Just In
- 9 hrs ago
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 10 hrs ago
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- 10 hrs ago
தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
- 11 hrs ago
உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...!
Don't Miss
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீங்க எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா? அப்ப தினமும் இந்த சூப் குடிங்க...
உடல் எடையைக் குறைக்க மற்றும் டயட்டை மேற்கொள்ள நினைக்கும் போது, முதலில் அனைவரது மனதிலும் எழும் எண்ணம் ஹெவி மீல்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக சூப் குடிக்க வேண்டும் என்பது தான். மேலும் உடல் எடையைக் குறைப்பது குறித்து நிபுணர்களிடம் கேட்டாலும், அவர்களும் சூப்களை அதிகம் குடிக்க பரிந்துரைப்பார்கள்.
ஏனெனில் சூப் குடிப்பதன் மூலம், அனைத்துவிதமான சத்துக்களையும் பெறலாம். இருப்பினும் அனைத்துவிதமான சூப்புகளும் ஆரோக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஹோட்டல்களில் விற்கப்படும் சூப்கள் வேண்டுமானால் ஆரோக்கியமற்றதாக இருக்கலாமே தவிர, வீட்டில் தயாரிக்கப்படும் அனைத்து சூப்புகளும் நிச்சயம் ஆரோக்கியமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
அதிலும் வெஜிடேபிள் சூப்புகளில் நார்ச்சத்து மற்றும் ஆற்றல் அதிகம் இருப்பதோடு, ஒரு நாளைக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் பெற முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சிக்கன் சூப் மட்டுமின்றி, வெஜிடேபிள் சூப்களும் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
ஆண்களே ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா? அப்ப மறக்காம இத படிங்க...
நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராயின் மற்றும் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்று குழப்பத்தில் இருப்பவராயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள வெஜிடேரியன் சூப்புகளை தயாரித்துக் குடியுங்கள். இந்த சூப்புகள் நிச்சயம் உங்களின் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும்.

வெஜிடேபிள் க்ளியர் சூப்
மதிய வேளையில் சாப்பிடுவதற்கு வெஜிடேபிள் க்ளியர் சூப் சிறந்ததாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகள் அதிகமாகவும் இருக்கும். முக்கியமாக வெஜிடேபிள் க்ளியர் சூப்பில் நார்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகளான ப்ராக்கோலி, கேரட் போன்றவை இருக்கும். பெரும்பாலும் க்ளியர் சூப்புகளில் பயன்படுத்தப்படும் காய்கறிகளானது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கொண்டதாக இருக்கும்.
கேரட்டில் கலோரிகள் குறைவு மற்றும் ப்ராக்கோலியில் பைட்டோகெமிக்கல்கள் உள்ளது. இவை இரண்டுமே உடல் எடையைக் குறைக்க உதவக்கூடியவை. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைத்தால், கார்ன்ஸ்டார்ச் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது ஊட்டச்சத்துக்களின் மதிப்பைக் குறைக்கும்.
வயிறு சரியில்லையா? வாய்வு தொல்லையா? நொடியில் விடுபட இப்படி செய்யுங்க...

தேவையான பொருட்கள்:
* ப்ராக்கோலி - 1 கப்
* பச்சை பட்டாணி - 1 கப்
* குடைமிளகாய் - 1 கப்
* பூண்டு - 6 பற்கள் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* மிளகுத் தூள் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெருப்பில் வைத்தது போன்று கால்கள் பயங்கரமாக எரிகிறதா? அது ஏன் தெரியுமா?

செய்முறை:
* முதலில் அனைத்து காய்கறிகளையும் வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம் மற்றும் பூண்டுகளை பொடியாக நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அனைத்து காய்கறிகளையும் போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நீர் ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியில் அதில் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்தால், வெஜிடேபிள் க்ளியர் சூப் தயார்.

காளான் சூப்
காளான் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவுப் பொருள். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் கொழுப்பைக் கரைப்பதன் மூலம், உடல் எடையைக் குறைக்க உதவும். காளானில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதன் மூலம் எடையைக் குறைக்க உதவி புரியும்.
இந்த பொருட்கள் ஆண்களின் ஆண்மைத்தன்மையை அழிக்கும் என்று தெரியுமா?

தேவையான பொருட்கள்:
* நறுக்கிய காளான் - 1 கப்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பால் - 1 கப்
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* நீர் - 2 கப்
காசநோய் உள்ளவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய காளான் மற்றும் பால் சேர்த்து, காளானை நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின் அதை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த காளானை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் சோள மாவை நீர் சேர்த்து கலந்து, வாணலியில் ஊற்றி, 4- நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியில் அதில் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்தால், காளான் சூப் தயார்.

காலிஃப்ளவர் சூப்
காலிஃப்ளவர் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளுள் ஒன்று மற்றும் இது எளிதில் கிடைக்கக்கூடிய ஓர் காய்கறியும் கூட. 100 கிராம் காலிஃப்ளவரில் 25 கலோரிகள் தான் உள்ளது. ஆகவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராயில், இந்த சூப்பை குடியுங்கள்.
ரொம்ப பலவீனமா இருக்குற மாதிரி உணருறீங்களா? இத ஃபாலோ பண்ணுங்க சரியாயிடும்...

தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 10-12 துண்டுகள்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* சிறிய உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது)
* ஆலிவ் ஆயில் - சிறிது
* பூண்டு பற்கள் - 5
* மில்க் க்ரீம் - சிறிது
* விருப்பமான காய்கறிகள் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
உணவு உண்ட பின் ஏன் சோம்பு சாப்பிடுறது நல்லதுன்னு சொல்றாங்க... தெரியுமா?

செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் மற்றும் இதர காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மில்க் க்ரீம் சேர்த்து நன்கு சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
* இறுதியில் உப்பு சேர்த்து கலந்தால், காலிஃப்ளவர் சூப் தயார்.