For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

க்ரீன் குடிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லன்னா அது ஆபத்தை ஏற்படுத்திவிடும்....

|

Green Tea In Tamil: தற்போது மக்களிடையே க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தங்களின் தினசரி உணவில் க்ரீன் டீயை சேர்த்து வருகிறார்கள். சொல்லப்போனால் க்ரீன் டீ மிகவும் ஆரோக்கியமான ஒரு பானமாக கருதப்படுகிறது.

இந்த க்ரீன் டீயைக் குடித்தால், உடல் எடை குறைவதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும். பெரும்பாலும் க்ரீன் டீயை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றிலும், மாலை வேளையிலும் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

Dos And Donts Of Drinking Green Tea In Tamil

ஆனால் க்ரீன் டீயைக் குடிக்கும் பலர் தங்களை அறியாமலேயே ஒருசில தவறுகளை செய்கிறார்கள். அந்த தவறுகளால் க்ரீன் டீயினால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களுக்கு பதிலாக கெடுபலன்களைப் பெறக்கூடும்.

க்ரீன் டீயைக் குடிப்போர், அந்த க்ரீன் டீயினால் அதிகபட்ச பலன்களைப் பெற விரும்பினால், அந்த பானம் குடிக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கீழே அவை குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* க்ரீன் டீயை மிகவும் சூடாக இருக்கும் போது குடிக்காதீர்கள். மேலும் சிலர் இந்த க்ரீன் டீயை தயாரிக்கும் போது, அதை நீண்ட நேரம் கொதிக்க வைப்பார்கள். ஆனால் அப்படி அதிக நேரம் கொதிதால், க்ரீன் டீ அதன் சுவையை இழந்துவிடும். பின் அந்த டீ குடிக்கவே மோசமாக இருக்கும். அதோடு, க்ரீன் டீயை மிகவும் சூடாக குடித்தால், அதன் விளைவாக நாக்கில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே க்ரீன் டீயின் சுவையை சுவைக்க விரும்பினால், அதை வெதுவெதுப்பான நிலையில் குடியுங்கள்.

* உணவு உண்ட உடனேயே க்ரீன் டீயைக் குடிக்கக்கூடாது. சிலர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உணவு உண்டதும் ஒரு கப் க்ரீன் டீயைக் குடிப்பார்கள். ஆனால் அப்படி அறவே செய்யக்கூடாது. இல்லாவிட்டால், அது செரிமான செயல்முறையில் இடையூறை ஏற்படுத்திவிடும். எனவே எப்போதும் உணவு உண்ட உடனேயே க்ரீன் டீ குடிக்காமல், ஒரு மணிநேரம் கழித்துக் குடியுங்கள்.

* பலரும் க்ரீன் டீ தயாரிக்கும் போது, க்ரீன் டீ இலைகளை நீண்ட நேரம் சுடுநீரில் ஊற வைத்து, பின் வடிகட்டி குடிப்பார்கள். நீண்ட நேரம் நீரில் க்ரீன் டீ இலைகள் ஊறினால், டீயில் சத்துக்கள் அதிகம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தான் தவறு. நீண்ட நேரம் க்ரீன் டீ இலைகளை நீரில் ஊற வைத்து குடித்தால், அந்த டீயானது கசப்பு சுவையைக் கொண்டிருப்பதோடு, நச்சுப் பொருளாக மாறிவிடும். எனவே இந்த செயலையும் தவிர்க்க வேண்டும்.

* க்ரீன் டீயைக் குடிப்பதாக இருந்தால், அவற்றை அவசர அவசரமாக குடிக்காமல், பொறுமையாக அமர்ந்து ரசித்து குடிக்க வேண்டும். அவசரமாக குடித்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறையை திறம்பட செய்யாது. எனவே உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்பைக் கரைக்கும் செயல்முறை சிறப்பாக செயல்பட வேண்டுமானால், க்ரீன் டீயை பொறுமையாக ரசித்து குடியுங்கள்.

* சிலர் மருந்து மாத்திரைகளை டீயுடன் எடுப்பார்கள். ஆனால் எப்போதும் மருந்து மாத்திரைகளை க்ரீன் டீயுடன் எடுக்கக்கூடாது. இல்லாவிட்டால் மாத்திரையில் உள்ள கெமிக்கல், க்ரீன் டீயில் உள்ள கெமிக்கல்களுடன் சேர்ந்து, நன்மையளிப்பதற்கு பதிலாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே க்ரீன் டீ பயன்படுத்தி மருந்து மாத்திரைகளை எடுக்காதீர்கள்.

* க்ரீன் டீயை தயாரிக்கும் போது கேன் தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் பயன்படுத்தி தயாரிக்க வேண்டும். இது ஒரு பாதுகாப்பிற்காகத் தான். ஏனெனில் சிலர் குழாய் நீரைப் பயன்படுத்துவார்கள். ஆனால் குழாய் நீர் பாதுகாப்பானதா என்பதை நம்மால் உறுதியாக கூற முடியாது. எனவே நல்ல பாதுகாப்பான நீரால் க்ரீன் டீயைத் தயாரித்து குடியுங்கள்.

English summary

Do's And Don'ts Of Drinking Green Tea In Tamil

In this article, we have shared some do's and don'ts of drinking green tea. Read on to know more...
Story first published: Friday, June 2, 2023, 12:15 [IST]
Desktop Bottom Promotion