது ஆர்வத்தைக் காட்ட வேண்டும்.

ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ்...

இங்கு தமிழ் போல்ட் ஸ்கை ஆண்கள் தங்களின் ஆரோக்கியத்தைக் காக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

தக்காளியில் உள்ள லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், பல்வேறு நோய்களில் இருந்து நல்ல பாதுகாப்பு அளிக்கும். முக்கியமாக ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தக்காளி நல்ல பாதுகாப்பு வழங்கும்.

கடல் சிப்பி

கடல் சிப்பி

ஒவ்வொரு ஆண்களும் சாப்பிட வேண்டிய கடல் உணவு தான் கடல் சிப்பி. இது இயற்கையான பாலுணர்வைத் தூண்டக்கூடிய உணவுப் பொருள். அதுமட்டுமின்றி, இது விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தையும் அதிகரிக்கும். எனவே ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால், படுக்கையில் நன்கு சிறப்பாக செயலாற்ற முடியும்.

பூண்டு

பூண்டு

கடல் சிப்பியைப் போன்றே, பூண்டையும் ஆண்கள் உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

தானியங்கள்

தானியங்கள்

தானியங்களில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதனை ஆண்கள் உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றலை அதிகரித்து, தற்போதைய ஆண்களுக்கு அதிகம் ஏற்படும் மன அழுத்தத்தை நீக்கும்.

கானாங்கெளுத்தி மீன்

கானாங்கெளுத்தி மீன்

மீன்களில் கானாங்கெளுத்தி மீனை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், தசைகளின் வளர்சிசி அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது ஆண்களின் ஆற்றலும் தக்க வைக்கப்படும்.

முட்டை

முட்டை

முட்டையில் உள்ள கோலைன் என்னும் வைட்டமின் ஞாபக சக்தியை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இதுவும் ஜிம் செல்லும் ஆண்களின் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இவற்றை ஆண்கள் தங்கள் டயட்டில் சேர்த்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, எலும்புகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்துவிடும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரிகளில் ப்ளேவோனாய்டுகள் வளமாக நிறைந்துள்ளது. இந்த பழத்தை ஆணக்ள் சாப்பிட்டு வந்தால், ஆண்களின் புரியும் திறன் அதிகரிக்கும். இதனால் அலுவலகத்தில் சிறப்பாக செயலாற்ற முடியும்.

மாதுளை

மாதுளை

மாதுளையில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் வளமாக உள்ளது. இதனால் ஆண்களை அதிகம் தாக்கும் கொலஸ்ட்ரால் குறைவதோடு, உயர் இரத்த அழுத்தமும் குறையும்.

பாதாம்

பாதாம்

பாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை அனைத்தும் இதயம், செரிமான மண்டலம் மற்றும் சருமத்திற்கு நல்லது. எனவே திருமணம் ஆவதற்கு முன் தினமும் பாதாமை உணவில் சேர்த்து வாருங்கள்.

திணை

திணை

தானியங்களில் ஒன்றான திணையை ஆண்கள் உணவில் அவ்வப்போது சேர்த்து வர வேண்டும். இதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பின் ஆரோக்கியமாக இருக்க, இவற்றை அவசியம் சாப்பிட வேண்டும்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் தசைகளின் வளர்ச்சிக்கு அவசியமான அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் ஆண்களுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் அதிக அளவில் நிறைந்திருப்பதால், இவற்றை கண்டிப்பாக ஆண்கள் அவ்வப்போது உட்கொண்டு வர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Twelve Best Foods For Men To Eat

Here are some of the good foods for men to eat. Take a list at these foods to gain better health and to stay physically fit.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter