செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உடலிலேயே செரிமான மண்டலம் மிகவும் முக்கியமான உறுப்பு. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக இயங்கும். அதிலும் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க... புற்றுநோய் சீக்கிரம் வந்துடும்...

அதற்கு செரிமான மண்டலத்திற்கு கஷ்டத்தைக் கொடுக்கும் அளவிலான உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி சேர்த்து வந்தால், ஆபத்தான நோய்களான புற்றுநோய், நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மேலும் செரிமான மண்டலமானது சுத்தமாக இருந்தால், அவை மூளை, பாலுறுப்புகள் மற்றும் இதர சுரப்பிகளை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.

எளிதில் செரிமானம் அடையாமல் தொந்தரவு கொடுக்கும் உணவுகள்!!!

சரி, இப்போது அத்தகைய முக்கியமான செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள லைகோபைன் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

கேரட்

கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் தினமும் 2 கேரட்டை உட்கொண்டு வந்தால், அவை வாழ்நாளில் 10 வருடத்தை அதிகரிக்கும். எனவே இதனை உட்கொண்டு வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் இவை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோவை உட்கொண்டு வந்தால், வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுவதோடு, வயிற்றில் ஏதேனும் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருந்தாலும், அதனை சரிசெய்துவிடும்.

தயிர்

தயிர்

தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இருப்பதால், அதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து, செரிமானம் சீராக நடைபெறும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக இருப்பதால், இவை ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். குறிப்பாக க்ரீன் டீ வயிற்றில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கும்.

இளநீர்

இளநீர்

தினமும் இளநீர் குடித்து வந்தால், உடல் வெப்பமானது தணியும். மேலும் இவை குடல் மற்றும் வயிற்றை திறம்பட செயல்படத் தூண்டும்.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் இருப்பதுடன், மற்ற பழங்களை விட சர்க்கரையானது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் செரிமான மண்டலத்தில் தேவையற்ற நச்சுக்கள் சேர்வதைத் தடுக்கலாம்.

நட்ஸ்

நட்ஸ்

தினமும் நட்ஸ் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலமானது சீராக செயல்படும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியின் அற்புதத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எனவே முடிந்த அளவில் தினமும் உணவில் இஞ்சியை தவறாமல் சேர்த்து வாருங்கள். உங்கள் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள கரையக்கூடிய ஆசிட்டுகள் செரிமானம் சீராக செயல்பட உதவும். மேலும் இந்த பழங்களை உட்கொண்டு வந்தால், அவை செரிமானத்தை அதிகரித்து, உடலானது ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ள உதவிப் புரியும்.

பூண்டு

பூண்டு

பூண்டும் ஒரு அட்டகாசமான செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருள். அதிலும் இதில் அல்லிசின் என்னும் பொருள் இருப்பதால், இவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் அதிகரிக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தாலும், செரிமான மண்டலம் சுத்தமாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் செயல்படும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

12 Foods That Clean Your Digestive System

Let us look at these foods to clean stomach. Here are 12 foods to improve digestion. Read on...
Story first published: Friday, September 5, 2014, 9:16 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter