Latest Updates
-
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா?
உடல் பருமன் உள்ளவர்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் எடையை குறைக்கணுமா? இதோ சில வழிகள்!
கிளினிக்கல் ஒபிசிட்டி என்னும் பத்திரிகையில் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின்படி, உடல் பருமன் உள்ளவர்கள் தங்கள் மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை நிர்வகிக்க போராடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பெருந்தொற்று மனிதனின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கிளினிக்கல் ஒபிசிட்டி என்னும் பத்திரிகையில் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின்படி, உடல் பருமன் உள்ளவர்கள் தங்கள் மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை நிர்வகிக்க போராடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக 123 எடை மேலாண்மை நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 73% பேர் அதிகரித்த பதட்டம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் 84 சதவீதம் பேர் இந்த பெருந்தொற்று காலத்தில் மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளனர் என்று அறியப்படுகிறது.
உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பல தீவிர ஆரோக்கிய சிக்கல்களை உண்டாக்குவதாகவும், இறப்பின் விகிதம் அதிகரிப்பதாகவும் அறியப்படுகிறது. அதனால் இந்த காலகட்டத்தில் உடல் பருமன் உள்ளவர்கள் வீட்டிலேயே இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் அவர்களின் உடல் எடை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

எடை இழப்பிற்கான நோக்கத்தை கொரோனா காலகட்டம் பாதிக்கிறது
ஏப்ரல் 15 முதல் மே 31 வரை நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பங்கேற்றவர்களில் 70% பேர், எடை இழப்பு என்பது இந்த காலகட்டத்தில் கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். பாதிக்கும் அதிகமானோர் இந்த காலகட்டத்தில் அதிக உணவு உண்ண ஈர்க்கப்படுவதாகவும், மன அழுத்தம் காரணமாக 61% அதிகமாக உணவு உட்கொள்ள நேரிடுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களின் படி 10 சதவிகித பங்கேற்பாளர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளதாகவும், 20% பேர் தங்களால் சமச்சீரான உணவை தயாரிக்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர். இரண்டு நபர்களுக்கு மட்டுமே கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 15 சதவிகிதம் பேர் இந்த வைரஸின் அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆரோக்கியமற்ற உணவுகள்
உடல் பருமன் உள்ளவர்களுக்கு சரியான மற்றும் ஆரோக்கியமான உணவுகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் மளிகைக் கடைகள் போன்றவை மூடப்பட்டதன் காரணமாக மக்கள் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.

பெருந்தொற்று எடை மேலாண்மை செய்வது எப்படி?
கொரோனா தொற்று ஏற்படுவதற்கு ஒரு முக்கியமான அபாய காரணியாக உடல் பருமன் பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலிருந்தபடி உங்கள் எடையை குறைப்பது எப்படி என்பதை குறித்து சில குறிப்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

உயர் புரத உணவுடன் நாளை தொடங்குங்கள்
உங்கள் காலை உணவை தவற விடவேண்டாம். இதற்கு மாற்றாக அதிக உணவை காலை வேளையில் எடுத்துக் கொள்ளலாம். காலையில் அதிக உணவு உட்கொண்டு இரவில் குறைவான உணவு உட்கொள்பவர்கள் அதிக எடை இழப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. புரதம் அதிகமுள்ள உணவுகளை காலை வேளையில் எடுத்துக் கொள்வதால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதாகவும் பசியுணர்வு குறைவதாகவும் கூறப்படுகிறது.

சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளை முற்றிலும் தவிர்த்திடுங்கள்
உணவு பொருட்கள் வாங்கும் போது குறைந்த அளவு சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ள உணவை தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. சர்க்கரை அளவு அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது மற்றும் நீரிழிவு பாதிப்பு உண்டாகிறது, நிறைவுற்ற கொழுப்பு அதிகரிப்பதால் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதய நோய்க்கான அபாயம் உண்டாகிறது. க்ளைகோமிக் குறியீடு குறைவாக உள்ள உணவுகள் உயர் புரத உணவுகள் எடுத்துக் கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்து பசி உணர்வு குறைகிறது.

உணவுக்கான அட்டவணையை ஏற்படுத்தி கொள்ளுங்கள்
நாள் முழுவதும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவைப் பற்றிய குறிப்பின் மூலம் கலோரி உட்கொள்ளல் அளவை கட்டுபடுத்த முடியும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு பற்றிய அட்டவணை அல்லது புகைப்படங்களை பராமரிப்பதால் அதிக உணவு உட்கொள்ளுதல் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் உங்கள் உணவில் ஒரு மேம்பாட்டை கொண்டுவர முடியும். உணவின் அளவு குறித்து ம்கவனம் ஏற்படுத்திக் கொள்ள முடியும். எடை மேலாண்மைக்கான செயலியை பயன்படுத்துவதால் நீங்கள் எவ்வளவு உட்கொள்கிறார்கள், உங்கள் முயற்சியில் எந்த அளவுக்கு வந்துள்ளீர்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள முடியும்.

குளிர்சாதன பெட்டியை ஒழுங்குபடுத்தலாம்
ஆரோக்கியமற்ற உணவுகளை உங்கள் கண்ணில் படாமல் ஒதுக்கி வைப்பதால் அவை உங்கள் மனதிலிருந்து மறைந்து விடலாம். உணவு சேமித்து வைக்கும் இடங்களில், குளிர்சாதனப்பெட்டியில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சேமித்து வைப்பதை பழக்கமாக்கிக் கொள்வதால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை எளிதாக புறக்கணிக்கலாம். கண்ணைக் கவரும் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை பெட்டிக்குள் போட்டு மூடி வைப்பதை விட கண்களில் படும்படி வைத்துக் கொள்வதால், அவற்றை எடுத்து சுவைக்கும் எண்ணம் மனதிற்கு உண்டாகும். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.



Click it and Unblock the Notifications











