Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
தொண்டை அழற்சி நோய் இருக்குதா? ஈஸியா குணப்படுத்தலாம்!!!
அடிநா அழற்சி எனப்படும் தொண்டை அழற்சி நோய், தொண்டைச் சுவர்களில் ஒருவித சிவப்பு நிற புண் போன்று உண்டாக்கும். இது வந்தால், எதையும் சரியாக சாப்பிட முடியாது. இந்த அடிநா எனப்படும் டான்சில், தொண்டையின் இரு பக்கங்களில் நிணநீர் திசுக்கள் உள்ளன. இவை சுவாச உறுப்பை நோய்கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கிறது. ஆனால் இந்த டான்சில் மட்டும் விரைவில் கிருமிகளால் தாக்கப்படும். அவ்வாறு தாக்கப்படுவதினால் உண்டாவது தான், தொண்டை புண், தொண்டை அழற்சி, அதனால் தொண்டைகளில் வலி மற்றும் உணவுகளை சாப்பிட முடியாத நிலை என்றெல்லாம் ஏற்படுகிறது.
பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை குளிர்காலங்களில், அதிக குளிர்ச்சி உள்ள இடங்களில் இருப்பது, குளிர்ச்சியான பானங்களை குடிப்பது போன்றவற்றால் உண்டாகிறது. எனவே இத்தகைய பிரச்சனை இருந்தால், அப்போது அதனை பெரிதாக்காமல் இருப்பதற்கு, மென்மையான மற்றும் தொண்டையில் உள்ள புண், அழற்சி போன்றவற்றை தூண்டாமல், அவற்றை குணப்படுத்தும் வகையில் இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
சரி, இப்போது அத்தகைய தொண்டை அழற்சியைக் குணப்படுத்தும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

வேக வைத்த சாதம்
சாதம் மிகவும் மென்மையாகவும், விழுங்குவதற்கு ஈஸியாகவும் இருக்கும். அதிலும் மசாலாப் பொருட்கள் சேர்க்காமல் இருக்கும் வெள்ளை சாதம் மிகவும் சிறந்தது. மேலும் அந்த சாதத்துடன், சிறிது கிராம்பை பொடி செய்து போட்டு சாப்பிட்டால், தொண்டையில் இருக்கும் அழற்சியை குணப்படுத்தலாம்.

பாஸ்தா
தொண்டையில் பிரச்சனை உள்ளவர்களுக்கு வேக வைத்த பாஸ்தா சிறந்த உணவாக இருக்கும். இந்த பாஸ்தா தொண்டையில் உள்ள புண் மற்றும் இதர பிரச்சனைகளை சரிசெய்துவிடும். இதற்கு காரணம் இதில் தொண்டையில் அழற்சியை தூண்டும் எந்த ஒரு பொருளும் சேர்க்காததாலேயே ஆகும். குறிப்பாக பா1தா சமைக்கும் போது, அதில் சீஸ் சேர்க்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அது தொண்டையில் சிக்கிக் கொண்டு, எரிச்சலை உண்டாக்கும்.

இஞ்சி
தொண்டையில் ஏற்படும் நோய்களை குணமாக்குவதில் இஞ்சி மிகவும் சிறப்பானது. அதற்கு இஞ்சியை தேனில் நனைத்து சாப்பிட்டால், உடனே குணமாகிவிடும். மேலும் வறட்சியான இருமல் வருவதும் சரியாகிவிடும்.

தேன்
தேனில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் தேனுடன், மிளகுத் தூள் கலந்து சாப்பிட்டால், தொண்டையில் உள்ள அழற்சிப் புண் குணமாகிவிடும்.

வேக வைத்த பசலைக் கீரை
கீரைகளில் பசலைக் கீரையை வேக வைத்து சாப்பிட்டால் நல்லது. பொதுவாக கீரைகளில் நிறைய சத்துக்கள் உள்ளன. எனவே தொண்டையில் அழற்சி உள்ளவர்கள், பசலைக் கீரையை சூப் செய்து, அதில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, தொண்டையில் உள்ள பிரச்சனைகளும் நீங்கும்.

மசித்த உருளைக்கிழங்கு
இது ஒரு ஆரோக்கியமான மற்றும் தொண்டை அழற்சியைக் குணப்படுத்தும் உணவுகளில் ஒன்று. அதிலும் இதனை தயார் செய்து சாப்பிடுவது மிகவும் எளிமையானது.

இஞ்சி மற்றும் எலுமிச்சை
பானங்களில் எலுமிச்சை மற்றும் இஞ்சி கலந்து செய்யப்படும் ஜூஸ் சிறந்த பலனை தரும். அதற்கு ஒரு டம்ளரில் எலுமிச்சை சாற்றுடன், இஞ்சியை தட்டிப் போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது தேன் ஊற்றி குடிப்பது நல்லது.

முட்டை
முட்டையை உடைத்து ஊற்றி, மென்மையாக கிளறி பொரியல் போன்று செய்து சாப்பிட்டால், தொண்டை அழற்சி குணமாகும்.

இட்லி
இட்லி மிகவும் மென்மையாக இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் தரும். அதிலும் இந்த இட்லியை சூடாக சாம்பார் இல்லாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் சாம்பாரில் புளி மற்றும் மசாலாப் பொருட்கள் இருப்பதால், அவை தொண்டைக்கு அதிக கேடு விளைவிக்கும்.

எலுமிச்சை மற்றும் தேன்
இது தொண்டை அழற்சியை குணப்படுத்தும் வீட்டில் செய்யப்படும் ஒரு மருத்துவ பானம். அதற்கு வெதுவெதுப்பான நீரில், சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்க வேண்டும்.

தயிர்
அனைவரும் தொண்டையில் பிரச்சனை ஏதேனும் இருந்தால், தயிரை அறவே தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையல் மிகுந்த குளிர்ச்சியான தயிரை சாப்பிடுவதால் தான் பிரச்சனை ஏற்படும். அறை வெப்பநிலையில் இருக்கும் தயிரை சாப்பிட்டால், தொண்டையில் உள்ள பிரச்சனை குணமாகும்.



Click it and Unblock the Notifications
