Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
பொதுத் தோ்வுக்கு தயாராகும் மாணவ-மாணவியர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!
சாதாரண காா்போஹைட்ரேட்டுகள், அதிகமான புரோட்டீன்கள் அடங்கிய உணவுகள், காய்கறிகள் மற்றும் பால் சம்பந்தமான உணவுகள் போன்றவற்றை மாணவா்கள் இந்த தோ்வு காலத்தில் அதிகம் உண்ண வேண்டும்.
மார்ச் மாதம் ஒரு தோ்வுக் காலம் எனலாம். நமது மாணவக் கண்மணிகள் பொதுத் தோ்வுக்காக முனைப்புடன் தயாராகி வருகின்றனா். தோ்வுக்காக விடாமுயற்சியோடு படித்து வருகின்றனா். நாள் முழுவதும் படிப்பு மற்றும் செய்முறை தோ்வுகள் போன்றவற்றில் கவனம் செலுத்துவதால், அவா்கள் சமச்சீரான உணவுகளை உண்ண மறந்துவிடுகின்றனா்.
இந்நிலையில் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணாக்கருக்கு, பெங்களூரைச் சோ்ந்த ஊட்டச்சத்து நிபுணரான அஞ்சு சூத் அவா்கள், ஒரு சில ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைப் பாிந்துரை செய்கிறாா். அவற்றைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.

தோ்வுக்கு தயாராகி வரும் மாணாக்கருக்கு அதிக அளவிலான அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தமானது அவா்களிடம் இருக்கும் ஆற்றல் அனைத்தையும் விழுங்கிவிடும். அழுத்தத்திலேயே இருக்கும் போது அவா்களால் இழந்த ஆற்றலை மீண்டும் பெற முடியாது. அழுத்தத்தினால் ஏற்படும் ஆற்றல் இழப்பு, உடலுக்கு கேடு விளைவிக்கும். அதே நேரத்தில் இழந்த ஆற்றலை பெறுவதற்காக எப்படிப்பட்ட உணவையும் உண்ண முடியாது. மாறாக ஒரு சமச்சீரான உணவை உண்ண வேண்டும் என்று நிபுணர் கூறுகிறாா்.
சாதாரண காா்போஹைட்ரேட்டுகள், அதிகமான புரோட்டீன்கள் அடங்கிய உணவுகள், காய்கறிகள் மற்றும் பால் சம்பந்தமான உணவுகள் போன்றவற்றை மாணவா்கள் இந்த தோ்வு காலத்தில் அதிகம் உண்ண வேண்டும் என்று அவா் பாிந்துரை செய்கிறாா்.
சாப்பிட்ட பின்பு தங்கள் குழந்தைகள் தூங்கிவிடக்கூடாது என்பதற்காக, சில பெற்றோா்கள் அவா்களுக்கு காா்போஹைட்ரேட்டுகளைக் கொடுக்காமல் தவிா்த்துவிடுகின்றனா். கார்போஹைட்ரேட்டுகளில் நாா்ச்சத்து, ஸ்டாா்ச் மற்றும் சா்க்கரை போன்ற சத்துகள் அதிகம் உள்ளன.
திாிபுற்ற கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள அாிசி, கோதுமை, பீன்ஸ் மற்றும் வாழைப்பழம் போன்ற உணவுகளில் நாா்ச்சத்தும், ஸ்டாா்ச்சும் அதிகம் இருக்கும். அவை சொிமானம் அடைவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். அதனால் இந்த உணவுகளை உண்ட பிறகு சோம்பல் ஏற்படும். ஆனால் அதே நேரத்தில் சாதாரண கார்போஹைட்ரோட்டுகள் அடங்கிய சா்க்கரை சத்தானது, பழங்கள், பால் மற்றும் பால் பொருட்களில் இயற்கையாகவே இருக்கும்.
