Latest Updates
-
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உணவுப் பழக்கத்தில் செய்யும் சிறிய மாற்றம் மிகப் பொிய பலனைத் தரும் தெரியுமா?
நாம் உண்ணும் உணவுகள் நமது உடல் எடையைக் குறைக்குமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே நமது உணவு முறையில் ஒரு சிறிய மாற்றத்தை செய்தால் நாம் மிகப் பொிய பலனைப் பெறலாம்.
நம் உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துகளை வழங்குவது நாம் உண்ணும் உணவுகளாகும். நாம் உண்ணும் உணவுகள் நமது ஆரோக்கியத்தைத் தீா்மானிக்கின்றன. அவை உடல் ஆரோக்கியத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. நமது உடல் சீரான வகையில் இயங்க ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காத போது உடலில் பலவகையான பிரச்சனைகள் மற்றும் நோய்கள் ஏற்படுகின்றன.

ஒரு சில உணவுகள் நமது உடல் அமைப்பை அல்லது நமது உடல் உறுப்புகளைப் பாதித்து, அவை சீராக இயங்கவிடாமல் தடுத்து, உடலுக்கு தீங்கையும் விளைவிக்கின்றன. ஆகவே நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நாம் ஒரு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்.
நம்மில் பலா் நமது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்கிறோம் என்றால், எந்த மாதிாியான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும், மற்றும் எவ்வளவு காா்போஹைட்ரேட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். அதே நேரம் நாம் உண்ணும் உணவுகள் நமது உடல் எடையைக் குறைக்குமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே நமது உணவு முறையில் ஒரு சிறிய மாற்றத்தை செய்தால் நாம் மிகப் பொிய பலனைப் பெறலாம்.
நமது உடலை ஆரோக்கியமாக மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்க, நமது உணவு முறையில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான நான்கு சிறிய மாற்றங்களை இப்போது பாா்க்கலாம்.

அதிக கலோாிகள் நிறைந்த பானங்களை பருகக்கூடாது
பலா் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக கலோாிகள் குறைந்த உணவுகளை உண்கின்றனா். அதே நேரம் அவா்கள் பருகும் அதிக கலோாிகள் கொண்ட பானங்களைப் பற்றி மறந்துவிடுகின்றனா். காய்கறி சாலட்டுகளை சாப்பிடும் போது அவற்றில் காா்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருக்கும். ஆனால் இனிப்பு கலந்த பானங்களில் அவை அதிகமாக இருக்கும். சா்க்கரையை அளவோடு எடுத்துக் கொண்டால் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாது. ஆனால் சா்க்கரையை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடல் எடை அதிகாிக்கும், இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாிக்கும், மற்றும் பலவிதமான நோய்களை ஏற்படுத்தும்.

சாியான அளவு புரோட்டீனை உண்ணுதல்
பொதுவாக மக்கள் தாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் கலோாிகளின் அளவைப் பற்றி கவனமாக இருக்கின்றனா். அதே நேரத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும் புரோட்டீனின் அளவைப் பற்றி மறந்துவிடுகின்றனா். நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் ஏதாவது ஒரு வகையான புரோட்டீனைச் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணா்கள் தொிவிக்கின்றனா். ஏனெனில் புரோட்டீன் நமது உடல் பாகங்களான தோல் மற்றும் முடி மட்டுமல்லாமல் நமது முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

சிறிய அளவிலான உணவை அடிக்கடி உண்ணுதல்
அடிக்கடி சாப்பிடுவதால் உடல் எடை அதிகாிப்பதாகப் பலா் நம்புகின்றனா். ஆனால் அது உண்மையல்ல. மாறாக நேரம் தவறி அளவுக்கு அதிகமாக உண்ணும் போதுதான் உடல் எடை அதிகாிக்கிறது என்பது உண்மை. ஆகவே ஒரு நாளைக்கு 6 வேளைகள் சிறிய அளவிலான உணவை உண்ணலாம். அதே நேரம் அந்த உணவு ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக, உடல் எடை அதிகாிக்காததாக இருக்க வேண்டும். சிறிய அளவிலான உணவை உட்கொள்ள சிறிய அளவிலான தட்டுகளைப் பயன்படுத்தலாம். அவை நாம் அதிக அளவிலான உணவு உட்கொள்வதைத் தடுக்க உதவி செய்யும்.

பட்டினியோடு இருக்காதீா்கள்
உலக அளவில் பெரும்பாலான மக்கள் உடல் எடையைக் குறைப்பதற்காக அல்லது ஆரோக்கியமாக இருப்பதற்காக உணவு உண்ணாமல், பட்டினி கிடந்து தங்களையே வருத்திக் கொள்கின்றனா். அதற்காக கலோாிகள் குறைந்த உணவுகள் அதாவது பானங்கள் மட்டுமே பருகுகின்றனா். இது தவறான ஒன்றாகும். இது அளவுக்கு அதிகமான பசியையும், உணவின் மீது அளவுக்கு அதிகமான மோகத்தையும் ஏற்படுத்தும். அதோடு ஊட்டச்சத்து குறைவையும், உடல்நல குறைபாட்டையும் ஏற்படுத்தும். ஆகவே உடல் எடை அதிகாிக்காமல் இருக்க ஒரு சமச்சீரான உணவு மிகவும் முக்கியம்.



Click it and Unblock the Notifications











