For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கீட்டோ டயட்டை மேற்கொண்டும் தொப்பை குறையமாட்டீங்குதா? அதுக்கு நீங்க செய்யும் இந்த தவறு தாங்க காரணம்...

கீட்டோ என்ற புதிய உணவு பழக்கம் தற்பொழுது பிரபலமாகி வருகிறது. பல பிரபலங்கள் இந்த உணவுப் பழக்கத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அதனால் மற்ற மக்களும் இந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றனர்.

|

கீட்டோ என்ற புதிய உணவு பழக்கம் தற்பொழுது பிரபலமாகி வருகிறது. பல பிரபலங்கள் இந்த உணவுப் பழக்கத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அதனால் மற்ற மக்களும் இந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றனர்.

Not Losing Weight On Keto Diet? You Could Be Making These Mistakes

கிம் கர்தாஷியன் முதல் பூமி பெட்னேகர் வரை பலர் இந்த கீட்டோ உணவுப் பழக்கம் உடல் எடையைக் குறைக்கும் என்று சான்று கூறுகின்றனர். ஆனால் உங்களால் கீட்டோ உணவு பழக்கத்தை பின்பற்றியும் உடல் எடையை குறைக்க முடியவில்லையா? அப்படியெனில் பின்வரும் சிறிய தவறுகள் காரணங்களாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கீட்டோ உணவு அனைவருக்கும் பயனளிக்குமா?

கீட்டோ உணவு அனைவருக்கும் பயனளிக்குமா?

அதிக கொழுப்பு நிறைந்த அதே நேரத்தில் குறைந்த மாவுச்சத்துள்ள உணவை உட்கொள்ள பரிந்துரைக்கும் இந்த கீட்டோ உணவு முறை, உடல் எடையைக் குறைப்பதற்கு ஏற்றது என்று பலரும் இந்த உணவு முறையைப் பின்பற்ற தொடங்கி இருக்கின்றனர். ஆனால் அனைவருக்கும் இந்த உணவு முறை எதிர்பார்க்கும் பலனைத் தருமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் பாலிவுட் பிரபலமான சாரா அலி கான் தனக்கு இந்த கீட்டோ உணவு முறை பலனைத் தரவில்லை என்று கூறியிருக்கிறார்.

உடல் எடையைக் குறைப்பதற்கு இந்த உணவு முறையை சிறந்தது என்று பலர் கூறினாலும், இந்த உணவு முறையை மிகச் சரியாகக் கடைபிடித்து வந்தாலும், ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு உடல் எடை குறைவதில்லை. அதனால் அவர்களுக்கு விரக்தியும், அமைதியற்ற நிலையும் ஏற்படுகின்றன. ஆகவே இந்த கீட்டோ உணவு முறை ஏன் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை என்பதைக் கீழே பார்க்கலாம்.

அதிகமாக அல்லது குறைவாக சாப்பிடுதல்

அதிகமாக அல்லது குறைவாக சாப்பிடுதல்

நாம் கீட்டோ உணவு முறையை பின்பற்றுகிறோம் என்றால் நாம் சாப்பிடும் உணவின் அளவை மிகச் சரியாக அளவிட வேண்டும். அதில் தான் அடிக்கடி சிக்கல் ஏற்படுகிறது. அவ்வாறு நமக்கு ஏற்கனவே குறிக்கப்பட்டிருக்கும் உணவின் அளவை சரியாக அளவிடவில்லை என்றால் அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்குக் குறைவாகவோ சாப்பிடும் நிலை ஏற்படும். அதாவது தேவைக்கு அதிகமான அளவு மாவுச்சத்துள்ள உணவையோ அல்லது அதிக கொழுப்புள்ள உணவையோ உட்கொள்ள நேரிடும்.

