For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடைகாலத்திலும் வசந்தமாய் வாழ, இத சாப்பிடுங்க...

By Maha
|

குளிர்காலத்தின் இறுதியிலும், கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக வரும் காலம் தான் வசந்த காலம். இந்த காலத்தில் பகல் நேரம் அதிகமாகவும், இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். இவ்வாறு பகல் மற்றும் இரவு பொழுதுகளின் நேரம் மாறுவது மட்டுமின்றி, காலநிலையும் மாறுபடுகிறது. இத்தகைய காலநிலை மாறுபடுவதால், நிறைய வகையான காய்கறிகளும், பழங்களும் மார்கெட்டில் கிடைக்கும் என்று அர்த்தம். உதாரணமாக, ஆரஞ்சு பழமானது பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் அதிகம் கிடைக்கும் ஒரு குளிர்கால பழம். ஆனால் இந்த பழம் வசந்த காலத்திலும் கிடைக்கும்.

பொதுவாக அனைத்து பழங்களுமே அனைத்து நாட்களும் கிடைக்கும். ஆனால் அதனை சீசன் போது மட்டுமே அதிகம் சாப்பிட முடியும். ஏனெனில் அப்போது தான், அதன் விலையானது மிகவும் மலிவாக இருக்கும். தற்போது வசந்த கால முடிவு மற்றும் கோடை கால ஆரம்பம் என்பதால், இந்த காலத்திலும் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும். உதாரணமாக, அஸ்பாரகஸ், அவுரிநெல்லிகள், ஆப்ரிக்காட் மற்றும் பூண்டு போன்றவை அதிகம் கிடைக்கும்.

இப்போது வசந்த மற்றும் கோடை கால பழங்கள் மற்றும் காய்கறிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை வாங்கி சாப்பிட்டு, கோடைகாலத்திலும் வசந்தமாய் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்ரிக்காட்

ஆப்ரிக்காட்

வெதுவெதுப்பான காலநிலையில் அதிகம் வளரக் கூடியது தான் ஆப்ரிக்காட். அதிலும் இந்த பழம் வசந்த காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடியது. இந்த பழத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர் அதிகம் வாங்கி சாப்பிடலாம்.

கூனைப்பூக்கள் (Artichokes)

கூனைப்பூக்கள் (Artichokes)

இதில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. எனவே இந்த ஆரோக்கியமான காய்கறியை வாங்கி சாப்பிடுவதை மறக்க வேண்டாம்.

அவுரிநெல்லிகள் (Blueberries)

அவுரிநெல்லிகள் (Blueberries)

கோடை காலப் பழமான பெர்ரிப் பழங்களில் ஒன்றான அவுரிநெல்லிகளிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இவற்றை சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, இதயமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

கேரட்

கேரட்

ஆண்டு முழுவதும் இந்த காய்கறி கிடைக்கும். ஆனால் இந்த காய் வசந்த மற்றும் கோடை காலத்தில் சற்று அதிகமாகவே கிடைக்கும். மேலும் இதனை சாப்பிட்டால், உடல் குளிர்ச்சி அடைவதோடு, கண்களுக்கும் மிகவும் நல்லது.

பீன்ஸ்

பீன்ஸ்

வசந்த கால காய்கறிகளுள் பச்சை நிற பீன்ஸ் ஒன்று. இந்த காய்கறி இதயத்திற்கும், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்தது. எனவே டயட்டில் இருப்பவர்கள், இந்த காய்கறியை, இந்த நேரத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

முள்ளங்கி

முள்ளங்கி

வசந்த காலத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற முள்ளங்கியை அதிகம் வாங்கி சாப்பிடலாம். இந்த காய்கறிகளில் உடலை ஆரோக்கியத்துடன் வைக்கும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த காய்கறி வசந்த மற்றும் கோடை காலத்தில் அதிகமாகவும், விலை மலிவுடனும் கிடைக்கும்.

வெள்ளை வெங்காயம் (Vidalia Onions)

வெள்ளை வெங்காயம் (Vidalia Onions)

வருடம் முழுவதும் தான் வெங்காயம் கிடைக்கும். அதிலும் வெங்காயத்தில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றான சல்பர் அதிகம் நிறைந்துள்ள வெள்ளை வெங்காயமானது, இந்த காலத்தில் அதிகம் கிடைக்கும், இந்த வெங்காயம் சுவாசக் கோளாறான ஆஸ்துமாவிற்கு மிகவும் சிறந்தது.

