கோடையில் உடல் வறட்சி அடையாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!

Posted By:
Subscribe to Boldsky

காலநிலை மாற்றத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதிலும் கோடை வர ஆரம்பித்துவிட்டால், அதன் அறிகுறியே அடிக்கடி தாகம் எடுக்கும், எப்போதும் வெப்பத்தை உணரக்கூடும். மேலும் கேடையில் வெயில் அதிகம் இருப்பதால், உடலில் உள்ள நீர்ச்சத்தானது குறையும். இக்காலத்தில் தண்ணீரை அதிகம் குடிக்காமல் இருந்தால், பின் உடல் வறட்சி ஏற்பட்டு, இதனால் வேறு சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

கோடையில் வெறும் தண்ணீர் மட்டும் உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க போதாது. வேறு சில நீர்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பானங்களையும் எடுத்து வர வேண்டும். இங்கு அப்படி கோடையில் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணியில் நீர்ச்சத்து 92% உள்ளது. மேலும் இது கோடையில் அதிக அளவில் கிடைக்கும் பழமும் கூட. ஆகவே இந்த பழத்தை அடிக்கடி வாங்கி சாலட் செய்து சாப்பிடுங்கள். இந்த சாலட் சுவையாக இருப்பதற்கு தர்பூசணியுடன், மிளகுத் தூள் மற்றும் உப்பு தூவி சாப்பிடுங்கள்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயும் கோடையில் அதிகம் கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. இது உடலின் நீர்ச்சத்தின் அளவை அதிகரிப்பதோடு, உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இதில் தர்பூசணியை விட அதிக அளவு, அதுவும் 96% நீர்ச்சத்து உள்ளது. மேலம் இதில் கொழுப்புக்கள் இல்லை, வைட்டமின் பி6, வைட்டமின் கே மற்றும் பல சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

கோடையில் உள்ள சீசன் பழங்களில் ஒன்று தான் ஸ்ட்ராபெர்ரி. இந்த பழத்தில் 92% நீர்ச்சத்துடன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவையும் இருப்பதால், இது உடல் வறட்சியைத் தடுப்பதோடு, சருமத்தின் அழகையும் அதிகரிக்கும்.

லெட்யூஸ்

லெட்யூஸ்

லெட்யூஸ் என்னும் கீரையிலும் வெள்ளரிக்காய்க்கு இணையான நீர்ச்சத்து நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த கீரையில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருப்பதால், இதனை கோடையில் சாலட்டுகளிலோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால், உடலை கோடையில் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

மோர்

மோர்

கோடையில் மோர் அதிகம் குடித்து வந்தால், உடல் குளிர்ச்சியுடனும், நீர்ச்சத்துடனும் இருக்கும். மேலும் மோர் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து, கோடையில் ஏற்படும் சளியில் இருந்து பாதுகாப்பு தரும்.

முலாம் பழம்

முலாம் பழம்

தர்பூசணியைப் போன்றே முலாம் பழத்திலும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் கோடையில் அதிகம் கிடைக்கக்கூடிய பழங்களிலும் ஒன்று.

இளநீர்

இளநீர்

இளநீர் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. ஆனால் இதனை கோடையில் குடித்து வந்தால், உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துடன், உடலின் ஆரோக்கியமும் மேம்படும். அதுமட்டுமல்லாமல், இது உடலில இருந்து நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

கோடையில் ஏற்படும் தாக்கத்தை தணிக்கும் பானங்களில் ஒன்று எலுமிச்சை ஜூஸ். இதனை குடித்தால் தாகம் மட்டுமின்றி, உடலில் ஏற்படும் வறட்சியும் தடுக்கப்படும். ஆகவே கோடையில் முடிந்தால் எலுமிச்சை ஜூஸை அதிகம் பருகி வாருங்கள்.

நன்னாரி சர்பத்

நன்னாரி சர்பத்

கிராம பகுதிகளில் மிகவும் பிரபலமான ஒரு பானம் தான் சர்பத். கோடையில் பலர் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த குளிர்பானங்கள் பாட்டில் பாட்டிலாக வாங்கி வைத்துக் கொண்டு குடிப்பார்கள். ஆனால் அவற்றை விட மிகவும் சிறந்ததும், உடலுக்கு ஆரோக்கியமானதும் தான் நன்னாரி சர்பத். ஆகவே இதனை வாங்கி கோடையில் ஜூஸ் போட்டு குடியுங்கள்.

நுங்கு

நுங்கு

கோடையில் வெயிலின் வெப்பத்தைத் தணிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் நுங்கு. இந்த நுங்கு கோடையில் தான் அதிக அளவிலும், விலைக் குறைவிலும் கிடைக்கும். மேலும் இதன் சுவைக்கு இணை எந்த ஒரு உணவுப்பொருளும் வராது எனலாம். அந்த அளவில் இது மிகவும் ருசியாக இருக்கும்.

தண்ணீர்

தண்ணீர்

பழங்கள், காய்கறிகள், பானங்கள் என்று மட்டும் சாப்பிட்டால் போதாது, தண்ணீரையும் அதிக அளவில் குடித்து வர வேண்டும். அதிலும் 2-3 லிட்டர் தண்ணீரை தவறாமல் குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Stay Hydrated With These Food Items This Summer

You don't have to gulp down fluids to stay hydrated this summer. Here's a list of eatables that will help you stay fit and fine in summers.
Subscribe Newsletter