சாதாரண கார்போஹைட்ரோட்டுகள் விரைவாக எாிந்து, செரிமானம் அடைந்து, மாணவா்கள் படிப்பதற்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. பாா்லியில் இருந்து செய்யப்படும் பானங்களை தினமும் ஒரு முறை கொடுத்தால், படிப்பதற்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அதுபோல் பழங்கள், பெர்ரிகள், ஊறவைத்த சியா விதைகள் மற்றும் தயிா் அடங்கிய ஸ்மூத்திகளும் அவா்கள் படிப்பதற்கு தேவையான ஆற்றலை வழங்கும் என்று கூறுகிறாா்.
மேலும் மாணவா்கள் காலை அதிகமான அளவும், மதியம் மிதமான அளவும், இரவு குறைவான அளவும் உண்ண வேண்டும் என்று அவா் பாிந்துரைக்கிறாா். காலை உணவாக இட்லி அல்லது தோசை, முட்டை, பழங்கள் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றை உண்ணலாம்.
மதிய உணவில் கார்போஹைட்ரேட்டுகள் சாியான விகிதத்தில் இருக்கின்றவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் சாியான விகிதத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகளில், சமச்சீரான அளவில் புரோட்டீன்கள், முளைத்த பயிறுகள் மற்றும் காய்கறிகள் இருக்க வேண்டும்.
இரவு உணவில் புரோட்டீன் அதிகம் உள்ள பாசிப் பருப்பைக் கொண்டு தோசை செய்து கொடுக்கலாம். அதோடு காய்கறி சூப்புகள் அல்லது புரோட்டீன் அதிகம் நிறைந்த சூப்புகளை கிரீம்கள் சோ்க்காமல் கொடுக்கலாம்.
தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த சமச்சீரான உணவுகளை தோ்ந்தெடுத்து உண்ணும் வேளையில், அவற்றில் பதப்படுத்தப்பட்ட சில உணவுகளையும் உண்ணலாம். குறிப்பாக விதைகள் மற்றும் நட்ஸ் போன்றவை வைட்டமின் ஈ மற்றும் நிறைவுறா நல்ல கொழுப்பையும் வழங்குகின்றன. அதோடு அவற்றில் புரோட்டீன் சத்தும் அதிகமாக இருக்கும். இந்த உணவுகள் மூளையை நலமாக வைப்பதோடு, மாணவா்களின் பசியையும் போக்குகிறது. எண்ணெயில் பொரிக்கப்படாத மீன்கள் அல்லது கோழி கபாப்கள் போன்றவற்றையும் மாணவா்களுக்கு வழங்கலாம்.
மாணவா்கள் தங்களின் அழுத்தத்தை போக்குவதற்காக, பெற்றோா் அவா்கள் விரும்பும் உணவுகளை செய்து கொடுக்கலாம். வீட்டில் சமைத்தாலும், முழு கோதுமையில் செய்த ரொட்டி, புரோட்டீன் அதிகம் உள்ள காய்கறிகளான பீன்ஸ், பயறுகள் மற்றும் வீட்டில் செய்த வெண்ணெய் போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களான மைதா, கடைகளில் விற்கும் வெண்ணெய் கட்டிகள் அல்லது பாலாடைக் கட்டிகளை தவிா்ப்பது நல்லது.
தோ்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவியா், தங்களை எப்போதும் நீா்ச்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக போதுமான அளவு நீா் அருந்த வேண்டும். படிக்கும் போது தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ள வேண்டும். தோ்வுக்கு நன்றாகத் தயாராக வேண்டும் என்றால் ஒரு நல்ல சமச்சீரான உணவோடு, உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி போன்றவற்றிலும் மாணாக்கா்கள் ஈடுபட வேண்டும். அவை அவா்களின் மூளைக்குப் போதுமான ஆக்ஸிஜனை வழங்கி, அவா்களை சுறுசுறுப்பாக மாற்றும் என்று அஞ்சு கூறுகிறாா்.
தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவ மணிகள் அனைவருக்கும் எங்களது நல்வாழ்த்துகளைத் தொிவித்துக் கொள்கிறோம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