அவகேடோ

அவகேடோ

அவகேடோவில் நிறைய உடல், சருமம் மற்றும் கூந்தலுக்கான நன்மைகள் நிறைந்துள்ளன. இத்தகைய பழம் பொதுவாக ஒரு வசந்த கால பழமாகும். எனவே தற்போது இதனை முடிந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பூண்டு/ பசும் பூண்டு

பூண்டு/ பசும் பூண்டு

வாசனைக்காக பயன்படுத்தும் பூண்டு/பச்சை பூண்டு (Garlic/green garlic) இதயத்திற்கு மிகவும் நல்லது. இந்த காய் இரைப்பை குடல் நோய் வருவதை தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

இந்த பழம் கோடை மற்றும் வசந்த காலத்தில் மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கும். அதனால் தான் கோடை காலத்தில் எலுமிச்சை ஊறுகாயை அதிகம் போடுகின்றனர்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள வெள்ளரிக்காய் கோடை காலத்தில் அதிகம் விற்பதற்கு காரணம், இது ஒரு கோடை கால காய்கறி என்பதாலேயே ஆகும். இதனால் நீர்ச்சத்து உடலுக்கு கிடைப்பதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்படும்.

மிளகாய்

மிளகாய்

இந்த காயும் கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும். இது உணவிற்கு காரத்தை மட்டும் தருவதில்லை, உடலுக்கு தேவையான ஒரு சில நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது இதனை உணவில் சேர்ப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடல் எடையும் குறையும்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

வசந்தம் மற்றும் கோடை காலத்தில் விற்கப்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. இந்த பழம் பாலுணர்ச்சியை தூண்டும் ஒரு சிறப்பான பழங்களுள் ஒன்று. எனவே இதனை வாங்கி சாப்பிட்டு, காதல் வாழ்க்கையை நன்கு சந்தோஷமாக அனுபவியுங்கள்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது உடல் முழுவதற்கும் ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரக்கூடியது. மேலும் இதனை வைத்தும், இந்த காலத்தில் ஊறுகாய் செய்து வைத்துக் கொள்ளலாம்.

பப்பளிமாசு

பப்பளிமாசு

உடல் எடை மற்றும் வாத நோயைக் குணப்படுத்தும் சிறந்த பழம் என்றால் அது பப்பளிமாசு தான். இந்த பழம் குளிர்காலத்திலும், வசந்த காலத்திலும் அதிகம் கிடைக்கக்கூடியது. ஆகவே இதனை அதிகம் வாங்கி சாப்பிடுங்கள்.

நெக்ட்ரைன் (Nectarines)

நெக்ட்ரைன் (Nectarines)

இது பார்ப்பதற்கு பீச் பழத்தைப் போன்றே காணப்படும். இது கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும். இந்த பழத்தில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

அன்னாசி

அன்னாசி

வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள பழங்களுள் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடைய அன்னாசியும் ஒன்று. இதனை சாப்பிட்டால், எலும்புகள் வலுவடைதல், சளி மற்றும் ஜலதோஷம் குணமாதல், ஈறுகள் நன்கு ஆரோக்கியமாக இருப்பது மற்றும் செரிமானத்தை அதிகரிப்பது போன்ற நன்மைகள் கிடைக்கும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

உணவை அலங்கரிக்கப் பயன்படும் கொத்தமல்லி வசந்த காலத்தில் அதிகம் கிடைக்கும். அதிலும் இதனை சட்னி செய்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். எனவே இதனை வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Spring/Summer Fruits and Vegetables | கோடைகாலத்திலும் வசந்தமாய் வாழ, இத சாப்பிடுங்க...

During spring-summer season, you can find many fruits & vegetables that are healthy and available whole year. If you want to eat some seasonal foods, then you can relish on these spring summer vegetables and fruits. Check out the list..
Story first published: Tuesday, March 12, 2013, 13:37 [IST]
Desktop Bottom Promotion