For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஜப்பானிய உடற்பயிற்சி தட்டையான வயிற்றைப் பெற உதவுமாம்... அதை எப்படி செய்வது?

சமீபத்தில் சமூக வலைத்ளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வைரல் வீடியோவில் ஒரு பயனர் 5 நிமிட ஜப்பானிய டவல் உடற்பயிற்சி வெறும் பத்தே நாட்களில் தட்டையான வயிற்றைப் பெற உதவும் என்று கூறினார்.

|

யாருக்கு தான் தட்டையான வயிற்றை பெற ஆசை இருக்காது? இதற்காக தினமும் காலையில் எழுந்து ஜிம்மிற்கு சென்று மணிக்கணக்கில் வியர்வை வடிய உடற்பயிற்சி செய்து வருகிறோம். குறிப்பாக வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெறுவதற்கு க்ரஞ்ச்ஸ், சிட்-அப்ஸ், பிளாங்க்ஸ் போன்ற பயிற்சிகளை செய்கிறோம். ஆனால் வயிற்றுக் கொழுப்பைக் கரைப்பது எளிதான காரியமல்ல என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

This 5-minute Japanese Towel Exercise Give You Flat Abs?

சொல்லப்போனால் வயிற்றுப் பகுதியில் மாற்றத்தைக் காண பல மாதங்கள் கடுமையான உடற்பயிற்சிகளையும், டயட்டுகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இப்படியிருக்கையில், ஒரு உடற்பயிற்சி பத்து நாட்களில் முடிவுகளைத் தருவதாக உறுதி அளித்தால், அது உண்மையிலேயே சாத்தியம் தானா என நிச்சயம் சந்தேகம் எழக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமீபத்திய வைரல் வீடியோ

சமீபத்திய வைரல் வீடியோ

சமீபத்தில் சமூக வலைத்ளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வைரல் வீடியோவில் ஒரு பயனர் 5 நிமிட ஜப்பானிய டவல் உடற்பயிற்சி வெறும் பத்தே நாட்களில் தட்டையான வயிற்றைப் பெற உதவும் என்று கூறினார். இந்த வீடியோ வெளியிடப்பட்டதில் இருந்து, 2.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதை லைக் செய்து கருத்தும் தெரிவித்து வருகின்றனர். சரி, இப்போது இந்த 5 நிமிட ஜப்பானிய டவல் உடற்பயிற்சி குறித்து விரிவாக காண்போம்.

5 நிமிட ஜப்பானிய டவல் உடற்பயிற்சியின் தோற்றம்

5 நிமிட ஜப்பானிய டவல் உடற்பயிற்சியின் தோற்றம்

ஜப்பானிய டவல் பயிற்சியானது ஜப்பானிய ரிஃப்ளெக்ஸாலஜி மற்றும் மசாஜ் நிபுணர் டாக்டர் தோஷிகி ஃபுகுட்சுட்ஸியால் ஒரு தசாப்தத்திற்கு முன்பு அழகான உடல் வடிவத்தை பெற உருவாக்கப்பட்டது. இந்த முறை வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும், சரியான உடல் தோரணையைப் பெறவும், முதுகை வலுவாக்கவும் மற்றும் முதுகு வலியைக் குறைக்கவும் உதவும். நிபுணரின் கூற்றுப்படி, இந்த முறை வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவும். இந்த உடற்பயிற்சியை ஒருவர் தவறாமல் தொடர்ந்து செய்து வந்தால், இடுப்பு பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு, வயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்கலாம்.

ஜப்பானிய டவல் பயிற்சியை செய்வது எப்படி?

ஜப்பானிய டவல் பயிற்சியை செய்வது எப்படி?

இந்த உடற்பயிற்சி செய்வதற்கு, ஒரு பாய் மற்றும் ஒரு டவல் தேவை. இப்போது இந்த உடற்பயிற்சியின் செய்முறையைக் காண்போம்.

* முதலில் பாயை விரித்து, அதன் மேல் படுத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு நடுத்தர அளவிலான டவலை சுருட்டி முதுகின் கீழ், தொப்புள் இருக்கும் இடத்திற்கு கீழே வைக்க வேண்டும்.

* பின் கால்களை தோள்பட்டை அகலத்திற்கு விரித்து வைத்தவாறு, கால் பெருவிரல்களை ஒன்றையொன்று தொட வேண்டும்.

* பின்பு கைகளை தலைக்கு மேலே கொண்டு வந்து, உள்ளங்கைகளை தரையைப் பார்த்தவாறு வைத்து கைகளை நீட்ட வேண்டும்.

* இந்த நிலையில் குறைந்தது 5 நிமிடங்கள் இருந்து, பின் மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும்.

ஜப்பானிய டவல் உடற்பயிற்சி தட்டையான வயிற்றைப் பெற உதவுமா?

ஜப்பானிய டவல் உடற்பயிற்சி தட்டையான வயிற்றைப் பெற உதவுமா?

சமூக வலைத்தளத்தில் வெளிவந்த இந்த இடுகை ஒரு மேஜிக் போன்று தென்பட்டது. ஆனுல் இந்த உடற்பயிற்சி நிச்சயமாக பத்து நாட்களில் தட்டையான வயிற்றைப் பெற வைக்காது. உண்மையில் எந்த ஒரு உடற்பயிற்சியாலும் இவ்வளவு குறைந்த காலத்தில் இம்மாதிரியான முடிவுகளைத் தர முடியாது. இது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் இந்த உடற்பயிற்சி சரியான உடல் தோரணையைப் பெறவும், முதுகு வலியைக் குறைக்கவும், வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும் உதவும். ஆனால் அதுவும் ஒரு சிறிய அளவிற்கு மட்டுமே முடியும்.

வயிற்றின் நடுப்பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பது என்பது இருப்பதிலேயே மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் இங்கு சேரும் கொழுப்புக்கள் அவ்வளவு எளிதில் குறையாது. உடற்பயிற்சியால் உடலின் மற்ற பகுதிகளில் கொழுப்பை இழந்த பிறகே பெரும்பாலானோர் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை இழக்கிறார்கள். இது தவிர, தட்டையான வயிற்றைப் பெறுவது என்பது டயட், உடற்பயிற்சி, தூங்கும் பழக்கம் மற்றும் மரபணுக்கள் போன்ற பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது.

தட்டையான வயிற்றை ஆரோக்கியமான வழிகளில் பெறுவது எப்படி?

தட்டையான வயிற்றை ஆரோக்கியமான வழிகளில் பெறுவது எப்படி?

முதலில், ஒருவர் எடை இழக்க முயற்சிக்கும் போது, அவரின் வயிற்றுப் பகுதியை மட்டும் குறைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எடை இழப்பு திட்டத்திற்கு செல்லும் போது, உடலின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஒரே விகிதத்தில் தான் எடையைக் இழக்க நேரிடும். சிலர் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் வேகமாக எடையைக் குறைப்பார்கள். ஆனால் அது உங்கள் கைகளில் இல்லை.

இரண்டாவதாக, எந்த ஒரு எடை இழப்பு திட்டம் விரைவான பலன்களைத் தருகிறதோ, அதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமான வழியில் எடையைக் குறைக்க சிறிது காலம் எடுக்கும். தட்டையான வயிற்றைப் பெற சீரான உணவை உட்கொள்ள வேண்டும், அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும், சரியான நேரத்தில் தூங்க வேண்டும், மன அழுத்த அளவைக் குறைக்க வேண்டும் மற்றும் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This 5-minute Japanese Towel Exercise Give You Flat Abs?

The Japanese towel technique was developed by Japanese reflexology and massage specialist, Dr Toshiki Fukutsudzi over a decade ago to get the body in shape. Can the 5-minute Japanese towel exercise give you flat abs in 10 days? Read on..
Desktop Bottom Promotion