For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு தொப்பை குறையமாட்டீங்குதா? முதல்ல இந்த 3 உணவுகளுக்கு 'குட்-பை' சொல்லுங்க...

ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, வெள்ளை நிற உணவுகள் ஒருவரின் உடல் எடையை நேடியாகவோ அல்லது மறைமுகமாகவே பாதிக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்பினால் 3 வெள்ளை நிற உணவுகளை முதலில் தவிர்க்க வேண்டும்.

|

தற்போது ஒட்டுமொத்த உலக மக்களும் சந்திக்கும் ஓர் முதன்மையான பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். இந்த உடல் பருமனைக் குறைக்க முயற்சிக்காவிட்டால், அது பல்வேறு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே ஒருவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க இன்று பலரும் மேற்கொள்ளும் ஒன்று தான் டயட். இன்று எடையைக் குறைப்பதற்கு பல்வேறு டயட்டுகள் உள்ளன. ஆனால் இவற்றில் எது சிறந்தது, எவற்றைத் தேர்ந்தெடுப்பது என்று பலருக்கும் ஒருவித சந்தேகம் எழும்.

White Foods To Avoid For Weight Loss In Tamil

தற்போது மேற்கொள்ளும் பல்வேறு டயட்டுகளும் கலோரி கட்டுப்பாட்டைத் தவிர பல விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளது. அதில் வெள்ளை உணவு அல்லாத டயட்டில் அனைத்து விதமான வெள்ளை நிற உணவுகளில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். ஏனெனில் வெள்ளை நிற உணவுகளில் நிச்சயம் சர்க்கரை இருக்கும். இந்த சர்க்கரை இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்துவதோடு, அவற்றில் வெற்று கலோரிகளுடன் எவ்வித ஊட்டச்சத்துக்களும் இல்லை. மேலும் சட்டென்று இரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது, அதே வேகத்தில் அது குறைந்து, கடுமையான பசியை ஏற்படுத்தி, ஆரோகியமற்ற உணவுகளின் மீதான ஆசையை அதிகரித்துவிடும். ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, வெள்ளை நிற உணவுகள் ஒருவரின் உடல் எடையை நேடியாகவோ அல்லது மறைமுகமாகவே பாதிக்கும்.

எனவே உடல் எடையைக் குறைக்க விரும்பினால் பின்வரும் 3 வெள்ளை நிற உணவுகளை முதலில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த மூன்று உணவுகளும், ஒருவரின் உடல் எடையை அதிகரிப்பதோடு, உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளையும் வரத் தூண்டும். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை சர்க்கரை

வெள்ளை சர்க்கரை

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் முதலில் சர்க்கரையை உணவில் சேர்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட சர்க்கரையானது உறுப்புக்களில் கொழுப்புக்களை தேங்க செய்து, இதய நோய்க்கு வழிவகுப்பதோடு, ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது மற்றும் பசியுணர்வை கட்டுப்படுத்த முடியாமல் செய்கிறது. அதாவது அடிக்கடி பசியைத் தூண்டிவிடும். எனவே தான் எடை குறைப்போரை சர்க்கரையை தவிர்க்க அறிவுறுத்துகின்றனர். வேண்டுமானால் இதற்கு சிறந்த மாற்றாக பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளை மாவு

வெள்ளை மாவு

வெள்ளை மாவு என்பது வேறொன்றும் இல்லை மைதா மாவு தான். பெரும்பாலான வாய்க்கு ருசியான ஸ்நாக்ஸ்கள் இந்த மைதா மாவைக் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால் எடையைக் குறைக்க முயற்சிப்போர் இந்த மைதா மாவிற்கு பதிலாக கோதுமை மாவு அல்லது பல்வேறு வகையான தினை மாவுகளைப் பயன்படுத்தலாம். இதனால் ரெசிபியானது இன்னும் சுவையாக இருக்கும். ஆனால் மைதா விலை மலிவானது மற்றும் பயன்படுத்த எளிதானது என்ற காரணத்தினால், உணவுத் தொழிற்சாலைகள் மைதாவைக் கொண்டு ஸ்நாக்ஸ்களைத் தயாரிக்கின்றன. மைதாவை அதிகம் உண்ணும் போது, அது அஜீரண கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, டைப்-2 சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் தொடர்பான நோய்களையும் வரவழைக்கும். ஆகவே நீங்கள் டயட்டில் இருந்தால், முதலில் மைதா உணவுகளுக்கு குட்-பை சொல்லுங்கள்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா என்பது சோடியம் பைகார்பனேட் ஆகும். இது உணவுகளை பஞ்சு போன்றதாக மாற்ற பேக்கிங் செய்யும் போது பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் இந்த பேக்கிங் சோடா பிட்சா, பிரட், பேக்கரி உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவுகள் அனைத்துமே செரிமானத்தை கடினமாக்கும். மேலும் இது வயிற்று உப்புசம், வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வை அளிக்கும். இந்த உணவுகளை தொடர்ந்து உண்ணும் போது, அது பல நோய்களுக்கு வழிவகுப்பதோடு, ஒருவரை குண்டாக்கிவிடும். எனவே எடையை குறைக்க விரும்பினால், பேக்கிங் சோடாவை உணவுகளில் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள் மற்றும் பேக்கிங் சோடா நிறைந்த உணவுகளை சாப்பிடுவதையும் உடனே நிறுத்துங்கள்.

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று உணவுகளுமே இன்று பெரும்பாலானோர் தினமும் தங்களின் உணவுகளில் சேர்த்து வருபவை. இந்த உணவுகளை உடல் எடையைக் குறைக்க நினைப்போர் மட்டுமின்றி, நீண்ட காலம் நோயின்றி ஆரோக்கியமாக வாழ விரும்பும் ஒவ்வொருவரும் தவிர்ப்பது நல்லது. சொல்லப்போனால் இந்த உணவுகளுக்கு பதிலாக, ஏன் இந்த உணவுகளை விட சுவையான பல உணவுகள் நம்மிடம் உள்ளன. எனவே பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியமாக இருப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

White Foods To Avoid For Weight Loss In Tamil

Here are some white foods to avoid for weight loss. Read on to know more...
Story first published: Wednesday, December 7, 2022, 11:32 [IST]
Desktop Bottom Promotion