உணவின் அளவை சரியாக கவனிக்கவில்லை என்றால் சில சமயங்களில் புரோட்டீன் அதிகமுள்ள உணவை அதிகம் சாப்பிட நேரிடலாம். அப்போது நம்மை அறியாமல் கீட்டோ உணவு முறையை விட்டு வெளியே வந்துவிடுவோம். ஆகவே இப்படிப்பட்ட சிறிய தவறுகள் நமது வளர்சிதை மாற்றத்தின் வேகத்தைக் குறைப்பதோடு, உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை வெளியே தள்ள முடியாத அளவிற்கு நமது உடலை இறுக்கமாக மாற்றிவிடுகிறது. அதனால் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு உடல் எடையை குறைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

மன அழுத்தத்தை குற்றம் சாட்டுதல்

மன அழுத்தத்தை குற்றம் சாட்டுதல்

நாம் மன அழுத்தத்தில் இருக்கும் போது அது நம்மையும் நமது உற்பத்தித் திறனையும் குறைத்துவிடுகிறது. இந்த மன அழுத்தம் நமது உணவு பழக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழும். மன அழுத்தம் நமது உடலில் கார்டிசோல் உற்பத்தியை விரைவுபடுத்துகிறது. அதன் விளைவாக உடலில் இருந்து கொழுப்பை வெளியேற்றுவதில் உடலின் வேகத்தைக் குறைத்துவிடுகிறது.

மன அழுத்தத்தின் அளவு சரியாக பராமரிக்கப்படவில்லை என்றால் அது உடலில் உள்ள புரத இயக்கு நீரின் எதிர்ப்பைத் தூண்டிவிடும். நாளடைவில் அது ஹார்மோன் சமநிலையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதனால் நமது உடல் எடை குறையும் வேகத்தில் தடை ஏற்படும். ஆகவே உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றோடு நமது மன அழுத்தத்தின் அளவையும் சரியாக கவனிக்க வேண்டும். நல்ல ஆழமான தூக்கம், தியானம் அல்லது மூளைக்கு வேளை கொடுக்காமல் சிறிய ஓய்வில் இருத்தல் போன்றவற்றின் மூலம் நமது மன அழுத்தத்தை முறையாக பராமரிக்கலாம்.

கீட்டோ உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க முடியாமை

கீட்டோ உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க முடியாமை

கீட்டோ உணவு முறைக்கு மாறுவது எளிதான காரியம் அல்ல. ஏனெனில் கீட்டோ உணவு முறையில் அதிக கட்டுப்பாடுகள் உண்டு. அதனால் அதனை சிரத்தையோடு கடைபிடிக்க முடியாமல் பலர் பின்வாங்கிவிடுகின்றனர். ஆகவே அவர்களால் தங்களது எடையைக் குறைக்க முடிவதில்லை. மேலும் அவ்வாறு கீட்டோ உணவுப் பழக்கத்திலிருந்து வெளியே வந்துவிட்டால் பழைய நிலைக்கு வருவதற்கு சில காலம் ஆகும். ஆகவே கீட்டோ உணவுப் பழக்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக பதிவு பெற்ற கீட்டோ உணவு பயிற்சியாளரின் அறிவுரையைப் பெற்று அதற்கு ஏற்றவாறு கீட்டோ உணவு பட்டியலைத் தயார் செய்து அதைக் கடைபிடிக்கலாம். அப்போது அது நல்ல பலனைத் தரும்.

கண்டறியப்படாத மருத்துவ பிரச்சினைகள்

கண்டறியப்படாத மருத்துவ பிரச்சினைகள்

கீட்டோ உணவு முறை நமது சாதாரண உணவுப் பழக்கத்தில் ஓரளவிற்கு மாற்றம் ஏற்படுத்தினாலும், ஒரு சில மருத்துவ பிரச்சினைகள் காரணமாக நாம் கீட்டோ உணவு முறையை தொடரவிடாமல் தடுக்கலாம். அதனால் நமது எடையைக் குறைப்பதில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக ஒருசில உணவுகள் நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஒவ்வாமை செரிமானத்தைத் தடுக்கும். அதனால் உடல் வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கீட்டோ உணவில் ஒவ்வாமை ஏற்பட்டால் அது தைராய்டு பற்றாக்குறையை ஏற்படுத்தும். அதாவது நமது உடல் போதுமான தைராய்டு சுரப்பு நீரை சுரக்கவில்லை என்றால் அது நமது உடலில் வறட்சியை அல்லது சோர்வை ஏற்படுத்தும்.

ஆகவே மேற்கண்ட குறைகளைக் களைந்து முறையாக கீட்டோ உணவு பழக்கத்தைப் பின்பற்றினால் நாம் எதிர்பார்க்கு உடல் எடைக் குறைப்பைச் செய்ய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Not Losing Weight On Keto Diet? You Could Be Making These Mistakes

Not losing weight on keto diet You could be making these mistakes. Read on to know more....
Desktop Bottom Promotion